Pages

15 Feb 2012

வேற்று கிரக மனிதர்களை அமெரிக்க அதிபர் சந்தித்தாரா?



வேற்று கிரகங்களில் வாழும் மனிதர்களை அமெரிக்க அதிபர் சந்தித்த செய்தி தற்பொழுது வெளியாகி உள்ளது.உலகம் முழுவதும் நம்பப்படும் செய்தி வேற்று கிரகத்தில் மனிதர்கள் உள்ளனர் என்பதுதான்.
உலகம் முழுவதும் நம்பப்படும் செய்தி வேற்று கிரகத்தில் மனிதர்கள் உள்ளனர் என்பதுதான். உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே வேற்று கிரக மனிதர்களோ அல்லது அவர்கள் பறந்து செல்லும் தட்டு தென்பட்டதாக செய்திகள் வரும். ஆனால் இன்று வரை அந்த செய்திகள் உறுதிபடுத்தப்படவில்லை. இந்நிலையில் பிபிசி 2 கரண்ட் அபையர்ஸ் இல் பங்கேற்று, அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினரும் பென்டகனின் ஆலேசாகருமான பணிபுரிந்த குட் பேசுகையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிவைட் டி ஐசனோவர் வேற்று கிரக மனிதர்களை மூன்று முறை சந்தித்தார் என்று கூறினார்.
எப்பிஐ அதிகாரிகள் டெலிபதி தகவல் பரிமாற்ற முறை மூலம் வேற்று கிரக மனிதர்களை தொடர்பு கொண்டதாகவும், அதனை ஏற்ற வேற்று கிரக மனிதர்கள் அமெரிக்காவின் அன்றைய அதிபர் டிவைட் டி ஐசனோவரை கடந்த 1954ம் ஆண்டு அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஹோல்மென் ராணுவ விமான தளத்தில் மூன்றுமுறை சந்தித்தனர் என கூறினார். இந்த சந்திப்பை கண்டதற்கான பல சாட்சிகள் உள்ளன எனவும் கூறியுள்ளார்.
வேற்று கிரக மனிதர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மனிதர்களை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்த தகவல் இதுவரை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறினார். ஆனால் குட் இன் இந்த பேச்சை அமெரிக்க அதிகாரிகள் இதுவரை மறுக்கவில்லை. இதன்மூலம் வேற்று கிரக வாசிகள் உள்ளனர் என்ற செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.

புலிகள் முற்றிலும் அழிந்துவிடும் நிலை - விலங்கியல் நிபுணர்கள் எச்சரிக்கை



உலகம் முழுவதும் புலிகளை வேட்டையாடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் புலிகள் இனமே முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே புலிகளை காப்பாற்றுவது தொடர்பாக தாய்லாந்து தலைநகரம் பாங்காங்கில் சர்வதேச மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட விலங்கியல் நிபுணர்கள் இப்போது போல புலிகளை வேட்டையாடுவது தொடர்ந்து நீடித்தால் இன்னும் 20 ஆண்டில் புலிகள் இனமே முற்றிலும் அழிந்து விடும் என்று அவர்கள் கூறினார்கள்.
தற்போது உலகம்  முழுவதும் 4 ஆயிரம் புலிகள் மட்டுமே உள்ளன. இதை காப்பாற்ற புலிகள் உள்ள அனைத்து நாடுகளும் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே  அவற்றை காப்பாற்ற முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர். 100 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் 1 லட்சம் புலிகள் இருந்துள்ளன. மருந்துக்காகவும் மற்ற தேவைகளுக்காகவும் புலிகள் வேட்டையாடப்பட்டதால் புலிகள் எண்ணிக்கை 4 ஆயிரமாக குறைந்து உள்ளது.

தகவல்கள் சில



இரு கண்களுக்கு நடுவினில் நெற்றி பொட்டில் அவ்வப்போது விரல்களால் அழுதுவதால் நமக்கு நினைவற்றால் கூடும். மறந்து போன விசயங்களை நினைவினில் கொண்டுவர இது உதவும். நினைவற்றலுக்கான சக்தி இங்கு தான் உள்ளது.


வலது கைப்பழக்கம் உள்ளவர் என்றால் சாப்பிடும்போது வாயின் வலது புறத்தில்தான் உணவை மென்று சுவைத்துச் சாப்பிடுவார்கள். அதே சமயம் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சாப்பிடும்போது வாயின் இடது புறத்தை உபயோகித்து உணவை ருசிப்பது வழக்கம்.

