Pages

25 Jan 2012

4 மடங்கு அதி வேகத்துடன் புதிய Fujitsu Tablet



 Los Vegas-ல் நுகர்வோர் மின்னனுபொருள் கண்காட்சி சிறப்பான முறையில் நடைபெற்றது. ஏராளமான நிறுவனங்கள் தங்களது புதிய gadget-களை அறிமுகப்படுத்தி அமர்க்களப்படுத்தினர். இந்த கண்காட்சி முடிந்த பிறகும் பல நிறுவனங்கள் தங்களது புதிய டிவைஸ்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் Fujitsu நிறுவனம் தனது புதிய Tablet-ஐ இப்போது அறிவித்திருக்கிறது. அந்த Tablet-ன் பெயர் Fujitsu Stylistic M532 ஆகும். இந்த Tablet 1280 X 800 Pixel resolution, 10.1 inch display, 8 Mega Pixel கொண்ட பின்பக்க கேமராவும் 3 Mega Pixel கொண்ட முகப்பு கேமராவும் கொண்டிருக்கிறது. சேமிப்பு வசதியைப் பார்த்தால் 16 GB internal சேமிப்பைக் கொண்டுள்ளது. அதோடு இதன் processor 3 Tegra Silicon Processor ஆகும்.

இதன் கடிகார வேகம் 2ஜிஹெர்ட்ஸாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதனால் இதன் வேகம் single core processor-ன் வேகத்தைவிட 4 மடங்கு அதிகமாக இருக்கும். அதனால் multimedia editing வேலைகளை இந்த Tablet-ல் மிக எளிதாக அதே நேரத்தில் விரைவாக செய்ய முடியும்.
இந்த Tablet-ன் முன்புறம் திரை இருக்கிறது. Video calling செய்யக் கூடிய முகப்பு கேமரா இதன் உச்சியில் உள்ளது.இதன் முக்கிய கேமரா LED flash வசதியைக் கொண்டிருக்கிறது. இதன் பக்கவாட்டில் USB போர்ட்டுகள் உள்ளன. இதனை இயக்குவதும் மிக எளிதாக இருக்கும். விலையைப் பார்த்தால் இந்த Tablet ரூ.34,000க்கு கிடைக்கும்.

Windows 7 Themes இலவசமாக பதிவிறக்கம் செய்ய



நீங்கள் பயன்படுத்தும் கணினியின் தீம்களை(Theme) பயன்படுத்தி விதவிதமான தோற்றத்தில் வடிவமைக்கலாம் என்பது யாவரும் அறிந்த ஒன்று.

Windows 7 உடன் வரும் தீம்கள் குறிப்பிட்ட அளவே காணப்படுகின்றன. இதனால் அந்த தீம்களை அடிக்கடி மாற்றி உங்களுக்கு சலித்திருக்கும். உங்கள் சலிப்பை போக்குவதற்காக Microsoft நிறுவனம் புதிய பல தீம்களை இலவசமாக தரவிறக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
கீழுள்ள இணைப்பில் அழுத்துவதன் மூலம் குறித்த தளத்திற்கு சென்று உங்களுக்கு விருப்பமான ஒன்றை தெரிவு செய்து Download என்ற இணைப்பை அழுத்துவதன் மூலம் கணினியில் சேமித்து பின் வழக்கமான முறையில் உங்கள் கணினியின் தோற்றத்தை மாற்றிக் கொள்ளலாம்.

கைபேசி வழியாக பணம் செலுத்தும் புதிய தொழில்நுட்பம்



கடந்தாண்டில் கைபேசிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் தொழில்நுட்பம் Near Field Communication என்பதாகும். கைபேசிகளை பயன்படுத்தி நாம் பணம் செலுத்த இந்த தொழில்நுட்பம் வழி செய்கிறது.

