Sony Ericsson நிறுவனததினர் தற்போது இந்தியாவில் Walkman smartphone-ஐ அறிமுகம் செய்துள்ளனர். Sony Music-ல் இருந்து 2GB அளவுள்ள பாடல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். Aircel வடிக்கையாளர்கள் Walkman Smartphone-ஐ வைத்திருந்தால் 20 முழு நீல பாடல்களை இலவ்சமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் விவரக்குறிப்புகள் பின்வருமாறு
3.2-inch TFT Capacitive Touchscreen with a 320 x 480 pixel resolution
1GHz Scorpion processor, 512 MB of RAM
Android 2.3 Gingerbread
320MB internal storage
3G, EDGE/GPRS, Wi-Fi ‘n’
GPS with A-GPS support
Bluetooth 3.0 with A2DP, USB 2.0
5MP auto-focus camera with LED flash, 720p video recording
அனைவருக்கும் தங்களது உடல்நலம் குறித்து தகவல் அறியவும், உடல் நலத்தை பாதுகாக்க என்ன செய்திட வேண்டும் என்பது குறித்தும் தகவல் அளிக்கிறது Family Doctor என்ற இணையத்தளம். http://familydoctor.org/familydoctor/en.html
இந்த தளம் எளிதில் உபயோக்கப்படுத்தும்படி வடிவமைப்பட்டுள்ளது. இதில் Home, Conditions A to Z, Women, Men, Smart Patient Guide, Parents & Kids, Healthy Living, Senior Living, and OTC Guide எனப் பல பிரிவுகளில் தகவல்களைப் பெறலாம்.
இந்த தளத்தில் உள்ள தேடல் கட்டத்தில் உங்களுக்கு வேண்டிய தகவல்களை type செய்தும் பெறலாம். இதன் முதன்மைப் பக்கத்தில் நம் உடல்நிலை எப்படி உள்ளது என்ற பிரிவில் click செய்தும் தகவல் பெறலாம்.
மேலும் இந்த தளத்தில் health tips அளிக்கப்படுகின்றன. கூடுதலாக நோய் அறிகுறி, நோய் அகராதி, மருந்து குறித்த தகவல்கள் எனவும் தகவல்களைப் பெறலாம்.
தகவல்களை தேட உதவும் தேடல் வசதியிலும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றது. தேடல் வசதியில் மிகச் சிறந்த முடிவினை Mozilla Firefox உலாவி மூலம் பெறலாம். பல்வேறு வசதிகளை உள்ளடக்கி புதுப் புது பதிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றது. தற்பொழுது Mozilla Firefox-ன் பதிப்பான 10 உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் 3D கிராபிக்ஸ் வசதி உள்ளது. இதற்கு முன்பு இருந்த பதிப்பு 9ல் அதிக டூல்பார் வசதி வந்தது. இதில் கூடுதலாக Java Script தொழில்நுட்பத்தினை பெற முடிந்தது. ஆனால் தற்பொழுது வெளியான இந்த பதிப்பில் கூடுதல் வசதிகள் உள்ளடங்கியுள்ளது.
இந்த பதிப்பு கடந்த 27ம் திகதி வெளியிடப்பட்டது. இந்த பதிப்பை windows, மேக் மற்றும் Linux இயங்குதளங்களில் தரவிறக்கி உபயோகப்படுத்தலாம்.
Games வசதிகளை support செய்வதற்காக பல நிறுவனங்கள் தங்கள் டேப்லெட்டுகள், smart phones மற்றும் notebook-களை அதிக சக்தி கொண்ட அளவில் உருவாக்குகின்றனர். குறிப்பாக இந்த devives RAM, processors மற்றும் graphics அக்சிலரிங் யூனிட்டுகள் போன்றவை அதிக செயல் திறனுடன் இருக்கும்.
அந்த வகையில் தற்போது லெனோவா நிறுவனம் ஒரு புதிய நோட்புக்கை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த புதிய நோட்புக்கின் பெயர் Idea Pad Y470p ஆகும். இந்த நோட்புக் வெளி வருவதற்கு முன்பாகவே ஏராளமான ஆர்டர்கள் குவிந்து விட்டன. இந்த புதிய நோட்புக் பழைய Y470 நோட்புக்கிற்கு அடுத்து வந்துள்ளது.
