முதல் வழி: Start==>RUN==>cmd
அதாவது Start பட்டனை அழுத்தி அதில் run என்பதை தேர்ந்தெடுக்கவும். தோன்றும் ரன் window-வில் cmd என்று தட்டச்சிடுங்கள்.
Command Prompt window open ஆகும். அதில் D: என தட்டச்சிடுங்கள். மறைக்க வேண்டிய கோப்பறை உள்ள டிரைவின்(D,E,F) பெயரை உள்ளிடவும்.
E டிரைவில் வைத்திருந்தால் E: என உள்ளிட்டு enter தட்டுங்கள். D என்றால் D: என தட்டச்சிட்டு enter button தட்டுங்கள்.
இப்போது D:/> இவ்வாறு தோன்றும். அதனருகில் இடைவெளி இல்லாமல் attrib +h +s foldername என தட்டச்சு செய்யுங்கள். உதாரணத்திற்கு D:/>attrib +h +s foldername
இங்கு folder name என்பதற்கு பதில் நீங்கள் மறைக்க விரும்பும் கோப்பறையின் பெயரைக் கொடுக்கவும். உதாரணத்திற்கு கோப்பறையின் பெயர் film என இருந்தால் film என type செய்யுங்கள். D:/>attrib +h +s film இவ்வாறு உள்ளிட்டு enter தட்டுங்கள். இப்போது நீங்கள் மறைக்க விரும்பும் கோப்பறை காணாமல் போய் இருக்கும்.
மீண்டும் பெற விரும்பினால் முன்னது போலவே செய்து + குறிக்கு பதில் – குறி இட்டால் போதும்.
அதாவது D:/>attrib -h -s film என்பதை type செய்து enter தட்டினால் மறைந்திருந்த கோப்பறை உடனே கண்ணுக்குத் தெரியும்.
No comments:
Post a Comment