Pages

20 Jan 2012

கடவுச்சொல்லுடன் கூடிய மின்னஞ்சலை அனுப்புவதற்கு ஒரு தளம்

மின்னஞ்சல் (E-Mail) அனுப்ப பல்வேறு தளங்கள் உதவி செய்கிறன. அதில் மிகவும் பிரபலமான தளங்கள் Yahoo, GMail, HotMail ஆகும்.இவற்றின் மூலம் அனுப்பபடும் மின்னஞ்சல்களை நாம் சாதாரணமாக open செய்து பார்க்க முடியும். இதற்கு உரிய பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல் இருந்தால் போதுமானது.

நாம் word, pdf மற்றும் ஒரு சில கோப்புகளை காப்பதற்காக கடவுச்சொல்லுடன் (password) உருவாக்குவோம். இவ்வாறு உருவாக்கும் கோப்புகளை கடவுச்சொல் இருந்தால் மட்டுமே open செய்ய முடியும்.

இதனால் அவற்றில் உள்ள தகவல்கள் திருட வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் கடவுச்சொல் இல்லாமல் உள்ள கோப்புகளை மிகவும் எளிமையாக மற்றவர்களால் பார்க்கவோ அல்லது திருடிவிடவோ முடியும். இதுபோல் நாம் அனுப்பும் மின்னஞ்சல் ஒவ்வொன்றுக்கும் கடவுச்சொல் தந்தால்  எவ்வாறு இருக்கும். இதற்கு LOCKBIN என்னும் தளம் உதவி செய்கிறது.

http://www.lockbin.com/lockbin.php  தளத்திற்கு செல்லவும். அங்கு தோன்றும் window-வில் உங்களுடைய பெயர், உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல் போன்றவற்றை உள்ளிடவும்.



பின் நீங்கள் குறிப்பிட வேண்டிய செய்தியை தட்டச்சு செய்து பின் வேண்டிய கோப்பினை பதிவேற்றம் செய்து மேலும் CAPTCHA கோடினை உள்ளிட்டு இறுதியாக ஒப்பந்த check box-ல் Tick செய்து SUBMIT button அழுத்தவும். உங்களுடைய மின்னஞ்சல் நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு சென்றுவிடும்.



உங்களுடைய நண்பர் அந்த மின்னஞ்சலை open  செய்யும் போது ஒரு window open ஆகும். நீங்கள் கொடுத்த கடவுச்சொல்லை உள்ளிடுவதன் மூலமாக உங்களுடைய நண்பர் அந்த மின்னஞ்சல் தகவலை பெற்றுக்கொள்வார்கள். இவ்வாறு உங்கள் தகவல் உங்கள் நண்பர்களுக்கு மிகவும் பாதுகாப்பாக சென்றடையும்.

புகைப்படங்களின் அளவைக் குறைப்பதற்கு



நாம் cameraவில் எடுக்கும் புகைப்படங்களின் அளவானது பெரும்பாலான வேளைகளில் அதிகமாகவே காணப்படும். இதனால் அப்படங்களை நாம் pendriveவில் எடுத்துச்செல்ல அதன் கொள்ளளவு போதுமானதாக இருக்காது. அதே நேரம் கணினியில் சேமித்து வைப்பதாயின் வன்தட்டிலும் அதிக இடத்தைப் பிடிக்கும். எனவே புகைப்படங்களின் கொள்ளளவை குறைத்து சேமித்துக் கொள்வதன் மூலமே அதிக இட ஒதுக்கீட்டைத் தவிர்த்துக் கொள்ளலாம். இதனை பல வழிகளில் செய்து கொள்ளலாம்.


1. Paint ஐப் பயன்படுத்துதல்:
Paint ஐத் திறந்து பயன்படுத்திக் கொள்ள [Start--> All Programs --> Accessories --> Paint ]
இதிலே File இனுள் Open என்பதன் மூலம் நீங்கள் அளவைக் குறைக்க எண்ணும் படத்தை திறந்துகொள்ளுங்கள்.

பின்னர் திறந்து கொண்ட படத்தினை சேமிக்க(Save) வேண்டியதுதான்.[Ctrl +S]
இப்பொழுது உங்கள் படத்தின் அளவு குறைக்கப்பட்டுவிடும். ஆனால் அதிகளவான படங்களை செய்வது மிகுந்த சிரமமாயிருக்கும். ஏனெனில் ஒவ்வொரு படமாகவே செய்துகொள்ள வேண்டும்.

2. MS OFFICE Picture Manager ஐப் பயன்படுத்தல்:

இதனைத் திறந்து பயன்படுத்திக் கொள்ள [ Start --> All Programs --> Microsoft Office --> Microsoft Office 2010 Tool--> Microsoft Office Picture Manager ]

இப்பொழுது Microsoft Office Picture Manager வலப்பக்கத்தில் “Add a new picture shortcut” என்பதை click செய்யவும்.

இப்பொழுது தோன்றும் windowவில் உங்கள் புகைப்படங்கள் உள்ள Folderஐத் தெரிவுசெய்து “Add” என்பதை click செய்யவும்.

இப்பொழுது அனைத்து புகைப்படங்களும் தோன்றும்.
“Ctrl + A” ஐக் கொடுத்து அனைத்து புகைப்படங்களையும் தெரிவு செய்து “Edit Pictures” என்பதை click செய்யவும்.

இதிலே “Resize” என்பதைக் கொடுக்கவும். பின்னர் “Document-Large (1024x768px)” என்பதை தெரிவுசெய்து OK பண்ணவும். பின் படத்தை சேமித்துக் கொள்ளவும்.
உங்கள் புகைப்படங்களின் கொள்ளளவு குறைக்கப்பட்டு சேமிக்கப்படும்.  சேமித்து முடிந்ததும் Microsoft Office Picture Manager-ஐ மூடிக்கொள்ளவும். அவ்வளவுதான் உங்கள் புகைப்படங்களின் அளவு குறைக்கப்பட்டுவிடும்.




செவ்வாய் கிரகத்தில் எதிர்பார்த்ததை விட 100 மடங்கு அதிகம் தண்ணீர் இருப்பதாக விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி மற்றும் சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள் குழுவினர் “சிவப்பு கிரகம்” என அழைக்கப்படும் செவ்வாய் கிரகம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த கிரகத்தின் காற்று மண்டலத்தில் உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்தனர். அவை ஓரளவு தான் உள்ளது என விஞ்ஞானிகள் கணித்து இருந்தனர்.

ஆனால் தற்போது செவ்வாய் கிரகத்தின் காற்று மண்டலத்தில் அவை ஆவி நிலையில் பறந்து விரிந்து கிடக்கிறது. துகள்கள் மற்றும் தூசிகள் போன்று காற்றில் மிதக்கின்றன.அவை காற்று மண்டலத்தில் ஆங்காங்கே மேக கூட்டம் போன்று இருக்கின்றன. எனவே செவ்வாய் கிரகத்தில் எங்கும் தண்ணீர் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.முன்பு கணித்ததை விட 100 மடங்கு அதிகம் தண்ணீர் இருப்பதாக தற்போது அறிவித்துள்ளனர். இந்த ஆய்வை சிப்காம் என்ற கருவியின் மூலம் நடத்தி தண்ணீர் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.