Pages

26 Dec 2011

Recuva புதிய பதிப்பின் சிறப்பம்சங்கள்

எதிர்பாராத விதமாக நம்மை அறியாமல் நாம் அழித்த கோப்புகளை மீட்பதில் நமக்குப் பெரிய அளவில் சிறப்பாக உதவிடும் programmeகளில் ஒன்று ரெகுவா (Recuva). இதன் புதிய பதிப்பு 1.42.544 அண்மையில் வெளியாகி உள்ளது.
இது ஓர் இலவச programme என்பது அனைவருக்கும் தெரியும். Directoryகளில் மற்றும் கோப்பறைகளில் இருந்து நீக்கும் கோப்புகள் மட்டுமின்றி recycle binலிருந்து நீக்கும் கோப்புகளையும் இந்த programme மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.
அத்துடன் virus programme-ன் பிழையான இயக்கம் மற்றும் கணினி crash ஆகியவற்றால் நீக்கப்படும் கோப்புகளையும் ரெகுவா நமக்கு மீட்டுத் தரும்.
C Cleaner வழங்கும் நிறுவனமான Piriform நிறுவனமே இதனையும் வழங்குகிறது. இரண்டுமே இலவசம் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
இதனுடைய சிறப்பம்சங்கள்:
1. மிக எளிதான interface வழியாக 'Scan' என்பதை click செய்து பின்னர் நாம் மீண்டும் பெற விரும்பும் நீக்கப்பட்ட  கோப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
2. கோப்பின் பெயர் மற்றும் வகை அடிப்படையில் மீட்கப் பட வேண்டிய கோப்புகளை வரையறை செய்திடலாம்.
3. List மற்றும் Tree வகையில் கோப்புகளைக் காணும் வசதி.
4. USB பிளாஷ் ட்ரைவில் இருந்து இயக்கலாம்.
5. Office documents, Images, Video, Music, மின்னஞ்சல் என எந்த வகை கோப்புகளையும் மீட்டுத் தரும்.
6. FAT12, FAT16, FAT32, exFAT, NTFS, NTFS5 , NTFS மற்றும் EFS ஆகிய அனைத்து வகை கோப்புகளையும் மீட்டுத் தருகிறது.
7. கணினியில் இணைத்துப் பின் தனித்து எடுக்கப்படும் மீடியா வகையான SmartMedia, Secure Digital, MemoryStick, Digital cameras, Floppy disks, Jaz Disks, Sony Memory Sticks, Compact Flash cards, Smart Media Cards, Secure Digital Cards போன்ற அனைத்து வகை மீடியாக்களில் இருந்து நீக்கப்பட்ட கோப்புகளை மீட்கிறது.
8. ஸிப் drive,  external hard drive மற்றும் USB hard driveகளில் இருந்தும் அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்டுத் தருகிறது.
9. வேகமான இயக்கம் சிறிய அளவிலான கோப்பு மற்றும் நொடியில் இயங்கி முடிக்கும் சிறப்புக்களையும் கொண்டது.
புதிய பதிப்பில்:
1. JPEG மற்றும் PNG புதிய தொழில்நுட்ப முறை வடிவமைக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
2. Windows 8 சோதனைப் பதிப்பிற்கான தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டுள்ளது.
3. Keyboard navigation-ல் புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன.
4. பெரிய அளவிலான driveகளுக்கு கூடுதல் memory பயன்பாடு தரப்பட்டுள்ளது.
5.  குறைகள் பல நீக்கப்பட்டுள்ளன.
தரவிரக்கம் செய்திட  http://www.piriform.com/recuva/download

No comments:

Post a Comment