Pages

2 Jan 2018

சீனாவின் முதல் சோலார் அதிவேக நெடுஞ்சாலை

சீனா ஜினான் ரிங் அதிவேக நெடுஞ்சாலையில் தனது முதல் சோலார் அதிவேக நெடுஞ்சாலையில் நிர்மாணித்து அதன் சோதனை ஓட்டம் கடந்த வியாழக்கிழமை வெற்றிகரமாக முடிந்தது.  800 கிலோவாட் திறன் கொண்ட இந்த  சோலார் அதிவேக நெடுஞ்சாலை 2 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஜினான் சிட்டியில் 160 மீட்டர் சோலார் ரோடு போடப்பட்டு 2017ம் ஆண்டு சோதனை செய்யப்பட்டது.

2014ம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் சோலார் பேனல் பொருத்திய இரு சக்கர மோட்டார் வாகன பாதை அமைக்கப்பட்டு சோதனை செய்தனர். 2016ல் பிரான்சு 1 கிலோமீட்டர் நீளமுள்ள சோலார் ரோடு அமைத்தது. தொடர்ந்து சோதனைகள் வெற்றி பெற்றால் சோலார் ரோடுகள் உலகெங்கும் நிர்மாணிக்கப்படும். இதன் மூலம் பெட்ரோல் வாகனங்களின் உபயோகம் குறைந்து ஆயிரக்கணக்கான மினசார வாகனங்கள் உலகெங்கும் பெருகும். நச்சு புகைகள் பெருமளவு குறையவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

       

19 Dec 2017

இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆலை


நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆலையை கேரள மாநிலம் வயநாட்டில் (Waynad) உள்ள பனசுரா சாகர் நீர்த்தேக்கத்தில் கேரள மின்சார வாரியம் நிர்மாணித்துள்ளது. 500 கிலோவாட் திறன் கொண்ட இந்த மிதக்கும் சூரிய ஆலை நிர்மாணிக்க 9.25 கோடி ரூபாய் செலவானது. 6000 சதுர மீட்டர் பரப்பளவில் 18 நடைமேடைகளில் 1938 சூரிய தகடுகளை   பொறுத்தியுள்ளார்கள். இந்த சூரிய அலை  மூலம் காற்று மாசு குறையும்.  கேரள மின்சார வாரியம் போல நாட்டின் அனைத்து மின்சார வாரியங்களும் தொடர்ந்து சூரிய அலைகளை நிறுவினால் காற்று மாசுவுக்கு முடிவு கட்டி நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.   

18 Dec 2017

பண நெருக்கடி சமாளிக்க சில டிப்ஸ்

'வரும் முன் காப்போம்' இதனை நம் மனதினில் கொண்டால் நம் வாழ்க்கையில் பல இன்னல்களை சமாளிக்கலாம். சரி எவ்வாறு பண நெருக்கடியை சமாளிக்கலாம் என்று இனி பார்ப்போம்:

சேமிப்பு:
உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்து வந்தால் பண நெருக்கடி வரும் சமயம் உங்களுக்கு அந்த சேமிப்புத் தொகை கை கொடுக்கும்.

காப்பீடு:
காப்பீடு என்பது இன்றைய அவசிய தேவையாகும். ஆயுள் காப்பீடு நீங்கள் செய்து வைத்திருந்தால் குடும்பத்தில் இடர் நேரும் சமயம் அந்த காப்பீடு உங்கள் குடும்பத்தை காக்கும்.

மருத்துவ காப்பீடு:
நமது உணவுப் பழக்கவழக்கம் மாறியுள்ளது. இதனால் இன்று பல நோய்கள் நம்மை தாக்குகின்றன. மருத்துவ செலவும் கூடிக்கொண்டேயுள்ளது. இதில் இருந்து தப்பிக்க ஒரே வழி மருத்துவ காப்பீடு. ஆகவே தான் அரசாங்கம் காப்பீடின் அவசியத்தை விளம்பரம் செய்கின்றது.

தேவையில்லாமல் கடன் வாங்குவது:
இன்று சிலர் தேவையில்லாமல் கடன் வாங்குகின்றனர்.  இது அவர்கள் வாழ்க்கையில் பல இன்னல்களை ஏற்படுத்திவிடுகிறது. தேவையற்ற பொருட்களை வாங்காதீர்கள். கவர்ச்சி விளம்பரங்களை கண்டு ஏமாறாமல் இருங்கள்.


