Pages

1 Feb 2012

Malware-ல் இருந்து கணினியை பாதுகாக்க


Malware எனப்படுவது ஒரு வகை கணினி Virus ஆகும். இது  கணினியில் உள்ள தகவல்களை மற்றயவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். இதனால் கணினியின் வேகம் குறைவடையும் இணையத்தின் வேகமும் குறைவடையும். உங்கள் கணினியில் Malware உள்ளதா என அறிய. உங்கள் கணினியை முதலில் Shutdown செய்யவும். பின்னர்  கணினியை On செயது F8 கீயை அழுத்தவும். அதில் கீழ் உள்ளவாறு தோண்றும். அதில் இரண்டாவதாக காணப்படும் Safe Mode with Networking என்பதை தெரிவு செய்து Enter கீயை அழுத்தவும்.


பின்னர் உங்கள் கணினியானது On ஆகியதும் இணையத்தில் உலாவும் போது முதல் இருப்பதை விட வேகமாக இயங்குகிறது என உணர்வீர்களானால் உங்கள் கணினி malware பாதிப்புக்கு உட்பட்டுள்ளது எனலாம். சரி இனி எப்படியான malware தடுப்பு மென்பொருளை பயன்படுத்துவது என்ற சந்தேகம் வரும்.

Malwarebytes‘ Anti-Malware எனப்படும் மென்பொருளை பாவித்து முற்றாக நீக்க முடியும். இதனை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம இல்லை. மென்பொருளை பதிவிறக்க http://download.cnet.com/Malwarebytes-Anti-Malware/3000-8022_4-10804572.html

மடிக்கணினிகளில் ஏற்படும் வெப்பம்










மடிக்கணினிகளில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை இவற்றைப் பயன்படுத்துவோரிடையே அதிகரித்து வருகிறது. மடிக்கணினியின் பயன்பாடு அதிகரிப்பினால் இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர்.
சில இடங்களில் மடிக்கணினிகள் கூடுதல் வெப்பத்தினால் தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன. Dell, Sony, Acer போன்ற நிறுவனங்கள் தாங்கள் விற்பனை செய்த மடிக்கணினிகளில் உள்ள battery அதிக வெப்பத்தை விரைவில் அடைந்ததனால் அவற்றை வாங்கிக் கொண்டு புதிய battery-களைத் தந்த நிகழ்வுகளும் ஏற்பட்டன.
மோசமான battery-களைத் தவிர்த்து மடிக்கணினிகள் வெப்பம் அதிகமாக வெளிப்படுத்துவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. நாம் பயன்படுத்தும் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களுமே அவை இயங்கத் தொடங்கியவுடன் வெப்பத்தை வெளியிடுகின்றன.
Desktop கணினிகளைக் காட்டிலும் மடிக்கணினிகள் இடம் மிகக் குறைவு. இதனால் அதில் வைக்கப்பட்டுள்ள வெப்பத்தை வெளிப்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்கள் சிறிய இடத்தில் நெருக்கமாக வைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் அமைகின்றன. நெருக்கமாக இருப்பதனால் இவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பம் வெளியேற மிகக் குறைந்த இடமே கிடைக்கிறது.
அடுத்த பிரச்னை இயக்க திறன். மடிக்கணினிகளில் அதிக வேகத்தில் இயங்கும் கூடுதல் திறன் கொண்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பொருத்தப்படுகின்றன. பதியப்படும் இயங்குதளங்களும் அவை வேகமாக இயங்க இந்த எலக்ட்ரானிக் பொருட்களை கூடுதலாக இயக்குகின்றன. இதனால் அதிக வெப்பம் உருவாகிறது.
மடிக்கணினிகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இது தெரியும். அதனால் தான் வெப்பத்தினை வெளியேற்றும் வகையில் சிறிய விசிறிகள், ஹீட் ஸிங்க் எனப்படும் தகடுகளைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இவற்றால் முழுமையாக வெப்பத்தினை வெளியேற்ற முடியவில்லை. விசிறிகள் காலப் போக்கில் வேகம் குறைந்து இயங்குவதால் வெப்பம் வெளியாவதில் பிரச்னை ஏற்படுகிறது.
பொதுவாக மடிக்கணணியில் வன்தட்டில் பிரச்னை ஏற்பட இந்த வெப்பம் அடிப்படை காரணமாக உள்ளது. எனவே இந்த வெப்பத்தினை வெளியேற்றுவதிலும் அதனை குளிரவைப்பதிலும் கவனம் செலுத்தினால் பல பிரச்னைகள் ஏற்படுவதனை முன்கூட்டியே தடுக்கலாம்.
விசிறிகள் சோதனை: மடிக்கணினியில் வெப்பம் உருவாகிறது என்று தெரிந்தால் உடனே திறந்து இயக்கத்தின் போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து விசிறிகளும் சரியாக அதன் அதிக பட்ச வேகத்தில் இயங்குகின்றனவா எனச் சோதிக்க வேண்டும். பெரும்பாலும் இவற்றை நாம் திறந்து பார்க்க இயலாது.
காற்று துளைகளின் சுத்தம்: வெப்பம் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டிருக் கும் காற்று துளைகளை அடிக்கடி கவனிக்க வேண்டும். இவற்றில் தூசு படிந்து அடைத்துக் கொண்டிருந்தால், வெப்பம் விரைவாக வெளியேற்றப்பட மாட்டாது. எனவே சுத்தம் செய்வது அவசியம்.
BIOS சோதனை: நம் BIOS settings மாற்றி அமைப்பதன் மூலம் வெப்பம் உருவாவதனை அறியலாம். இந்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இதனை மாற்றலாம் என்பதற்கு உங்கள் மடிக்கணணி தயரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று பார்க்கவும். சில நிறுவனங்கள் இந்த BIOS அமைப்பினையும் update செய்து புரோகிராம்களை வெளியிட்டி ருப்பார்கள்.
பொதுவான சில பழக்கவழக்கங்களையும் நாம் மேற்கொண்டால் வெப்பம் உருவாவதனைத் தடுக்கலாம்.
வெப்பமான, சூரிய ஒளிபடும் இடத்தில் வைத்து மடிக்கணினியை இயக்கக்கூடாது. அதே போல மூடப்பட்ட கார், சிறிய அறை ஆகியவற்றில் இயக்கக் கூடாது. ரேடியேட்டர்கள், வெப்பம் வெளியேறும் இடங்கள் அருகே கணினியை வைத்திருக்கக்கூடாது.
இதை மடிக்கணினி என அழைத்தாலும் நம் தொடைகளின் மீது வைத்து இயக்குவது கூடாது. இதனால் வெப்பம் வெளியேறும் வழிகள் தடைபடும். நம் உடலையும் இந்த வெப்பம் தாக்கும். மெத்தைகள், துணிவிரிப்புகள் ஆகியவற்றின் மீது இவற்றை வைத்து இயக்குவதும் தவறு.
மடிக்கணினியில் வெப்பம் உருவாவதனைத் தடுக்க முடியாது. எனவே வெப்பம் எளிதில் விரைவாக வெளியேற்றப்படும் வழிகளை நாம் நம் பழக்கத்தின் மூலம் தடுக்காமல் இயங்க வேண்டும்.
மேலும் கூடுதல் துணை சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பத்தினை வெளியேற்றுவதனை விரைவுபடுத்தலாம். இந்த வழிகளை மேற்கொண்டால் வெப்பமானது கணினியின் மற்ற பாகங்களைத் தாக்குவதனைத் தடுக்கலாம்.

