Pages

27 Dec 2011

கணினியில் கோப்புகளை முழுவதுமாக நீக்குவதற்கு....

கணினியில் இருக்கும் தனிப்பட்ட கோப்புக்களை மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக பல நடைமுறைகளை பயன்படுத்துவீர்கள். எனினும் தனிப்பட்ட கோப்புக்களின் பயன்பாடு முடிந்தவுடன் அவற்றை கணினியிலிருந்து recover செய்ய முடியாதவாறு முழுவதுமாக நீக்கிவிட விரும்புவீர்கள்.
FileWing என்ற மென்பொருள் இதையே செய்கின்றது. இந்த மென்பொருள் மூலம் நீங்கள் ஏற்கனவே அழித்துவிட்ட கோப்புக்களை recover செய்வதுடன் அவற்றை முழுவதுமாக அழித்தும் விடலாம்.

FileWingஐ முதல் முறை பயன்படுத்தத் தொடங்கும் போது unlock codeஐ பெற்றுக் கொள்வதற்காக மின்னஞ்சல் முகவரி தரவேண்டும்.
பின்னர் disk scan செய்ய அல்லது கோப்புக்களை, driveகளை அழிப்பதற்கென இரு optionகள் காட்டும்.
கணினியில் கோப்புக்களை முழுவதுமாக நீக்கிவிட Quick Deletion-லிருந்து shredding methodஐ தெரிவு செய்ய வேண்டும்.
GOST, DoD (E), DOD(ECE), Bruce Schneider, VSITR மற்றும் Peter Gutmann போன்ற முறைகளில் கோப்புக்களை நீக்கலாம். தெரிவு செய்த பின்னர் Delete Filesஐ அழுத்துங்கள்.
கணினியிலிருந்து  அழிக்கப்படும் கோப்புக்களை recover செய்யவதற்கு scan disk option தந்து பின்னர் recover செய்யப்பட வேண்டிய இடத்தையும் தெரிவு செய்யுங்கள். தரவிறக்கம் செய்ய  http://www.abelssoft.net/filewing.php

No comments:

Post a Comment