திட்டமிடல்:
உங்கள் வருமானத்தை நன்கு திட்டமிட்டு சேமிப்பு மற்றும் செலவு செய்தால் மட்டுமே நீங்கள் சீரான வாழ்க்கையை வாழமுடியும்.

அவசர கால நிதி:
உங்கள் சேமிப்பில் அவசர கால நிதி என்று ஒன்றை ஏற்படுத்துங்கள். அதனை வங்கியிலோ, அரசாங்க  பத்திரங்களிலோ  அல்லது பரஸ்பர நிதியங்களிலோ முதலீடு செய்யலாம்.

மேலே கூறியவற்றை உங்கள் வாழ்வினில் கடைப்பிடித்து வந்தால் எதாவது அவசர தேவைகள் ஏற்படும் சமயம் நீங்கள் அதனை எளிதாக சமாளிக்கலாம். உங்கள் வாழ்க்கை வளம் பெற வாழ்த்துக்கள்.


            

வெள்ளைப்பூண்டு பற்றி அறிந்து கொள்ளுங்கள்

வெள்ளைப்பூண்டு இல்லாத சமயலறையே இல்லை எனலாம். அப்படி என்ன சிறப்பு இந்த வெள்ளைப்பூண்டுக்கு என்று கேட்கின்றீர்களா? வாருங்கள் பார்ப்போம்:

வெள்ளைப்பூண்டின் அறிவியல் பெயர் ஆலிவம் சாட்டிவம் (Allium Sativum). வெள்ளைப்பூண்டில் இயற்கையாகவே வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சத்துப்பொருட்கள் உள்ளன. பூண்டில் உள்ள அலிசின் என்ற மூலக்கூறு  பாக்டீரியாக்களை அழிக்கவல்லது. மேலும் இது கெட்ட கொழுப்பை குறைக்கும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். மலைப்பூண்டின் பல் பெரியதாகவும் நாட்டு பூண்டின் பல் சிறியதாகவும் இறுக்கும்.

பூண்டில் உள்ள சத்துக்கள்:
வைட்டமின்கள் A, B6, C, E, K, சோலின் (Choline), நியாசின் (Niacin), போலேட்  (Folate), மற்றும் இரும்பு, பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம், செலினியம், மெக்னீசியம், மாங்கனீஸ் ஆகிய தாது உப்புக்களும் உள்ளன.
       
மருத்துவ குணங்கள்:
வெள்ளைப்பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சிறந்த கிருமி நாசினி, வாயு கோளாறை நீக்கும், குடற்புழுக்களை கொல்லும், செரிமானத்தை அதிகமாக்கும், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.  வைரஸ் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களை ஒடுக்கும் சக்தி பூண்டுக்கு உள்ளது. சிறிது வெள்ளைப்பூண்டை பாலில் வேக வைத்து சாப்பிட்டால் செரியாமை, சளி, வாயு தொல்லை நீங்கும்.
       

அதிக ஏற்ற இறக்கங்களை சந்தித்த இந்திய பங்குச் சந்தை



மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத்  மற்றும்  ஹிமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் இன்று காலை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஹிமாச்சல பிரதேசத்தில் துவக்கம் முதலே  பிஜேபியின் கை ஓங்கியிருந்தது.  முடிவில் காங்கிரஸ்  21 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. பிஜேபி 44 தொகுதிகளில் வென்று ஹிமாச்சல பிரதேசத்தில்  மீண்டும் ஆட்சி அமைக்கிறது. குஜராத்தில் காங்கிரஸ்  மற்றும் பிஜேபிக்கிடையே கடும் போட்டி நிலவியது. இது பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. காலையில் மும்பை பங்குச்சந்தை 720 புள்ளிகளை இழந்தது. பிஜேபி முன்னிலை பெற்ற பின்பு  தான் உயர்ந்தது. முடிவில் மும்பை பங்குச்சந்தை 138 புள்ளிகள் உயர்ந்து முடிவுற்றது. குஜராத்தில் பிஜேபி 99 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இரண்டு மாநில வெற்றி குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்ட மோடி தனது வளர்ச்சி அரசியலுக்கு கிடைத்த வெற்றி இது என்றும் கடுமையாக உழைத்த கட்சி தொண்டர்களுக்கும் குஜராத்  மற்றும்  ஹிமாச்சல பிரதேச வாக்காளர்களுக்கும் தனது நன்றியை பதிவிட்டுள்ளார்.      

