Pages

13 Feb 2012

Crorepathi

உலகினில் எந்த நாட்டிலும் இல்லாத நிலை Zimbabwe நாட்டில் உள்ளது. அங்கு ஏழை களே இல்லை எனலாம். அந்த அளவிர்க்கு நாட்டினில் பணப் புழக்கம் உள்ளது. உலகின் முதல்  1 ட்ரில்லியன் டாலர் பணம் அங்கு தான் உள்ளது. 



அட ஆமாங்க நாட்டின் தலைவர் ராபர்ட் முகாபயினால் மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதார கொள்கையினால் பணவீக்கத்தின் அளவு விண்ணை தொடும் அளவிற்கு அதிகரித்து 2006 முதல் 2009 வரை காலப்பகுதியில் நடந்த பணவீக்க வெறியாட்டம் தான் இது. இதனால் உலகின் முதல் முதலில் 100 Trillion Dollar பண நோட்டை அச்சடிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டது .

10 மில்லான் ஜிம்பாப்வே டாலர் =  10 அமெரிக்க டாலர்


பணவீக்க காலத்தில் பத்து மில்லியன் Zimbabwe Dollar-க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு வெறும் பத்து டாலராக மட்டுமே காணப்பட்டது .இதனால் மக்கள் தமது அன்றாட தேவைகளை Zimbabwe Dollar கொண்டு எவ்வாறு மேற்கொண்டார்கள் என்று இனி பாப்போம்.

காலை உணவிற்காக பணம் 


100 பில்லியன் டாலரில் மூன்று முட்டை


இதனைக் காணும் போது நாம் பரவா இல்லை. நிம்மதியாக இருக்கலாம். 


விற்பனையில் இமாலய சாதனை படைக்குமா UBISLATE?



Data Wind நிறுவனம் தனது UBISLATE மற்றும் Aakash 7  Tablet-களின் பெயர்களை மாற்றி இருக்கிறது. அதாவது Aakash Tablet UBISLATE  எனவும் UBISLATE -7 மற்றும் UBISLATE 7+ எனவும் பெயர் மாற்றம் பெற்றிருக்கின்றன. இந்த தகவல் Data Wind-ன் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வந்திருக்கிறது. இந்த 2 Tablet-களுமே மாணவர்களுக்காகவே தயாரிக்கப்பட்டவை ஆகும்.

இந்த UBSILATE 7+ Tablet வாங்குவதற்கான விண்ணப்பம் கடந்த மாதம் தொடங்கியது. விண்ணப்பித்தவர்களுக்கு இந்த மாதத்திற்க்குள்ளாகவே இந்த Tablet கிடைத்துவிடும். மேலும் மார்ச் வரை விண்ணப்பிக்கலாம். இந்த UBISLATE 7+ Tablet  Android Gingerbread இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் இந்த Tablet Cortex A8 - 700 MHz Processor, HD வீடியோ கோ ப்ராசஸரையும் கொண்டுள்ளது.
இந்த UBISLATE 7+ Tablet-ன் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது 7.5 x 4.7 x 0.6 inch அளவுள்ள தொடு திரையைக் கொண்டுள்ளது. இதன் WEBCAM 0.3 Mega Pixel HT வசதியுடன் built-in மைக்கையும் கொண்டுள்ளது.

சேமிப்பு வசதியைப் பார்த்தால் இந்த டேப்லெட் ப்ளாஷ் ஈ-ப்ரோம் கொண்டுள்ளது. இது 2 ஜிபி RAM கொண்டிருக்கிறது. மேலும் இதன் சேமிப்பு வசதியை விரிவுபடுத்த microSD மற்றும் ட்ரான்ஸ்ப்ளாஷ் கார்டுகளையும் இந்த Tablet கொண்டிருக்கிறது. அதோடு WiFi மற்றும் HDMI போர்ட்டும் உண்டு. ஆனால் Bluetooth வசதி இந்த Tablet-ல் கிடையாது. மேலும் USB 2.0வைக் கொண்டுள்ளது.
பொதுவான அம்சங்களாகப் பார்த்தால் இந்த Tablet மின்திறனிற்காக 3200 MHz battery கொண்டுள்ளது. இந்த battery  5 மணி நேர இயங்கு நேரத்தை வழங்கும். மேலும் இந்த Tablet-ன் மொத்த பரப்பு 190.5 x 118.5 x 15.7 மிமீ ஆகும். அதோடு இதன் மொத்த எடை 350 கிராம் மட்டுமே. இந்த UBISLATE Tablet LINUX இயங்கு தளத்தில் இயங்குகிறது.

