இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID (Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி வருகிறது. இந்த அடையாள அட்டை UIDAI(Unique Identification Authority of India) என்ற அமைப்பின் மூலம் இந்திய அரசு தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இந்த அடையாள அட்டையை வழங்கி வருகிறது. குறிப்பிட்ட சில தபால் நிலையங்களில் மட்டும் தான் இந்த அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 100 பேர் தான் ஒரு அலுவலகத்தில் பதிவு செய்ய முடிகிறது. முதலில் செல்பவர்களுக்கே முன்னுரிமை என்பதால் அதிகாலையிலேயே சென்று இதற்க்காக lineல் காத்துக் கொண்டிருக்க வேண்டிய சிரமம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு UIDAI அமைப்பு Online Appointment வாங்கும் வசதியை கொண்டு வந்துள்ளது. Online Appointment வாங்கிவிட்டால் சரியான நேரத்திற்கு சென்று சுலபமாக ஆதர் அடையாள அட்டையை பதிவு செய்து விடலாம். இதற்க்காக மணிக்கணக்கில் lineல் காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. Appointment ஆன்லைனில் பதிவு செய்ய :
இதற்காக http://appointments.uidai.gov.in/ என்ற ஒரு இணையப் பகுதியை உருவாக்கி உள்ளது. தற்பொழுது சோதனை ஓட்டமாக இந்த வசதி குறிப்பிட்ட சில மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு (Delhi, Chandigarh, Maharashtra, Haryana, Himachal Pradesh, Punjab) மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலத்திற்கும் இந்த வசதி கிடைக்கும்.லிங்கில் சென்று அதில் கேட்கப்படும் முழுவிவரங்களை கொடுத்த பின்னர் Fix Appointment என்பதை அழுத்தினால் உங்களுக்கான நேரம் ஒதுக்கப்படும்.

அடையாள சான்றிதழ்கள் என்னென்ன கொண்டு செல்லலாம்:
Id Proof மற்றும் Address Proof க்கு ஆவணங்கள் என்ன கொண்டு செல்ல வேண்டும் என கீழே காணுங்கள்.
ஆன்லைனில் Enrollment Form download செய்ய:
தபால் அலுவலகத்திற்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்வது தாமதமாகும். ஆகவே enrollment form download செய்து வீட்டில் இருந்தே பூர்த்தி செய்து கொண்டு சென்றால் வேலை மேலும் சுலபமாகிவிடும். Enrollment form download செய்ய http://uidai.gov.in/images/FrontPageUpdates/uid_download/enrolmentform.pdf
வாங்கிய Appointment Cancel (or) நேரத்தை மாற்றி அமைக்க:
ஒருவேளை நீங்கள் Appointment வாங்கிய நேரத்தில் போக முடியவில்லை என்றால் உங்கள் Appointment Cancel செய்து விடுங்கள் அல்லது நேரத்தை மாற்றி கொள்ளுங்கள். அதற்க்கு http://appointments.uidai.gov.in/frmReScheduleEnrolment.aspx சென்று cancel செய்யுங்கள்.
மேலும் சந்தேகங்களுக்கு:

No comments:
Post a Comment