2 Jul 2012

கிராந்தி யாத்திரை - அண்ணா ஹசாரே குழுவினர்


அண்ணா  ஹசாரே குழுவினர் புதுடில்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசி்ன் ஊழல்களை கண்டித்து நேற்று கிராந்தி யாத்திரையை துவக்கினர்.  இந்த யாத்திரை அரியானாவில் துவங்கியது. பிரசாந்த்பூசன், கிரண்‌பேடி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால்ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 

வரும் 25-ம் தேதி இவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வதற்கு முன்னோடியாகவும் ஆதரவு கோரியும் கிராந்தியாத்திரை நடக்கிறது.

இருநாட்கள் நடக்கும் இந்த யாத்திரை அரியானாவின், சோனாபட், பகதூர்கார்க்,ரோட்டாக், மிஹம்,பிவானி, ஹிசார், சோனாபட் உள்ளிட்ட பெருநகரங்கள் வழியாக சென்று அங்கு நடக்கும் பொதுக் கூட்டங்களிளும் இவர்கள் கலந்து கொள்கின்றார்கள்.

1 Jul 2012

அண்ணா 4 - புதிய வகை அரிசி அறிமுகம்

புதிய வகை அரிசி ஒன்றினை தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது. இந்த அரிசியினை விளைவிப்பதற்கு வழக்கமாக உபயோகப்படுத்தும் தண்ணீரின் அளவை விட 75% குறைவாகத் தான் செலவாகும் என்று ஆராய்ச்சியில் கண்டறிந்ததாக தெரிவிக்கின்றனர்.  புதிய வகை அரிசிக்கு 'அண்ணா 4' என்று பெயரிட்டுள்ளனர்.

 புதிய வகை அரிசி பற்றி பேராசிரியர்.K.N. செல்வராஜ் அவர்கள் தெரிவிக்கையில் இந்த விதைநெல்களைப் பயன்படுத்தி மகசூல் செய்த உடன் இதனை வழக்கமான நெல்களைப் போல மீண்டும் பயன்படுத்த முடியும் என்று கூறினார்.  இந்த ஆராய்ச்சிக்கு ராக்பில்லர் என்னும் தொண்டு நிறுவனம் நிதி உதவி வழங்கியது.

 தற்போது கோடை மழை பொய்த்து விட்டதால் விவசாயிகள் நெல்களை பயிரிடாமல் உள்ளனர். இந்த வகையான விதைநெல்களை பயன்படுத்தும் போது கவலையில்லாமல் பயிரிடலாம்.  ஏனெனில் இந்த நாற்றுகளுக்கு தண்ணீரின் தேவை குறைவே.

அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் ஆணையர்கள் இந்தத் திட்டத்தை செயலுக்கு கொண்டு வருவது குறித்து கோயம்புத்தூரில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். விவசாயிகள் இந்த விதை நெல்களைப் பயன்படுத்தினால் மகிழ்ச்சி அடைவார்கள். இது செயலுக்கு வரும் காலம் எப்போது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
 

20 Jun 2012



Petrolவிலை ஏற்றம் மற்றும் பொருட்களின் விலையேற்றம் என்று நாளுக்கு நாள் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் Ford நிறுவனம் தனது முதலாவது Electric காரை அறிமுகம் செய்துள்ளது. மேலும் அன்னிருவனம் Electric car உடன் இணைந்த iPhone mobile apps ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு AT &T wireless module.  இதனால் என்ன பயன் என்று கேட்கின்றீர்களா? இந்த apps. மூலம் அருகினில் ரீசார்ஜ் செய்யும் இடம் எந்த இடத்தினில் உள்ளது என்ற விபரம் மற்றும் காரின் வெளியில் இருந்தபடியே சார்ஜ் எவ்வளவு உள்ளது என்ற விபாரத்தினையும் mobile-ல்அறிய முடியும். இந்த iPhone apps-களை தரவிரக்கம் செய்ய - http://itunes.apple.com/us/app/myford-mobile/id529551186?mt=8


Ethiopia நாட்டின் பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றியுள்ளனர்.  இந்த சட்டத்தின் மூலம் Skype அல்லது Google Voice சேவையை அந்த நாட்டினுள் பயன்படுத்துபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என Al Jazeera செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.
Ethio Teleco என்ற ஒரே ஒரு தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு செயல்பட்டு வருகின்றது.  இதுவும் அரசாங்க நிறுவனம். இந்த புதிய சட்டத்தின் மூலம் அன்னிருவனம் சேவைகளை முடக்குவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக கைபேசி சேவையை உபயோகிபவர்கள் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும். Ethio Teleco நிறுவனம் இந்த சட்டத்தை அமல்படுத்த  இதற்காக புதிய சாதனம் ஒன்றை நிறுவியுள்ளது.
Ethiopia அதிகாரிகள் தெரிவிக்கையில் தங்களது நாட்டின் பாதுகாப்பை உத்தேசித்து இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தனர்.  ஆனால் மற்ற ஆப்பிரிக்க  நாடுகள் கருத்து தெரிவிக்கையில் மக்களின் சுதந்திரத்தை இந்த சட்டம் பாதித்து உள்ளது என்றனர்.

