கோப்புகளை சுருக்கி பதிந்து காப்பதில் வெகு காலமாகப் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படும் மென்பொருள் Win Zip. இதன் பதிப்பு 16 அண்மையில் வெளியாகியுள்ளது. இந்த பதிப்பில் 64 பிட் இஞ்சின் பயன்படுத்தப்படுவதால் சுருக்கி விரிக்கும் பணி தற்போது அதிக வேகமாகவும், எளிதாகவும் மேற்கொள்ளப்படுகிறது.சுருக்கப்பட்ட கோப்பு பெரியதாக இருந்தால் மின்னஞ்சலில் அனுப்புவது இயலாது. இதற்கு புதியதாக Zip Send என்ற வசதி தரப்பட்டுள்ளது. You Send It என்ற இணையத்தளத்தின் கூட்டுடன் 50 எம்.பி சுருக்கப்பட்ட கோப்பு அனுப்பப்படுகிறது.
நீங்கள் ஏற்கனவே Zip Send Pro தளத்தின் பயனாளர் என்றால் இந்த அளவு 2 ஜிபி வரை அனுமதிக்கப்படுகிறது. அடுத்த புதிய வசதி Zip Share.
இதன் மூலம் Zip செய்யப்பட்ட கோப்பை cloud computing வசதிக்கு அனுப்பி விட்டு, அதற்கான link ஒன்றை Facebook தளத்தில் நம் நண்பர்கள் தரவிறக்கம் செய்திட வசதியாக அனுப்பலாம்.
எதிர்காலத்தில் பயன்படுத்தக் கூடிய வகையில் Zip to Bluray என்ற ஒரு வசதி கிடைக்கிறது. இதன் மூலம் சுருக்கப்பட்ட தகவலினை 50 ஜிபி அளவில் ஒரு புளுரே டிஸ்க்கில் பதிய முடியும்.
புளுரே டிஸ்க் பயன்பாடு பரவலாகக் கிடைக்கையில் இதனை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். மொத்தத்தில் ஏற்கனவே பல வசதிகளைக் கொண்டுள்ள Win Zip programeல் கூடுதல் பயன்பாடு பல சேர்க்கப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்திட http://www.winzip.com/downwz.htm
கணினியின் செயல் திறனை வேகபடுத்த அனைவரும் நம் கணினியை Defragment செய்வோம். Defragment என்பது நாம் கணினியில் சேமிக்கப்படும் அனைத்து பைல்களும் சிறு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு நம் கணினியில் சேமிக்கப்படும். இவை அனைத்தையும் வரிசையாக அடுக்கி வைப்பதே Defragment ஆகும். இதைச் செய்ய நம் கணினியிலேயே வசதி இருந்தாலும் அதில் செய்தால் வெகு நேரம் காத்துக் கிடக்க வேண்டும். வேகமாகவும் மிகவும் எளிதாகவும் செய்ய ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.

ஒரு சில வரிகளில் வாழ்க்கையின் தத்துவத்தை உலகுக்கு உணர்த்துவது பொன்மொழிகள் தான். பல அறிஞர்கள் அவர்களின் அனுபவத்தினாலும், அறிவுத்திறமையாலும் சில பொன்மொழிகளை இந்த உலகுக்கு அளித்து இருப்பார்கள்.
Ultra Slow motion camera தான் cricket போட்டியில் மிக முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.
எதிர்பாராத விதமாக நம்மை அறியாமல் நாம் அழித்த கோப்புகளை மீட்பதில் நமக்குப் பெரிய அளவில் சிறப்பாக உதவிடும் programmeகளில் ஒன்று ரெகுவா (Recuva). இதன் புதிய பதிப்பு 1.42.544 அண்மையில் வெளியாகி உள்ளது.
Google + தளத்தில் Page வசதியை Google நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இதன் மூலம் பெரும்பாலானவர்கள் தங்கள் நிறுவனங்களுக்கும், வலைப்பூக்களுக்கும் தனியாக Page உருவாக்கலாம்.