Pages

31 Dec 2011

Hollywood தரத்தில் வீடியோ எடிட்டிங் செய்ய மென்பொருள்



வீடியோ எடிட்டிங் செய்யும் நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.  அதாவது நம் வீடியோவை எடிட் செய்து Hollywood தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது. வீடியோ எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் இந்த மென்பொருள் சிறந்த ஒன்று என்றே கூர வேண்டும்.  கீழே உள்ள தளத்திற்கு சென்று சென்று Download now என்பதை click செய்தவுடன் இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம். இந்த மென்பொருள் open source தான். தங்கள் தேவைக்கு தகுந்தபடியும் மாற்றியமைக்கலாம். Hollywood தரத்திற்கு இணையான மென்பொருளை வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு நமக்கு தேவை இருக்காது என்றாலும் சில நேரங்களில் ஹாலிவுட் காட்சிகளில் வருவதுபோல் நம் வீடியோவை எடிட் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் ஆகும். பலவிதமான நுணுக்கமான சேவைகள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவே இருக்கின்றது. ஒருமுறை நாம் பயன்படுத்திவிட்டால் அது கொடுக்கும் சேவையால் மேலும் நம்மை  ஈர்க்கிறது. வீடியோ எடிட்டிங் செய்யத் தெரியாது என்று சொல்லும் நண்பர்களுக்குக் கூட எப்படி வீடியோ எடிட் செய்யலாம் என்று அழகாக சொல்லியும் கொடுக்கிறது. வீடியோ எடிட் செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். மென்பொருள் தறவிரக்க முகவரி  http://www.lightworksbeta.com

No comments:

Post a Comment