14 Apr 2012

இயேசு கிறிஸ்துவின் கல்லறை


முதலாம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த Jerusalem-ல் உள்ள இயேசு கிறிஸ்துவின் கல்லறையில் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 1980ம் ஆண்டில் முதலாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த இயேசு கிறிஸ்துவின் கல்லறை Jerusalem-ல் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கல்லறையை தோண்டி ஆய்வு மேற்கொள்ள வடக்கு கலிபோர்னியாவின் அகழ்வாராய்ச்சி நிபுணர் ஜேம்ஸ் தபோர், டாக்குமென்ட்ரி சினிமா தயாரிப்பாளர் ஜிம்சாஜேகபோவிக் குழுவினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதற்கு யூதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, இதன் முடிவில் இயேசுவின் கல்லறையை தோண்டாமல் கமெராவுடன் கூடிய ரோபோவை கல்லறைக்குள் இறக்கி ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அதன்படி துளைகள் போடப்பட்டு அதன் வழியாக ரோபோக்கள் பூமிக்குள் இறக்கப்பட்டன. அவை புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளன. அதில் எலும்புகள், கல்வெட்டுகள் போன்றவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை இயேசுவின் எலும்புதானா? என்பது குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது.

செவ்வாயில் யானையா?


செவ்வாயில் யானை போன்ற ஒரு உருவம் உள்ளதாக செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட படத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சிவப்புக் கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய்க் கிரகத்தில் யானை போன்ற ஒரு உருவம் பாறை ஒன்றில் பதிவாகியுள்ளது.

செவ்வாயிலிருந்து செயற்கைக் கோள் மூலம் படம் பிடிக்கப்பட்டு பூமிக்கு அனுப்பப்பட்ட 22,000 படங்களில் இருந்து மேற்படி அதிசய படம் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. குறித்த படம் தொடர்பாக Arizona planetary பல்கலைக்கழகத்தின் புவியியலாளரான Alfred McEwen கருத்துத் தெரிவிக்கையில்,
ஆயிரம் ஆயிரம் தசாப்தங்களுக்கு முன்னர் பூமியில் ஏற்பட்ட மாபெரும் வெள்ளப் பெருக்கு மற்றும் எரிமலை போன்றவற்றால் தான் இப்படியான நிலை உருவானது. அங்கு எரிமலைக் குழம்பு இருப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுகளும் காரணமாக இருக்கலாம்.
பூமியப் போன்ற ஒரு நிலை இருந்ததால் அங்கு யானைகள் இருப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.

10 Apr 2012

விண்வெளிக்கு பயணமாகும் பல்லி


மனிதன் விண்வெளியில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றான்.  இப்போது அந்த வகையில் சோதனை செய்ய உள்ளது ஒரு பல்லியை.  இந்த முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் உயிரியல் மருத்துவத்திற்கான ரஷ்ய நிறுவனம் பல்லிகளை விண்வெளிக்கு அனுப்பி வைக்கும்.


பல்லிகளின் விண்வெளிப் பயணம் தொடர்பாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில் விண்வெளிக்கு மனிதர்களை தெரிவு செய்து பயிற்சி அளித்து அனுப்புவது போன்றே பல்லிகளும் அனுப்பப்படுகின்றன என்றார். இதற்கு மிக வலிமையற்ற உடல்நிலை சரியில்லாத மற்றும் கோபம், ஆத்திரம், படபடப்பு போன்ற உணர்ச்சி அதிகம் உடைய பல்லிகள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்றார்.

மேலும் வீட்டில் இருக்கும் பல்லிகளுக்கு சிறப்பு பயிற்சி அதிகம் தேவைப்படாது. எந்த வெப்பத்தையும் அவற்றால் தாங்கிக் கொள்ள முடியும். எடையற்ற சூழ்நிலை உருவாகும் போதும் புவிஈர்ப்பு விசை குறையும் போதும் இவை தரையிலோ, சுவற்றிலோ, கூரையிலோ ஊர்ந்து செல்லும் இயல்புடையது.