எதனால் மாரடைப்பு வருது?





உலகிலேயே அதிகமாக மனிதர்கள் இறப்பதற்கு முதல் காரணம் மாரடைப்பு, ஏழை, பணக்காரன், ஆண், பெண் என்ற வித்தியாசம் ஏதுமின்றி எல்லோரையும் தாக்குகிறது இந்த “ஆட்கொல்லி” இருதய நோய். மாரடைப்பு வருவதற்கு காரணங்கள்.

* அதிக ‘கொலஸ்ட்ரால்’ ரத்த தமனிகளில் கொழுப்புகள், ட்ரைகிளிசரைடுகள் அதிகமாக இருப்பது பரம்பரை, புகைபிடித்தல், அதிக இரத்த அழுத்தம் இன்றைய அவசர வாழ்க்கையில் ஏற்படும் மன இறுக்கம், நீரிழிவு நோய் போன்றவை.

* இருதய நோய்களை வருமுன் காப்பது நல்லது. இதில் முக்கிய பங்கு வகிப்பது உணவு. இருதய நோயை சமாளிக்க பல வழிகளில் முனைய வேண்டும்.

* சரியான உணவு, உடற்பயிற்சி, நோய் வந்தால் சரியான சிகிச்சை, வாழ்வுமுறைகளில் மாற்றம், மன நிலையில் அமைதி என்ற பல வழிகளில் இந்த நோயை சமாளிக்க வேண்டும்.

* ஆயுர்வேதத்தில் இருதய நோய்களுக்கு உன்னதமான மருந்துகள் உள்ளன. இம் மருந்துகளுடன், உணவுக்கட்டுப்பாடும் சேர்ந்தால் சிகிச்சை பலனளிக்கும். முதலில் உணவுமுறைகளைப் பார்ப்போம்.

* சாப்பிடும் உணவு எவ்வளவு கலோரிகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வயதாக வயதாக, ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு, 1500 கலோரிகள் போதுமானது. எல்லோரும் அறிந்தது உணவில் கொழுப்பை குறைப்பது நல்லது.

* வனஸ்பதி, வெண்ணெய் இவற்றை அறவே தவிர்க்கவும். சிறிதளவு உருக்கிய நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

* நார்ச்சத்தும், மாவுச்சத்தும் மிகுந்த கோதுமை, அரிசி, பீன்ஸ், ஒட்ஸ் மாவு, காய்கறி, பழங்கள் போன்ற உணவுகள் நல்லவை. சமையலில் ஆலிவ் எண்ணெய், தானிய எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் இவற்றை மாற்றி மாற்றி உபயோகிக்கவும்.

* 4 பேர் உள்ள குடும்பத்திற்கு மாதம் 2 கிலோ எண்ணெய்க்கு மேல் உபயோகிக்க கூடாது. இல்லை, ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் போதுமானது.

* உணவில் கண்டிப்பாக உப்பைக் குறைக்கவும். 2400 மி.கி. உப்பு (சோடியம்) ஒரு நாளுக்கு போதுமானது. முடிந்தால் இந்த அளவையும் குறைக்கவும்.உடல் எடையை அதிகரிக்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஓர் ‘வளையம்’ போல் வயிற்றை சுற்றி கொழுப்பு இருப்பவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்புகள் அதிகம். சுறுசுறுப்பாக இருங்கள்.