'வரும் முன் காப்போம்' இதனை நம் மனதினில் கொண்டால் நம் வாழ்க்கையில் பல இன்னல்களை சமாளிக்கலாம். சரி எவ்வாறு பண நெருக்கடியை சமாளிக்கலாம் என்று இனி பார்ப்போம்:
சேமிப்பு:
உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்து வந்தால் பண நெருக்கடி வரும் சமயம் உங்களுக்கு அந்த சேமிப்புத் தொகை கை கொடுக்கும்.
காப்பீடு:
காப்பீடு என்பது இன்றைய அவசிய தேவையாகும். ஆயுள் காப்பீடு நீங்கள் செய்து வைத்திருந்தால் குடும்பத்தில் இடர் நேரும் சமயம் அந்த காப்பீடு உங்கள் குடும்பத்தை காக்கும்.
மருத்துவ காப்பீடு:
நமது உணவுப் பழக்கவழக்கம் மாறியுள்ளது. இதனால் இன்று பல நோய்கள் நம்மை தாக்குகின்றன. மருத்துவ செலவும் கூடிக்கொண்டேயுள்ளது. இதில் இருந்து தப்பிக்க ஒரே வழி மருத்துவ காப்பீடு. ஆகவே தான் அரசாங்கம் காப்பீடின் அவசியத்தை விளம்பரம் செய்கின்றது.
தேவையில்லாமல் கடன் வாங்குவது:
இன்று சிலர் தேவையில்லாமல் கடன் வாங்குகின்றனர். இது அவர்கள் வாழ்க்கையில் பல இன்னல்களை ஏற்படுத்திவிடுகிறது. தேவையற்ற பொருட்களை வாங்காதீர்கள். கவர்ச்சி விளம்பரங்களை கண்டு ஏமாறாமல் இருங்கள்.
திட்டமிடல்:
உங்கள் வருமானத்தை நன்கு திட்டமிட்டு சேமிப்பு மற்றும் செலவு செய்தால் மட்டுமே நீங்கள் சீரான வாழ்க்கையை வாழமுடியும்.
அவசர கால நிதி:
உங்கள் சேமிப்பில் அவசர கால நிதி என்று ஒன்றை ஏற்படுத்துங்கள். அதனை வங்கியிலோ, அரசாங்க பத்திரங்களிலோ அல்லது பரஸ்பர நிதியங்களிலோ முதலீடு செய்யலாம்.
மேலே கூறியவற்றை உங்கள் வாழ்வினில் கடைப்பிடித்து வந்தால் எதாவது அவசர தேவைகள் ஏற்படும் சமயம் நீங்கள் அதனை எளிதாக சமாளிக்கலாம். உங்கள் வாழ்க்கை வளம் பெற வாழ்த்துக்கள்.