கணினியில் இயங்கும் புதிய மசாஜ் கருவி


சிறந்த மசாஜ் கருவிகளை அறிமுகப்படுத்தும் OSIM நிறுவனமானது கணினியில் இயங்கும் ஆற்றலைக் கொண்ட EMS (Electronic Muscle Stimulation) எனப்படும் புதிய மசாஜ் கருவியை அறிமுகம் செய்துள்ளது.
இக்கருவியினை USB முறையில் கணினியுடன் இணைத்து பயன்படுத்த முடியும். அத்துடன் இக்கருவியினை இயக்குவதற்கு பிரத்தியேகமான மென்பொருளும் காணப்படுகின்றது.
எனினும் மசாஜின் தன்மையை Music Player கொண்டு அதன் சந்தத்திற்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.
நாம் கணினியில் வேலை செய்துகொண்டிருக்கும் போதே குறித்த கருவியினை இணைத்துவிட்டால் அது தானாகவ மசாஜ் செய்யும் என்பது கூடுதல் தகவலாகும். இதன் விலை 170 அமெரிக்க Dollar-கள் இந்திய ரூபாயில் சுமார் 8500 ஆகும்.

விரைவில் Apple iPad 3


Apple நிறுவனத்தின் iPad 3 வரும் மார்ச் மாதம் அறிமுகமாகிறது. இதனால் சந்தையில் இப்போதே களைகட்டுகிறது.
San francisco - வில் உள்ள எர்பா பியூனா கலை மையத்தில் ஆப்பிள் iPad 3 அறிமுகம் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த ஒரு பெரிய நிகழ்வையும் ஆப்பிள் இந்த மையத்தில்தான் வழக்கமாக நடத்தும்.
ஆனால் எந்த தேதியில் இந்த அறிமுகம் நடக்க இருக்கிறது என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. அறிவிப்பு வெளியான அடுத்த வாரமே iPad 3 விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.
இந்த iPad 3 அடுத்த தலைமுறைக்கான iPad-ஆக இருக்கும் என்ற எண்ணற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய iPad ஆப்பிள் iPad 2வைப் போல் இருந்தாலும் இதன் வேகம் 2வை விட அதிகமாக இருக்கும். அதற்கான மேம்படுத்தப்பட்ட processing unit மற்றும் 2048×1536 ரெட்டினா display போன்ற அம்சங்கள் இந்த iPad 3ல் உள்ளன.
2011 iPad 2ன் ஆண்டு என்றால் 2012 iPad 3-ன் ஆண்டாக இருக்குமா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது. ஆனால், ஆப்பிள் iPad- 3 குறித்து ஆப்பிள் இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் எதையும் வெளியிடப்படவில்லை.
ஆனால் இந்த கேள்விகள் மற்றும் வதந்திகளுக்கெல்லாம் ஆப்பிள் பதில் சொல்லாது என்று ஆப்பிளின் அதிகாரி தெரிவித்திருக்கிறார். எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விரைவில் ஆப்பிள் iPad 3 வந்துவிடும் என நம்புவோமாக.

HP Probook 6560b



HP Laptops உலக அளவில் அதிகமாக விற்பனையாகும் Laptop ஒன்றாகும். அதற்கு காரணம் அவற்றினுடைய உயர் தரமும் அதே நேர்த்தில் அதன் அபாரமான செயல் திறனும் ஆகும். தற்போது HP Probook வரிசையில் புதிதாக HP Probook 6560b என்ற புதிய Laptop  களமிறக்குகிறது HP நிறுவனம்.
இந்த Probook 6560b Laptop-ன் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது Intel® Core™ i5-2520M dual-core processor கொண்டிருக்கிறது. இதன் chipset Intel HM65 ஆகும். மேலும் இதில் இன்டல் HD Graphics 3000 யூனிட்டும் உண்டு.
இதன் display பார்த்தால் இது 15.6 inch அளவு கொண்டு LED backlit anti-glare வசதியைக் கொண்டுள்ளது. இந்த display resolution 1366 x 768 pixels ஆகும். அதுபோல் இது 320 GB SATA HDD சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கிறது.
இணைப்பு வசதிக்காக இந்த Laptop WiFi, Bluetooth, HDMI, Gigabit Ethernet, RJ 45 LAN மற்றும் 3 USB போர்ட்டுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் battery 6 செல் கொண்ட Lithium Ion battery ஆகும்.
இந்த ப்ரோபுக் லேப்டாப் 2 மெகா பிக்சல் கொண்ட முகப்பு Web Camera கொண்டுள்ளது. அதனால் வீடியோ குழு உரையாடலை மிக அருமையாகச் செய்ய முடியும். இந்த Probook 650b Laptop-ன் விலை ரூ.53,071 ஆகும்.