இந்த நோட்புக்கின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது 14 inch அளவில் HD வசதி கொண்ட அகல திரையைக் கொண்டிருக்கிறது. இந்த திரையின் pixel resolution 1366 x 768 ஆகும். கேமராவைப் பொருத்த மட்டில் இந்த நோட்புக் வீடியோ recording வசதி கொண்ட 2 மெகா பிக்சல் webcam கொண்டுள்ளது.
அதுபோல் சேமிப்பு வசதியைப் பார்த்தால் இந்த நோட்புக் 8GB DDR3 RAM, 750 GB (5400 ஆர்பிஎம்) HDD அல்லது 1TB HDD (தேவைப்பட்டால்)யைக் கொண்டுள்ளது. தகவல்களைக் கையாள wifi 02.11 பி/ஜி/என், இடிஆருடன் கூடிய bluetooth v2.1, USB 3.0 மற்றும் HDMI out போன்ற அணைத்து இணைப்பு வசதிகளையும் இந்த நோட்புக் வழங்குகிறது.
மின் திறனிற்காக இந்த நோட்புக் 6 செல் கொண்ட பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இந்த பேட்டரி 4 – 5 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. மேலும் இந்த நோட்புக்கில் 6 இன் 1 card reader-ம் உண்டு. மற்ற அம்சங்களைப் பார்க்கும் போது இந்த Y470p நோட்புக் ஜிகாபிட் எர்த்நெட் போர்ட் மற்றும் ப்ளூரே ட்ரைவையும் கொண்டிருக்கின்றது. இதன் எடை 4.9 பவுண்டுகள் மட்டுமே.
மேலும் இந்த நோட்புக் விண்டோஸ் 7 Home Premium 64 பிட் இயங்கு தளத்தில் இயங்குகிறது. அதுபோல் CPU Intel Core i7 2670 processor (2.2 ஜிஹெர்ட்ஸ், 6 எம்பி கேச்) மற்றும் ஜிபியு எஎம்டி ரேடியோன் எச்டி 7690 மற்றும் 1 ஜிபி மெமரியையும் கொண்டிருக்கிறது. இதன் சந்தை விலை இன்னும் வெளியிடப்படவில்லை. இது 1200 அமெரிக்க dollar-கள் இந்திய ரூபாயில் சுமார் 60,000/- இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பதினெட்டு மாதக் குழந்தையின் அசாத்தியச் செயல் அனைவரின் கண்களையும் உயர்த்த வைத்துள்ளது.உலகின் மிகவும் இளமையான செப்பில் டென்னிஸ் நட்சத்திரமாக இந்தக் குழந்தை இருக்கின்றது.
Jamie Myskova-Buddell என்ற இந்தக் குழந்தை தனது அப்பாவுடன் தான் விளையாடும் போது ஒரு கலக்கு கலக்குகின்றது.
எங்கே நீங்களும் பாருங்களேன் அந்த சுட்டிக் குழந்தையின் அசாத்திய வீடியோவை…
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தற்போது பேஸ்புக்கிலும் கலக்க ஆரம்பித்துள்ளார். இன்றைய இளைஞர்களின் முகமாக மாறிப் போயுள்ள facebook-ல் கலாமின் கருத்துக்கள் அவ்வப்போது இடம் பெற்று அவரது ரசிகர்களை குஷிப்படுத்த ஆரம்பித்துள்ளது.
இந்தியாவில் இந்த facebook ஹிட்டாகியுள்ளதாம். கலாம் தொடர்பாக ஏற்கனவே பல facebook பக்கங்கள் இருந்தாலும், அதிகாரப்பூர்வமாகவே தானே facebook குளத்தில் குதித்துள்ளார் கலாம்.
http://www.facebook.com/OfficialKalam என்பதுதான் கலாமின் facebook முகவரியாகும். உருவாகி சில தினங்களே ஆனாலும் கூட விருப்பதாரர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தைத் தாண்டி ஓடி விட்டது.
