Pages

4 Jan 2012

கடவுச்சொல்லுடன் கூடிய மின்னஞ்சலை அனுப்புவதற்கு ஒரு தளம்



மின்னஞ்சல் (E-Mail) அனுப்ப பல்வேறு தளங்கள் உதவி செய்கிறன. அதில் மிகவும் பிரபலமான தளங்கள் Yahoo, GMail, HotMail ஆகும்.
இவற்றின் மூலம் அனுப்பபடும் மின்னஞ்சல்களை நாம் சாதாரணமாக open செய்து பார்க்க முடியும். இதற்கு உரிய பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல் இருந்தால் போதுமானது.
நாம் word, pdf மற்றும் ஒரு சில கோப்புகளை காப்பதற்காக கடவுச்சொல்லுடன் (password) உருவாக்குவோம். இவ்வாறு உருவாக்கும் கோப்புகளை கடவுச்சொல் இருந்தால் மட்டுமே open செய்ய முடியும்.
இதனால் அவற்றில் உள்ள தகவல்கள் திருட வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் கடவுச்சொல் இல்லாமல் உள்ள கோப்புகளை மிகவும் எளிமையாக மற்றவர்களால் பார்க்கவோ அல்லது திருடிவிடவோ முடியும். இதுபோல் நாம் அனுப்பும் மின்னஞ்சல் ஒவ்வொன்றுக்கும் கடவுச்சொல் தந்தால்  எவ்வாறு இருக்கும். இதற்கு LOCKBIN என்னும் தளம் உதவி செய்கிறது.
http://www.lockbin.com/lockbin.php  தளத்திற்கு செல்லவும். அங்கு தோன்றும் window-வில் உங்களுடைய பெயர், உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல் போன்றவற்றை உள்ளிடவும்.

பின் நீங்கள் குறிப்பிட வேண்டிய செய்தியை தட்டச்சு செய்து பின் வேண்டிய கோப்பினை பதிவேற்றம் செய்து மேலும் CAPTCHA கோடினை உள்ளிட்டு இறுதியாக ஒப்பந்த check box-ல் Tick செய்து SUBMIT button அழுத்தவும். உங்களுடைய மின்னஞ்சல் நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு சென்றுவிடும்.

உங்களுடைய நண்பர் அந்த மின்னஞ்சலை open  செய்யும் போது ஒரு window open ஆகும். நீங்கள் கொடுத்த கடவுச்சொல்லை உள்ளிடுவதன் மூலமாக உங்களுடைய நண்பர் அந்த மின்னஞ்சல் தகவலை பெற்றுக்கொள்வார்கள். இவ்வாறு உங்கள் தகவல் உங்கள் நண்பர்களுக்கு மிகவும் பாதுகாப்பாக சென்றடையும்.

MP3 பைல்களின் Quality மாற்ற இலவச மென்பொருள்

பெரும்பாலும் audio fileகள் MP3 வடிவிலேயே உபயோகப்படுத்தப்படுகிறது. நம்மிடம் சில MP3 audio fileகள் தரம் குறைந்து இருக்கும். அந்த வகை பைலை இயக்கும் போது சத்தம் குறைவாக கேட்பதுடன் கேட்பதற்கு stereo  வசதியின்றி இருக்கும். இந்த குறையை நிவர்த்தி செய்ய ஒரு மென்பொருள் உள்ளது. பழைய சினிமா பாடல்களை கூட stereo இசையுடன் மாற்றி கேட்டு மகிழலாம். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.
  • முதலில் இந்த http://www.inspire-soft.net/software/mp3-quality-modifier தளம் சென்று மென்பொருளை download செய்து கொள்ளுங்கள்.
  • தற்பொழுது உங்களுக்கு வரும் Zip பைலை Extract செய்து கொள்ளுங்கள்.
  • இப்பொழுது வரும் MP3 Quality Modifier என்ற பைலை open செய்து கொள்ளவும்.
  • இந்த மென்பொருளை நாம் கணினியில் instal செய்ய வேண்டியதில்லை. நேரடியாக இயக்கலாம்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல window வரும்.

