சமீபத்தில் வெளியான கொலைவெறி டி என்ற பாடல் Youtubeல் சக்கை போடு போட்டுக் கொண்டு இருக்கிறது. பார்வையாளர்களின் எண்ணிக்கை இது வரை 2 கோடியை தாண்டி விட்டது. Youtube தளமும் தங்க மெடல் கொடுத்து கவுரவித்தது. ஒரு தமிழ்ப் பாடல் Youtubeல் இந்த அளவு வரவேற்ப்பு ஏற்பட்டுள்ளது ஆச்சரியமே. சோனி நிறுவனம் வெளியிட்டதால் தான் இந்த வரவேற்ப்பு என்ற கருத்தும் இருக்கிறது. எப்படியோ இன்றைய இளைஞர்களின் தேசிய கீதமாக இந்தப் பாடல் மாறி இருக்கிறது. இவ்வளவு மகுடங்களை பெற்ற இந்தப் பாடல் அடுத்ததாக ஒரு சாதனையை செய்ய இருக்கிறது.
ஏர்டெல் நிறுவனம் 2011 ஆம் ஆண்டின் ஒரு வருடத்திற்கான(Airtel mobitude 2011) உபயோகத்தினை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 150 மில்லியன் பாடல்கள் download செய்யப்பட்டுள்ளதாம். அதில் வெளியிட்ட 18 நாட்களில் கொலைவெறி டி பாடலை 2,10,000 பேர் ஏர்டெல் மொபைல்களில் இருந்து download செய்துள்ளனர். சமீபத்தில் ரா-ஒன் படத்தில் வெளியான Chammak challo என்ற பாடல் தான் 2011ல் அதிகம் download செய்யப்பட வீடியோ பட்டியலில் முதல் இடத்தில உள்ளது.
ஆனால் வெளியான 18 நாட்களில் இவ்வளவு பேர் download செய்திருப்பதாலும், இந்தப் படம் ரிலீஸ் ஆகிவிட்டால் இதன் எண்ணிக்கை பல மடங்கு கூடும் என்ற நம்பிக்கையிலும் கொலைவெறி டி பாடல் அதிகம் download செய்யப்பட்ட வீடியோக்கள் பட்டியலில் சுலபமாக முதல் இடத்தை பிடித்துவிடும்.
அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட பாடல் வீடியோக்கள் பட்டியல்:
- சமாக் சல்லோ
- திங்கா சிக்கா
- செனோரீட்டா மகர் பிர் பி
- சோர்க்கா சக்தே ஹயே
- டேரி மெரி மெரி டேரி
ஏற்கனவே எல்லா சாதனைகளையும் முறியடித்து விட்டது ..
ReplyDeleteஇன்னும் என்ன பாக்கி
-- kolaveri di blog