Pages

1 Dec 2011

இரண்டு முகங்களுடன் வாழும் அதிசய பூனை!

இரண்டு முகங்களுடன் பிறந்த அதிசய பூனையைப் பார்த்து இருக்கின்றீர்களா? இங்கே பாருங்கள் அந்த அதிசய பூனையை... இந்தப் பூனைக்கு இரண்டு முகங்கள், இரண்டு வாய்கள், மூன்று கண்கள் உள்ளன. இந்தப் பூனையின் எதிர்காலம் தான் சந்தேகம் நிறைந்ததாக உள்ளது என்கிறார் அதன் உரிமையாளர்.
நீலநிறக் கண்களைக் கொண்ட இந்தப் பூனை இந்த ஆண்டின் கின்னஸ் சாதனைப் பதிவுப் புத்தகத்திலும் இடம் பிடித்து விட்டமை கூடுதல் தகவல்.

பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டும் ரோபோ நாய்

பார்வையற்றவர்களுடன் வாக்கிங் சென்றபடி அவர்களுக்கு வழிகாட்டக் கூடிய ரோபோ நாயை ஜப்பான் நிறுவனம் உருவாக்கி வருகிறது. ஜப்பானைச் சேர்ந்த பிரபல நிறுவனம் என்எஸ்கே கார்ப்பரேஷன். வாகன பேரிங்குகள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான பொருட்கள், தானியங்கி சாதனங்களுக்கான உதிரி பாகங்கள், ரோபோக்களில் பயன்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றை தயாரித்து வருகிறது.
இந்நிறுவனம் ஜப்பானின் எலக்ட்ரோ கம்யூனிகேஷன்ஸ் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து நாய் ரோபோ தயாரிக்கும் ஆய்வில் கடந்த 2005ம் ஆண்டு முதல் ஈடுபட்டுள்ளது. இந்த ஆய்வு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதுபற்றி என்எஸ்கே நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: பார்வையற்றவர்கள், மற்றவர்கள் துணையின்றி நடந்து செல்ல வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு ரோபோ நாயை உருவாக்கியுள்ளோம்.இதன் கன்ட்ரோல் யூனிட் கைப்பிடி பகுதியை பார்வையற்றவர்கள் பிடித்துக் கொள்ள வேண்டும். ரோபோவின் 4 கால்களிலும் சக்கரங்கள் உள்ளன. சமதளம் மட்டுமின்றி மேடு, பள்ளங்கள், படிக்கட்டுகளில்கூட இந்த ரோபோ ஏறிச் செல்லும். அதற்கேற்ப முன் பக்கம், பின் பக்கம் மடியுமாறு கால்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எதிரே யாராவது வந்தாலோ, வேகத்தடை, கல் போன்றவை இருந்தாலோ குரைப்பது போல சத்தம் கொடுக்கும். தடைகளை கண்டுபிடிக்க ரோபோவின் முகப்பு மற்றும் கால் பகுதியில் சென்சார்கள், கமெராக்கள் உள்ளன. கன்ட்ரோல் யூனிட் கைப்பிடியில் உள்ள பட்டன்களை அழுத்தினால் எதிரே என்ன இருக்கிறது, வாகனங்கள் வருகிறதா என்பதை தெரிந்துகொள்ளலாம். கனிவான பெண் குரலில் இத்தகவல்களை ரோபோ நாய் தெரிவிக்கும்.இறுதிகட்ட ஆய்வு முடிந்த பிறகு இது அறிமுகப்படுத்தப்படும். சொல்வதை புரிந்துகொள்ளும் திறன், ஜிபிஎஸ் உதவியுடன் தானாகவே ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அழைத்து செல்வது ஆகிய வசதிகளை சேர்ப்பது தொடர்பான ஆய்வுகளும் நடந்து வருகிறது.

Hard Diskன் கொள்ளளவை அதிகரிக்கும் உப்பு

உணவுக்கு சுவை தருவதில் முக்கிய பங்கு உப்புக்கு உள்ளது. உணவுக்கு சுவை கூட்டும் உப்பு கணினியின் அளவை கூட்டும் அதிசயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கணினி இயங்குவதற்குத் தேவையான மென்பொருட்கள் கணினியில் நாம் பதிவு செய்கிற புகைப்படம், பாட்டு, சினிமா உள்ளிட்ட கோப்புகள் அனைத்தும் hard diskகிலேயே பதிவாகின்றன. கணினி  கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் hard diskகளை வைப்பதற்கு பெரிய அறைகள் தேவைப்பட்டன. Disk அளவை குறைப்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கையடக்க hard diskகள் மட்டுமின்றி சட்டை பாக்கெட்டில் போடுகிற அளவில் தற்போது hard disk வந்துவிட்டது. இந்த அளவை மேலும் குறைப்பது தொடர்பாகவும், கொள்ளளவை அதிகப்படுத்தி அதிக தகவல்கள், கோப்புகளை சேமிக்கும் வகையிலும் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடக்கின்றன.இதுதொடர்பாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டேட்டா ஸ்டோரேஜ் கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. பேராசிரியர் ஜோயல் யாங்க் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கிடைத்த ஆச்சரிய தகவல்கள் பற்றி ஜோயல் கூறியதாவது: கணினி மிக முக்கியமான பகுதி hard disk. பதிவுகள் அனைத்தையும் பாதுகாப்பது இதுதான். சமையலுக்கு பயன்படும் ஒரு சிட்டிகை உப்புத் தூள் இதன் கொள்ளளவை அதிகரிப்பது முதலில் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றி கிட்டியது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்த முறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலும் பெருத்த வெற்றி கிட்டியுள்ளது.
டேபிள்சால்ட் எனப்படும் தூள் உப்பைக் கொண்டு கணினி hard disk data recording  திறனை 6 மடங்கு அதிகரிக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  Hard disk தயாரிப்பின் போது அதில் சோடியம் குளோரைடு எனப்படும் சாதாரண உப்பையும் சேர்த்து பயன்படுத்தும் போது hard diskன் பதிவு திறன் ஒரு சதுர இன்சுக்கு 3.3 டெராபைட் அதிகரிக்கிறது. அதாவது disk கொள்ளளவு 6 மடங்கு அதிகரிக்கிறது. உப்பு சேர்ப்பதால் கணினிக்கோ இதர பாகங்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. இது மட்டுமின்றி hard diskன் செயல்பாடும் சிறப்பாக இருக்கிறது.