  • குறிப்பிட்டு காட்டியுள்ள பகுதியில் உங்கள் விருப்பம் போல மாற்றம் செய்ய வேண்டிய பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • தேர்வு செய்த கொண்டவுடன் கீழே உள்ள வசதிகளை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து கொள்ளுங்கள்.

  • உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து கொண்டு மேலே உள்ள Process என்ற button அழுத்தினால் போதும் உங்களுடைய MP3 பைல் புதிய தரத்துடன் உருவாகும்.
  • கடைசியில் உங்களுக்கு கீழே இருப்பதை போல window வரும்.

இது போன்று உங்களுக்கு வரும் window-வில் உங்களின் பழைய பைலின் அளவும் மாற்றம் செய்த பைலின் அளவும் மற்றும் எதனை சதவீதம் மாற்றம் செய்துள்ளது என்ற தகவல்களும் வரும்.

பழமையான தமிழ் இலக்கிய நூல்களை இலவசமாக download செய்ய



கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடிமக்களால் உருவானது நம் தமிழ் மொழி. உலகிலேயே பழமையான மொழிகளில் நம் தமிழ் மொழியும் ஒன்று என்பதில் தமிழர்களாகிய நாம் பெருமை கொள்வோம்.  நம் தாய் மொழியில் வெளிவந்துள்ள இலக்கியங்களும், நூல்களும் மிகப் பழமை வாழ்ந்தவைகள். உதாரணமாக உலகத்தில் உள்ள பல்வேறு  மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூலான திருக்குறள் ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது என்று கணக்கிடப்பட்டுள்ளது. திருக்குறள் மட்டுமின்றி நம் தாய் மொழியில் எவ்வளோவோ இலக்கிய  நூல்களும் வெளிவந்துள்ளன. இந்த நூல்கள் நம் தமிழ் பண்பாட்டின் கலாசாரத்தையும் பழக்க வழக்கங்களையும் நமக்கு எடுத்துரைக்கிறது.
கீழே நமது தமிழின் மிகச் சிறந்த இலக்கிய நூல்களை தங்களுக்கு கொடுத்துள்ளேன். அந்தந்த link-ல் சென்று உங்களுக்கு தேவையான நூல்களை download செய்து கொள்ளுங்கள்.

Tamil classic Literature
No.Book TitleAuthorDownload PDF Tamil book
1ThirukkuralThiruvalluvar http://www.box.com/shared/zh4tmpof2o
2AtthichudiAvvaiyar
3Kondrai VenthanAvvaiyar
4MuthuraiAvvaiyarhttp://www.box.com/shared/3ouldsfofg
5Nal VaziAvvaiyar
6Ulaga NeethiUlaga Natharhttp://www.box.com/shared/kczgmj3n9o
7Abirami AnthathiAbirami Pattarhttp://www.box.com/shared/demy9thv7z
8Abirami Anthathi with commentary / meaningAbirami Pattar
Kannadasan
http://www.box.com/shared/zj1ooq5h8k
9Bharathiar Songs - 1C. Subramanya Bharathiarhttp://www.box.com/shared/1tl8glqfsg
10Bharathiar Songs - 2C. Subramanya Bharathiarhttp://www.box.com/shared/nj9ava2zqq
11Bharathiar Songs - 3C. Subramanya Bharathiarhttp://www.box.com/shared/h4luia1gb2
12Kannan PattuC. Subramanya Bharathiarhttp://www.box.com/shared/va0xd0fpcl
13Kuyil PattuC. Subramanya Bharathiarhttp://www.box.com/shared/o7knkzadh9
14Panchali SapathamC. Subramanya Bharathiarhttp://www.box.com/shared/xmknjqe793