தான் பங்கேற்ற நிகழ்ச்சிகள், அதில் பேசிய பேச்சுக்கள், அது தொடர்பான புகைப்படங்கள், இளைஞர்களுக்கும் இந்தியர்களுக்கும் தன்னம்பிக்கையூட்டும் வாசகங்கள் என தனது ஸ்டைலில் கலக்கிக் கொண்டிருக்கிறார் கலாம் இந்த facebook-ல்.
தான் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விடை பெற்று ராஷ்டிரபதி பவனிலிருந்து வெளியேறியபோது, அதுதொடர்பாக பத்திரிக்கை ஒன்றில் வெளியான கார்ட்டூனையும் கூட போட்டு அசத்தியுள்ளார் கலாம்.
ரொம்ப அருமையாக உள்ளது இந்த பக்கம், போய் ஒரு எட்டுப் பார்த்து விட்டு வாருங்கள்…
சிறந்த Graphics processing Unit கொண்ட லேப்டாப்புகள் விற்பனையில் கொடி கட்டி பறக்கின்றன. அதனால் இப்போது நிறைய நிறவனங்கள் இந்த வகையான Tablet மற்றும் லேப்டாப்புகளைத் தயாரிப்பதில் மிகத் தீவரமாக இருக்கின்றனர். ஆனால் அப்படிப்பட்ட டிவைஸ்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்த softwares தேவைப்படும்.
மிகவும் சக்தி வாய்ந்த டிவைஸ்களைப் பார்த்தால் ஆசஸை மறக்க முடியாது. ஏனெனில் Asus Transformer Prime ஒரு மிகவும் சக்தி வாய்ந்த டேப்லெட் ஆகும். இந்த டேப்லெட் நடுத்தர மற்றும் உயர் தர கேம்களை support செய்கிறது. தற்போது கேமிங் வசதியை முழுமையாக சப்போர்ட் செய்யும் புதிய நோட்புக்கைத் தயாரிக்க இருக்கிறது Asus. அந்த நோட்புக்கில் மைக்ரோசாப்ட்டின் connect motion sensing controller என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த இருக்கிறது.
குறிப்பாக புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதில் Asus பல முறை வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக லேப்டாப்பில் என்விடியாவின் 3D vision sensor பயன்படுத்துவது ஒரு கடினமான காரியம் ஆகும். ஆனால் அதை தனது நோட்புக் பேசிலில் மிக எளிதாகப் பயன்படுத்தியது.
ஆகவே இப்போது Asus connect தொழில் நுட்பத்தை தனது நோட்புக்கில் பயன்படுத்த இருக்கிறது. குறிப்பாக தனது பேசில் நோட்புக்கில் உள்ள கண்ட்ரோலரில் உள்ள கேமரா மற்றும் சென்சார்களை அகற்றி விட்டு இந்த புதிய தொழில் நுட்பத்தை இணைக்க இருக்கிறது. எனவே வரும் புதிய டேப்லெட் நிறைய சென்சார்களோடு மிகவும் ஸ்டைலாக இருக்கும். மேலும் இந்த லேப்டாப் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்கும். இந்த தொழில் நுட்பத்தின் மூலம் Asus-ன் லேப்டாப்பில் அருமையாக கேம் விளையாடலாம்.
புனேயில் உள்ள அபிநவ் வித்யாலயா ஆங்கில வழி உயர்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் இந்தச் சாதனையாளர் பெயர் விக்னேஷ் சுந்தர்ராஜன். இவர் http://www.zettaconnect.co.in/index.php/en/ என்ற புதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இது Facebook போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை இணைப்பதே நோக்கம் என்று விக்னேஷ் கூறியுள்ளார்.
நான்கு மாதங்கள் கடுமையான உழைப்பிற்குப் பிறகு இந்த புதிய சமூக வலைதளத்தை அவர் கடந்த மாதம் 21-ஆம் தேதி வெளியிட்டுள்ளார். இந்த Zettaconnect லாபம் ஈட்டும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது அல்ல என்றும் தெரிவித்துள்ளார். 14 வயது நிரம்பிய விக்னேஷின் முயற்சியும் பெரிய வெற்றியை தேடித் தரட்டும் என்று வாழ்த்துவோம்.