2011ஆம் ஆண்டில் கைபேசியின் பயன்பாட்டில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றமாக இதனை வல்லுநர்கள் கருதுகின்றனர். அந்த வகையில் இந்த வசதியுடன் கூடிய 3 கோடியே 50 லட்சம் போன்கள் விற்பனையாகியுள்ளதாக ஐ.எம்.எஸ் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டில் இது 8 கோடியாக உயரும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில் பல நிறுவனங்கள் குறிப்பாக Samsung, RIM, Nokia மற்றும் HTC இந்த வசதியுடன் கைபேசிகளை வடிவமைத்துத் தந்துள்ளன. நவீன தொழில்நுட்பத்தை அமுல்படுத்துவதில் முன்னிலையில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் இந்த வசதியுடன் கூடிய கைபேசிகளை இன்னும் அறிமுகம் செய்திடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
4 அங்குல இடைவெளியில் இரண்டு சாதனங்கள், அவற்றை அசைப்பதின் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள இந்த தொழில் நுட்பம் வசதி தருகிறது.

தற்போது லண்டன் நகரில் ட்ரான்ஸ்போர்ட் கார்ட்கள் மூலம் இந்த வசதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொருட்களை விற்பனை செய்திடும் கடைகளில் உள்ள சிறிய டெர்மினல் முன்னால் செலுத்த வேண்டிய பணத்தை கைபேசியில் குறிப்பிட்டு சற்று அசைத்தால் செலுத்தப்பட வேண்டிய பணம் குறித்த தகவல் பரிமாறிக் கொள்ளப்பட்டு பணம் கடைக்காரரின் வங்கிக் கணக்கில் சேர்ந்து விடுகிறது. இதற்கு கைபேசி வைத்திருப்பவர் முதலில் தன் பணத்தை இதற்கான கணக்கில் செலுத்தி வைத்திருக்க வேண்டும்.

உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் வெங்காயம்





தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நல்ல தூக்கம் வரும்.

சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் டான்சில் வியாதிக்கு ஒரு சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி சிறிது உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு, குளிர்ந்த தண்ணீரைச் சாப்பிடச் செய்வதன் மூலம் ஓரளவு குணம் கிடைக்கும்.
காது வலிக்கு வெங்காயத்தை நறுக்கி அதன் உள்ளே உள்ள குருத்தை இடித்துப் பிழிந்த சாறைச் சில துளிகள் எடுத்து லேசாகச் சுட வைத்து காதில் விட்டால் வலி, குத்தல் நிற்கும்.

அஜீரணத்தால் வாந்தி, பேதி அடிக்கடி மணிக்கு ஒரு தடவை உண்டானால் வெங்காயச்சாறு அரை அவுன்ஸ் வீதம் குளிர்ந்த நீரில் கலந்து அடிக்கடி கொடுத்துவர மப்பு குறைந்து ஜீரண சக்தி உண்டாகி வாந்தி, பேதி நிற்கும்.
விஷப்பூச்சிகளால் உண்டான வாந்திபேதியில் ஆரம்பத்திலேயே வெங்காயச்சாறு ஒவ்வொரு அவுன்ஸும், 2, 3 சிட்டிகை பெருங்காயத் தூளும் கலந்து அரை மணிக்கு ஒரு தடவை கொடுக்க குணமாகும். இந்த நிலையில் கை, கால் குளிர்ந்து ஜில்லிப்புடன் காணப்பட்டால் வெங்காயத்தின் சாற்றையே பாதங்களிலும் உள்ளங்கைகளிலும் தடவி சூடு வரும்படி தேய்க்க வேண்டும்.
தோல் நீக்கிய வெங்காயத்தைச் சிறு துண்டாக நறுக்கி குளிர்ந்த நீரில் நான்கு அல்லது ஐந்து தடவை அலம்பி தயிர் சேர்த்து தினம் மூன்று முறை உட்கொள்ள வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

மூக்கிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படும்போது வெங்காயத்தைக் கசக்கி முகர்ந்தால் உடன் ரத்தக்கசிவு நிற்கும். வெங்காயச்சாறு அல்லது வெங்காயச்சாறும் நல்லெண்ணெயும் சம அளவு கலக்கி அதன் சில துளிகளையாவது வலிக்கும் சொத்தைப் பற்களில் வைத்தால் சிறிது நேரத்தில் பூச்சிகளும் இறந்து வலியும் நின்றுவிடும்.

வெங்காயச்சாறு அரை அவுன்ஸும், சுத்தமான தேன் கால் அவுன்ஸும் கலந்து காலை, மாலை 2 வேளை வீதம் 25 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களுக்கு வீர்யம் அதிகரிக்கும்.