சந்திரனைச் சுற்றி இரு செய்மதிகள் ஆராய்ச்சியில்



சந்திரனை சுற்றி வரக் கூடிய சுற்றுவட்டப் பாதையில் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா செய்மதி ஒன்றைச் செலுத்தியுள்ளது.
அது சந்திரனின் ஈர்ப்பு சக்தி குறித்து ஆராயும். இது குறித்த இரண்டாவது செய்மதியை செலுத்தும் முயற்சி ஒன்று ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்டது.
இவற்றில் இருந்து வரும் தரவுகளைக் கொண்டு சந்திரனின் மேற்பரப்பில் உண்மையாக என்ன இருக்கிறது என்பது குறித்து அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அதன் மூலம் சந்திரன் எப்படி உருவானது என்பது குறித்து அறிய முடியும் என்பது அவர்களது எதிர்ப்பார்ப்பு.
சந்திரனில் உள்ள குன்றுகள் ஒரு ஒழுங்கில்லாது அதன் ஈர்ப்பு சக்தியில் ஏற்படுத்தக் கூடிய மிகச் சிறிய மாற்றங்களை இந்த செய்மதிகள் ஆராயும்.
இந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஒரே மாதிரியான இரு செய்மதிகள் ஏன் அவசியம் என்பதை நாசாவின் இந்த ஆய்வுத் திட்டத்தின் தலைமை விஞ்ஞானியான டாக்டர் மரியா ஷூப்பார் விளக்கினார்.

இந்த ஆய்வுத்திட்டத்தின் நோக்கம் சந்திரனின் ஈர்ப்புப் புலத்தை வரைவுபடுத்துவது என்பதால் அந்த ஈர்ப்புப் புலம் ஒரு செய்மதியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் கொண்டுதான் அதனை நாங்கள் கணிக்கப்போகிறோம் என்றார் அவர். அத்துடன் அந்த செய்மதியுடன் நாம் நேரடி தொடர்பில் இல்லாவிட்டால் அதன் மீது சந்திர ஈர்ப்பு விசை ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை நம்மால் கணிக்க முடியாது. அதேவேளை சந்திரனின் ஒரு புறம் தான் பூமிக்கு தெரியும் அடுத்த பக்கம் தெரியாது.
ஆகவே இரு பக்கங்களிலும் நாம் செய்மதிகளை வைத்திருந்தால் தான் அவை ஒன்றில் இருந்து ஒன்று தகவலைப் பெற்றுத் தரும். அதன் மூலம் அனைத்து வேளைகளிலும் அவற்றின் மீது ஏற்படும் தாக்கங்களை நாம் கண்டறியலாம் என்றும் டாக்டர் மரியா ஷூப்பர் கூறினார்.

சந்திரனின் ஒரு பக்க அடுத்த பக்கத்தில் இருந்து வேறு படுகின்றது என்ற அடிப்படைக் கேள்விக்கு நாம் இன்னமும் பதில் காணவில்லை. இதற்கு முந்தைய முயற்சிகளில் நாம் சந்திரனின் மேற்பரப்பில்தான் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். ஆனால் இந்தக் கேள்விக்கான பதில் என்பது சந்திரனுன் உள்ளே தான் உள்ளது. அதனால்தான் அதனை ஆய்வு செய்வதற்கு இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இங்கு இருக்கின்ற ஒரு கோட்பாடு என்னவென்றால் எமது இந்தச் சந்திரன் தோன்றிய போது பூமிக்கு இரு சந்திரன்கள் இருந்தன என்றும் அவை ஒன்றோடு ஒன்று மோதியதால்தான் இந்த சந்திரனின் ஒரு புறத்தில் சீரற்ற மலைக் குன்றுகள் தோன்றின என்றும் கருதப்படுகிறது.
அந்த மலைகள் உள்ள பகுதி சந்திரனின் பூமியை நோக்கிய பக்கமாக இல்லாமல் அடுத்த பக்கமாக இருப்பதாக கருதப்படுகிறது. அதனை ஆய்வு செய்து கண்டறிவதுதான் இந்த முயற்சியின் நோக்கமாகும்.