
Facebook வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்பு உலகின் பல கம்ப்யூட்டர்களில் பரவி வெகு வேகமாக நாசத்தை விளைவித்தRamnit என்னும் virus இப்போது புதிய உருவத்தில் வரத் தொடங்கி உள்ளது.
இது தற்போது Facebook வாடிக்கையாளர்களின் கணினிகளில் பரவி அதிலுள்ள தகவல்களைத் திருடுவதுடன் கணினியையும் முடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Seculert என்ற virus ஆய்வு அமைப்பு இதனைக் கண்டறிந்து இந்த எச்சரிக்கையை வழங்கி உள்ளது. இதுவரை 45 ஆயிரம் Facebook account-களைப் பாதித்து தகவல்களைத் திருடி அனுப்பி உள்ளது. அந்த account-களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
முதன் முதலில் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராம்நிட் virus தாக்குதல் தொடங்கியது. Anti-Virus தொகுப்புகளைத் தயாரித்து வழங்கும் McAfee நிறுவனம் இது குறித்து கூறுகையில் இந்த malware EXE, DLL, மற்றும் HTML ஆகிய file-களைத் தாக்கி முடக்குவதாக 2010 அக்டோபரில் அறிவித்தது.
மிகத் தெளிவாக இந்த virus செயல்படும் விதத்தினையும் விலாவாரியாக விளக்கியது. இப்போது இந்த virus-ன் இன்னொரு பரிமாணம் வெளியாகி பரவுகிறது என Quarri Technologies என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் முறை வந்த போது ராம்நிட் virus flash drive-கள் மூலம் வந்ததாகக் கண்டறியப்பட்டது. தற்போது Facebook மூலம் பரவுகிறது. கம்ப்யூட்டரில் சமுதாய இணைய தளங்களைப் பயன்படுத்துபவர்கள் கம்ப்யூட்டரின் பிற இயக்கங்களிலும், சமுதாய இணைய தளங்களிலும் ஒரே password பயன்படுத்துவதனைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர்.
எனவே தான் இந்த virus-ன் புதிய வகை Facebook சமுதாய தள வாடிக்கையாளர்களின் account-ல் விளையாடுகிறது. இரண்டு வகைகளில் இந்த virus-ன் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம்.
முதலாவதாக, Facebook account வைத்திருப்பவர்கள் அந்த தளத்தில் சந்தேகப்படும் வகையில் link இருந்தால், அவற்றின் மீது click செய்திட வேண்டாம்.
எந்த தளம் நண்பர்கள் அல்லது அமைப்புகளிடமிருந்து link வந்தாலும், அதில் click செய்திடும் முன் சரியானதுதான எனச் சோதனை செய்த பின்னரே click செய்திட வேண்டும்.
இரண்டாவதாக, Facebook account password-ஐ மற்ற account-கள், குறிப்பாக வங்கி சேவைகளில் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு சேவைக்கும் ஒரு password பயன்படுத்த வேண்டும். நிதி சார்ந்த வேலைகளுக்கு மட்டுமின்றி, ஜிமெயில் மற்றும் பிற இமெயில் சேவைகளிலும் தனித்தனி password அமைத்துக் கொள்வது புதிய ராம்நிட் வைரஸிலிருந்து நம்மைக் காக்கும்.
தற்போதைக்கு இந்த ராம்நிட் virus அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டில் பரவலாகப் பரவிக் கொண்டு வருகிறது. விரைவில் Facebook தளம் மூலம் மற்ற நாடுகளில் உள்ள கம்ப்யூட்டர்களைப் பாதிக்கும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. பன்னாட்டளவில் 80 ஆயிரம் கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment