Pages

15 Feb 2012

புலிகள் முற்றிலும் அழிந்துவிடும் நிலை - விலங்கியல் நிபுணர்கள் எச்சரிக்கை



உலகம் முழுவதும் புலிகளை வேட்டையாடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் புலிகள் இனமே முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே புலிகளை காப்பாற்றுவது தொடர்பாக தாய்லாந்து தலைநகரம் பாங்காங்கில் சர்வதேச மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட விலங்கியல் நிபுணர்கள் இப்போது போல புலிகளை வேட்டையாடுவது தொடர்ந்து நீடித்தால் இன்னும் 20 ஆண்டில் புலிகள் இனமே முற்றிலும் அழிந்து விடும் என்று அவர்கள் கூறினார்கள்.
தற்போது உலகம்  முழுவதும் 4 ஆயிரம் புலிகள் மட்டுமே உள்ளன. இதை காப்பாற்ற புலிகள் உள்ள அனைத்து நாடுகளும் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே  அவற்றை காப்பாற்ற முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர். 100 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் 1 லட்சம் புலிகள் இருந்துள்ளன. மருந்துக்காகவும் மற்ற தேவைகளுக்காகவும் புலிகள் வேட்டையாடப்பட்டதால் புலிகள் எண்ணிக்கை 4 ஆயிரமாக குறைந்து உள்ளது.

No comments:

Post a Comment