இதன் சந்தை விலை சுமார் 2999/- மட்டுமே. இந்த UBISLATE 7+ Tablet  போல குறைந்த விலையில் எந்த ஒரு Tablet-ம் இதுவரை வரவில்லை. அதனால் இதன் விற்பனை மிக அபாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதை உலகின் மிகக் குறைந்த விலை Tablet என்றும் அழைக்கலாம்.

LED LCD television - Vu 40K21



இது ஒரு 40inch LED LCD தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சி USB, FAT 32,  NTFS driveகாளை கையாளும் தன்மை கொண்டுள்ளது. இதன் மூலமாக AVI, MKV  format அடங்கிய audio files இயக்க முடியும்.
இதன் மூலம் Blu-ray, HD Playback இயக்க முடியும். மேலும் இதன் தெளிவுத்திரன், ஒளி, ஒலி நன்றாக உள்ளது என்று இதன் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.  இதன் சிறப்பு அம்சங்கள் என்று பார்த்தால் 1080p Playback, USB, HDMI port, antenna port, coaxial, USB, 3.5mm headphone jack as well as an AV2 port. இந்த TV Remote இயக்குவதற்க்கு எளிதாக உள்ளது. இதன் சந்தை விலை 40,000/- ரூபாய் மட்டுமே.

கணினியில் உங்களது தகவல்களை பாதுகாப்பதற்கு


எந்த ஒரு மென்பொருளின் துணையும் இல்லாமலேயே உங்கள் ரகசிய கோப்புகள் அடங்கிய கோப்பறைகளை மறைக்கலாம். இதற்கான எளிய வழி ஒன்று உள்ளது.
முதல் வழி: Start==>RUN==>cmd
அதாவது Start பட்டனை அழுத்தி அதில் run என்பதை தேர்ந்தெடுக்கவும். தோன்றும் ரன் window-வில் cmd என்று தட்டச்சிடுங்கள்.

Command Prompt window open ஆகும். அதில் D: என தட்டச்சிடுங்கள். மறைக்க வேண்டிய கோப்பறை உள்ள டிரைவின்(D,E,F) பெயரை உள்ளிடவும்.
E டிரைவில் வைத்திருந்தால் E: என உள்ளிட்டு enter தட்டுங்கள். D என்றால் D: என தட்டச்சிட்டு enter button தட்டுங்கள்.
இப்போது D:/> இவ்வாறு தோன்றும். அதனருகில் இடைவெளி இல்லாமல் attrib +h +s foldername என தட்டச்சு செய்யுங்கள். உதாரணத்திற்கு D:/>attrib +h +s foldername

இங்கு folder name என்பதற்கு பதில் நீங்கள் மறைக்க விரும்பும் கோப்பறையின் பெயரைக் கொடுக்கவும். உதாரணத்திற்கு கோப்பறையின் பெயர் film என இருந்தால் film என type செய்யுங்கள். D:/>attrib +h +s film இவ்வாறு உள்ளிட்டு enter தட்டுங்கள். இப்போது நீங்கள் மறைக்க விரும்பும் கோப்பறை காணாமல் போய் இருக்கும்.

மீண்டும் பெற விரும்பினால் முன்னது போலவே செய்து + குறிக்கு பதில் – குறி இட்டால் போதும்.
அதாவது D:/>attrib -h -s film என்பதை type செய்து enter தட்டினால் மறைந்திருந்த கோப்பறை உடனே கண்ணுக்குத் தெரியும்.