கம்ப்யூட்டர் பயன்பாட்டில் சில விஷயங்கள் நமக்கு எந்த நேரமும் பயனைத் தரும் வகையில் இருக்கும்.அவற்றில் ஒன்று mouse கொண்டு click செய்து text தேர்ந்தெடுப்பது. பல word processor, e-mail text editor, இணைய தளப் பக்கங்கள் ஆகியவற்றில் இந்த mouse click பயன்பாடு நமக்குக் கிடைக்கிறது.ஒரு குறிப்பிட்ட சொல் அல்லது வாக்கியத்தினை, பத்தியை அடிக்கோடிட, சாய்வெழுத்துக்களாக மாற்ற நாம் என்ன செய்கிறோம்? Text தேர்ந்தெடுக்க mouse cursor அல்லது ஷிப்ட் கீயுடன் அம்புக் குறி கீயினைப் பயன்படுத்தி அதனை highlight செய்திடுகிறோம்.இதற்குப் பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது ஒரு சொல் எனில், அதன் மீது எங்கேணும் mouse cursorக் கொண்டு சென்று இரு முறை click செய்திடுங்கள்.அந்தச் சொல் தேர்ந்தெடுக்கப்படும். மூன்று முறை click செய்திடுங்கள். அந்த பத்தி முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும். இனி நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட text எப்படி வேண்மானாலும் மாற்றிக் கொள்ளலாம்
No comments:
Post a Comment