Windows 8 operating system குறித்த Microsoft வலைமனையில் இந்த system செயல்படும் விதம் குறித்து செய்திகள் தரப்பட்டு வருகின்றன. இந்த systemல் எப்படி computer ஒன்றின் RAM memory நிர்வகிக்கப்படுகிறது என்பது விளக்கப்பட்டுள்ளது. முதலாவதாக memory combining என்ற வழிமுறை செயல்படுகிறது. Windows system ஒவ்வொரு application புரோகிராம் இயங்கும் போதும் RAM நினைவகத்தில் இடம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. Memory combining செயல்பாடு RAM memory இடத்தைத் தொடர்ந்து scan செய்து ஒரே application புரோகிராம் ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் இயக்கத்திற்கு வந்து அத்தனை முறை memoryயைப் பயன்படுத்தி இருந்தால் அதனை விடுவிக்கிறது. இதன் மூலம் 10 முதல் 100 மெகா பைட் அளவில் memory கிடைக்கும்.
Windows system தரும் சில சேவைகளுக்கான புரோகிராம்கள் இயங்க RAM memoryயில் அதிக இடம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. Windows 8 system இத்தகைய 13 சேவை புரோகிராம்கள் இயங்குவது நிறுத்தப் பட்டுள்ளன. சில நாமாக இயக்கும்படி மாற்றப்பட்டுள்ளன. சில சேவை புரோகிராம்கள் “Start on Demand” என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக Windows இயக்கத்தில் அதிகம் பயன்படுத்தப் படாமல் இயங்கும் சில புரோகிராம்கள் தனித்தனியாக இயங்குகையில் அதிக இடம் எடுத்துக் கொண்டன. இவற்றை ஒன்றாக்கிக் குறைந்த அளவில் RAM memoryயினை எடுத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. எந்த புரோகிராம்களுக்கு ஒதுக்கப்பட்ட memoryயை வைத்துக் கொள்வது எவற்றை நீக்குவது என்ற வழியை Windows 8 ஒரு புதிய வழிமுறை மூலம் மேற்கொள்கிறது. எடுத்துக்காட்டாக software application file ஒன்றைத் திறக்கையில் Anti-virus புரோகிராம் அதனைச் சோதனை செய்திட RAM memory-ல் இடம் எடுத்துச் செயல்படுகிறது. இதனை ஒருமுறை மேற்கொண்டால் போதும். எனவே அடுத்த முறை இந்தச் சோதனைக்கான RAM memory இடம் சேமிக்கப்பட்டு இடம் தேவைப்படும் மற்ற புரோகிராம்களுக்குத் தரப்படுகிறது. இவ்வாறு பல வழிமுறைகள் போல இன்னும் சிலவும் Windows 8 systemல் நிர்வாக நடைமுறைகளாக வர இருக்கின்றன.
இவற்றின் இயக்கத்தால் 1 அல்லது 2 GB RAM memory இடம் கொண்ட computerகளில் RAM memory தேவையானதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு கம்ப்யூட்டர் இயக்கத்தில் மந்த நிலை ஏற்படாது. Windows 7 system இயங்க குறைந்தது 404 MB RAM எடுத்துக்கொள்ளும். Windows 8 system 281 MB மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளது. எனவே RAM memory இடம் இல்லாததனால் applicationகள் இயங்குவது தாமதமாகின்றன என்ற குறை இனி இருக்காது.
No comments:
Post a Comment