இவற்றை வைத்து ஆராய்ச்சி செய்வதால் மனிதர்கள் பயணிக்கும் போது அவர்களுக்கான உடல் நலப் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். கடந்த 1947ம் ஆண்டில் முதன் முறையாக ஈக்கள் முதன் முறையாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது என்பது கூடுதல் தகவல்.

YOUTUBE-ல் இந்திய தொலைக்காட்சி சீரியல்கள்


சினிமா மற்றும் தொலைக்காட்சி பார்ப்தவர்களே இல்லை என்று குறிப்பிடும் அளவிற்கு தொழில்நுட்ப சாதனங்கள் நம்மிடையே ஊடுருவியுள்ளது. குறிப்பாக வீட்டினில் இருக்கும் பெண்கள் தொலைக்காட்சி சீரியல்களுக்கு அடிமையாகி விட்டனர் என்று சொல்லும் அளவிற்கு அவர்களிடம் சீரியல்கள் சென்றடைந்துள்ளது.   வீடியோக்களின் தகவல் களஞ்சியமான YOUTUBE தளத்தில் சுமார் 19,000 க்கும் அதிகமான இந்திய தொலைக்காட்சி சீரியல் வீடியோக்கள் கொட்டி கிடப்பதாக YOUTUBE தளம் அறிவித்து உள்ளது. மின்சார பிரச்சினையால் சீரியல்களை தவற விட்டாலோ அல்லது பழைய episode-களை பார்க்க விரும்பினாலோ இனி YOUTUBE தளத்தில் சென்று உங்களுக்கு விருப்பமான பகுதிகளை பார்த்து கொள்ளலாம்.
முடிந்து போன சீரியல்களின் முழு தொகுப்பும் இங்கு உள்ளது. இந்திய மொழிகளில் சுமார் 6 மொழிகளில் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் நிகழ்சிகளை கண்டு களிக்கலாம்.
 அனைத்து மொழிகளிலும் காண - http://www.youtube.com/shows/other-languages
தமிழ் நிகழ்சிகளை காண - http://www.youtube.com/shows/other-languages?feature=sh_b_lan_ta&pt=g&l=ta

9 Apr 2012

அனைத்து மென்பொருள்களையும் கணினியில் நிறுவுவதற்கு இணையதளம்


கணினியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு இயங்குதளம் செயலிழந்து போகும் போது மீண்டும் அனைத்து மென்பொருள்களையும் நிறுவ வேண்டிய நிலை ஏற்படும்.
இயங்குதளத்தை மீண்டும் நிறுவுவது கூட மிக சுலபம்.  ஆனால் அனைத்து மென்பொருள்களையும் மீண்டும் நிறுவுவது என்பது கடினமான ஒன்று. இந்த வேலையை சுலபமாக்க ஒரு மென்பொருள் உள்ளது. எந்தெந்த மென்பொருள்களை நிறுவ வேண்டுமோ அவற்றை ஒட்டு மொத்தமாக தேர்ந்தெடுத்து ஒரே நேரத்தில் கணினியில் நிறுவி விடலாம்.
நீங்கள் இயங்குதளத்தை புதிதாக நிறுவிய பிறகு இந்த Ninite தளத்திற்கு செல்லுங்கள். அங்கு நாம் அடிக்கடி உபயோகிக்கும் பெரும்பாலான மென்பொருள்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். உங்களுக்கு தேவையான மென்பொருள்களை தேர்ந்தெடுத்து கொண்டு Get Installer என்ற button click செய்து விட்டால் நீங்கள் செலக்ட் செய்த  மென்பொருள்  தரவிறக்கப்பட்டு உங்களது கணணியில் நிறுவப்பட்டுவிடும்.
இணைய தள முகவரி - http://ninite.com/

8 Apr 2012

பறக்கும் கார்!


இன்று நகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது வடிக்க்கையான ஒன்று.  அதனால் மனிதன் புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டு புதிய படைப்புகளை படைத்து வருகின்றான்.
இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தற்போது தீர்வு காணப்பட்டு விட்டது. கார் வீதியில் போய்க் கொண்டிருக்கும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் ஒரு button அழுத்தியதும் கார் மேலே பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2 சீட்டுக்களுடன் உருவாக்கப்பட்ட கார் 12000 அடி உயரம் வரை பறக்கும் தன்மை கொண்டது.
அதிசயமாக உள்ளதா? கீழே உள்ள video பாருங்கள் பறக்கும் கார் எவ்வாறு செயல்படுகிறது என்று.