Pages

12 Feb 2012

Photoshop மென்பொருளை போன்ற இலவச மென்பொருள்


போட்டோக்களை அழகாக எடிட் செய்ய உதவும் மென்பொருள் Photoshop ஆகும். ஆனால் Photoshop மென்பொருள் இலவசமல்ல. காசு கொடுத்து வாங்க வேண்டும். இதனால் பெரும்பாலானவர்கள் Photoshop மென்பொருளை crack செய்து உபயோகிக்கின்றனர். அதில் நீங்களும் ஒருவர் என்றால் இனி கவலையை விடுங்கள் Photoshop போன்றே அதே சமயம் 100% இலவசமாக ஒரு மென்பொருள் Gimp ஆகும். இந்த மென்பொருளில் Photoshop-ல் உள்ள 90% சதவீத வசதிகள் இதில் உள்ளது. இன்னும் சொல்ல போனால் Photoshop-ல் இல்லாத ஒரு சில வசதிகளும் இந்த Gimp மென்பொருளில் இருக்கிறது. இவ்வளவு வசதிகள் இருந்தும் இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது.   இந்த மென்பொருளின் புதிய பதிப்பான GIMP 2.6.12 வெளிவந்துள்ளது.


சிறப்பம்சங்கள்:
  • இந்த மென்பொருளை உபயோகிப்பது மிக சுலபம். சாதரணமாக Ms paint உபயோகிப்பது போல இருக்கும்.
  • TIFF, JPEG, GIF, PNG, PSD போன்ற image format-களுக்கு support செய்கிறது.
  • முற்றிலும் இலவசமான மென்பொருள்.
  • மென்பொருள் இயங்க Photoshop போன்று கணினியில் அதிக இடம் எடுத்துக் கொள்ளாது. ஆகவே இதனை உபயோகிக்கும் பொழுது உங்கள் கணினியின் வேகம் குறைவதில்லை.
  • போட்டோக்களை சுலபமாக உயர்தரத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
  • Linux, Mac, Windows போன்ற கணினிகளில் இயங்கக் கூடியது.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - http://sourceforge.net/projects/gimp-win/
இந்த மென்பொருளின் பயனர் கையேடு(Users Manual) டவுன்லோட் செய்ய - http://sourceforge.net/projects/gimp-win/files/GIMP%20Help%202/GIMP%20Help%202.6.0%20%28updated%20installer%29/gimp-help-2-2.6.0-en-setup.exe/download

Intex Avatar 3D touch phone



Intex நிறுவனம் 3D தொழில்நுட்பம் கொண்ட தொடுத்திரை கைப்பேசியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதற்க்கு Intex Avatar என பெயரிட்டு உள்ளனர். இந்த மொபைல் dual SIM (GSM-GSM) கொண்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் என்று பார்த்தால் 2.8-inch stereoscopic display, 4GB, microSD card, 2 MP camera with LED Flash, விளையாட்டுக்கள் என்று பார்த்தால் Crazy Birds, Fruit Ninja, Pentachess, Call of Atlantis, and Yumsters, மற்றும் apps of Google, MSN, Yahoo and Facebook கொண்டுள்ளது. இதன் சந்தை விலை ரூபாய் 3,690/- மட்டுமே.