
உலகிலேயே முதல் glass free 3D display கொண்ட சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வீடியோ game பிரியர்களுக்கு இந்த 3D display இன்னும் உற்சாகத்தைக் கொடுக்கும்.
இந்த wikipad-ன் 8 inch திரை ஒரு விளையாட்டு மைதானம் போன்ற அனுபவத்தை கொடுக்கும். இது Android 4.0 இயங்குதளத்தைக் கொண்டிருப்பதால் புதிய தலைமுறை விளையாட்டுகளையும் இதில் தடையில்லாமல் விளையாடலாம்.
Wikipad-ன் நினைவகம் 8GBயைக் கொண்டிருக்கிறது. மேலும் இது Micro SD card கொண்டிருப்பதால் இதன் மூலம் நினைவகத்தை 64 ஜிபி வரை அதிகரிக்க முடியும்.
வீடியோ game சிறப்பாக விளையாட 4 button-களை இது கொண்டிருக்கிறது. எளிதாக தொலைக்காட்சி மற்றும் கணினி திரையில் இணைத்து பெரிய திரையில் வீடியோ game விளையாடலாம்.
இந்த Wikipad-ன் விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. ஆனால் வரும் முன்பே மக்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்
No comments:
Post a Comment