Online Virus Scanning

எத்தனையோ Anti virus மென்பொருள்கள் இலவசமாக கிடைத்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்குள் முடிந்து விடுகிறது. மீண்டும் ஒரு நல்ல Anti virus மென்பொருள் தேடுவோம். இந்தப் பிரச்னைகளை சரி செய்ய onlineனிலேயே நமது கணினியை Scan செய்யலாம். கீழே உள்ள தளத்திற்க்குச் சென்று start scan கொடுத்து உங்கள் கணினியில் virus  தாக்கம் ஏதும் இருக்கிறதா என்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள். தள முகவரி http://www.bitdefender.com/scanner/online/free.html

கடல் மட்டம் 2 அடி உயரும் அபாயம்

பூமி வெப்பமயமாகி வருவதால் அடுத்த 90 ஆண்டுகளுக்குள் கடல் நீர் மட்டம் 2 அடி உயரும் என கோபன்ஹெகன் University ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் carbon-di-oxide மற்றும் இதர சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக பூமி வேகமாக வெப்பமயமாகி வருகிறது. இதனால் Atlantic கடல் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது உள்ள நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டம் 2 அடியும், அதற்கடுத்த 4 ஆண்டுகளில் 6 அடியும் உயரும். இதனால் கடற்கரையை ஒட்டி உள்ள தாழ்வான பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கடல் மட்டம் சில இடங்களில் உயர்வதாலும், சுனாமி ஏற்படுவதாலும் சிறிய தீவுகள் காணாமல் போவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

சந்திரனில் டைட்டானியம்

பூமியில் மிக குறைந்தளவே உள்ள டைட்டானியம் உலோகம் நிலவில் அதிகளவில் கொட்டிக் கிடப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சந்திரனில் ஆராய்ச்சி மேற்கொள்ள அமெரிக்காவின் மூலம் அனுப்பப்பட்ட லூனார் ரிக்கான்ஸியன்ஸ் ஆர்பிட்டர் என்ற விண்கலத்தில் பொருத்தப்பட்ட கேமராக்களால் 7 வித்தியாமான ஓளி அலைகளில் எடுக்கப்பட்ட படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர். இந்த படங்களை கடந்த 1972ம் ஆண்டு அப்போலோ 17 என்ற விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களால் கொண்டு வர சந்திரனில் இருந்து எடுக்கப்பட்ட பாறை படிவங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர். பல தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்க் ராபின்சன் கூறியதாவது, சந்திரனை பூமியில் இருந்து பார்த்தால் சாம்பல் நிறம் பூசியது போல தோற்றம் அளிக்கிறது. ஆனால் தகுந்த கருவிகளுடன் பார்த்தால் சந்திரன் பல நிறங்களில் ஒளிர்வது தெரியும். இதன்மூலம் சந்திரனில் பல வேதிப் பொருட்கள் உள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது. பூமியில் உள்ளதை விட இரும்பு மற்றும் டைட்டானிய தாதுக்கள் சந்திரனில் அதிகளவில் காணப்படுகிறது. டைட்டானியம் என்பது இரும்பை விட உறுதியானது. ஆனால் எடை குறைந்தது. இதனால் அதிக விலை மிக்கதாக உள்ளது. பூமியில் டைட்டானியம் மிக குறைந்த அளவில் அதாவது 1 சதவீதம் மட்டுமே காணலாம். தற்போதைய ஆராய்ச்சிகளின் மூலம் சந்திரனில் 10 சதவீதத்திற்கு மேலாக டைட்டானியம் உள்ளதாக தெரிகிறது. மேலும் சந்திரனில் ஆக்சிஜன், ஹைட்ரஜன், ஹீலியம் உள்ளிட்ட வாயுக்களும் உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன, என்றார்.

நிலநடுக்கம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு

அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் உலகம் முழுதும் ஏற்படும் நிலநடுக்கங்களை கண்காணித்து வருகின்றது. அமெரிக்க புவியியல் ஆய்வு மைய இணையதளம் சில நிமிடங்கிளில் உங்கள் பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்கள் பற்றிய எச்சரிக்கை தகவல்களைத் தருகின்றது. http://sslearthquake.usgs.gov/ens/ என்ற முகவரிக்குச் சென்று Subscribe செய்த பின்னர் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேரும். அந்த மின்னஞ்சலில் உள்ள இணைப்பில் சென்று தளத்தில் தெரியும் Googleன் வரைபடத்தில் நீங்கள் வசிக்கும் பகுதியை தெரிவித்த பின்னர் save செய்துவிடவும். இனிமேல் நிலநடுக்க எச்சரிக்கை உங்கள் மின்னஞ்சலில் வந்து சேரும். மேலும் அமெரிக்காவில் ஏற்படும் நிலநடுக்கம் பற்றிய தகவல்கள் 2 முதல் 8 நிமிடங்களில் கிடைத்துவிடும் எனவும், ஆனால் ஏனைய பகுதிகளுக்கானவை 20 நிமிடங்கள் வரை ஆகலாம் எனவும் தெரிவிக்கின்றது இந்தத் தளம்.