இணையச் செயல்பாட்டில் ஒவ்வொரு தகவலும் தகவல் பாக்கெட்டாக network வழியே அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்ப ஒவ்வொரு network அமைப்பும் அடுத்தடுத்த network தளத்தினை அடைய ஒரு internet protocol முகவரி தேவைப்படுகிறது.
இணையத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு முகவரி மாறுகிறது. இதனை எப்படி அமைத்திட வேண்டும் என்பதனை பன்னாட்டளவில் பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கும் இன்டர்நெட் அமைப்பு முடிவெடுக்கிறது. இவற்றை இன்டர்நெட் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. இது போன்ற ஒரு பொது கட்டமைப்பில் இருந்தால் தான் அனைத்து இன்டர்நெட் செயல்பாடுகளும் அனைவராலும் இயக்கப்பட முடியும்.
இதுவரை IPv4 என்ற கட்டமைப்பில் இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கட்டமைப்பில் மேற்கொண்டு பெயர்களை அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
எனவே புதிய கட்டமைப்பு IPv6 என்ற பெயரில் Internet Society-யினால் அமைக்கப்பட்டு இதுவரை சோதனை செய்து பார்க்கப்பட்டது. இது அனைத்து வழிகளிலும் சரியானது என்று உறுதி செய்யப்பட்டதால் இனி அந்த அமைப்பே பின்பற்றப்படும். இதற்கான அறிமுக நாள் வரும் ஜூன் 16 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் வரலாற்றில் இந்த இன்டர்நெட் பெயர் அமைப்பு அறிமுகம் செய்யப்படும் நாள் மிக முக்கியமான நாளாக வரும் காலத்தில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. IPv4 அமைப்பு முகவரியில் (32 பிட் கட்டமைப்பு) ஏறத்தாழ 400 கோடி இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்படும். 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே இதன் 90% பயன்படுத்தப்பட்டு விட்ட நிலை உருவானது. நாளுக்கு நாள் இன்டர்நெட் தளங்களும் அவற்றிற்கான பெயர்களும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் IPv4 அமைப்பில் மேலும் பெயர்களை உருவாக்க இயலாத நிலை எட்டப்பட்டுவிடும் என்ற அபாயம் உணரப்பட்டது. இதனால் IPv6 (128 பிட்) அமைப்பு உருவாக்கப்பட்டது.
IPv6 அமைப்பில் 340 undecillion முகவரிகளை அமைக்கலாம். இந்த எண்ணிக்கையை எண்களில் சொல்வது எனில் 340 எழுதி பின்னால் 36 சைபர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இது முந்தைய அமைப்பினைக் காட்டிலும் எளிதான முறையில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இனி இரண்டு அமைப்புகளிலும் உருவாக்கப்பட்ட முகவரிகளை இன்டர்நெட்டில் இயங்கும் network நிறுவனங்கள் கையாளும்.
இணையத்தில் வீடியோக்களை பார்க்க பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது Youtube தளம். தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள இந்த தளத்தில் புதிதாக upload செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் அந்த வீடியோக்களை பார்க்கின்றனர். குறிப்பாக இந்திய பயனர்கள் சராசரியாக ஒரு மாதத்திற்கு 55 வீடியோக்களுக்கு மேல் பார்க்கிறார்களாம். Youtube-ல் நாம் ஏதாவது வீடியோவை open செய்தால் முதலில் அவர்களின் விளம்பரங்கள் ஓடும். அந்த விளம்பரங்கள் முடிய குறைந்த பட்சம் ஒரு நிமிடம் ஆகும். அது வரை நாம் காத்து இருக்க வேண்டும். அந்த விளம்பரம் முடிந்த பிறகு தான் வீடியோவை காண முடியும்.
வீடியோ ஓடிக் கொண்டிருக்கும் பொழுதும் இடையில் இந்த விளம்பரம் வீடியோ தோன்றி எரிச்சலை உண்டாக்கும். இந்த பிரச்சினையை தீர்த்து Youtube-ல் எந்த விளம்பர தொல்லையுமின்றி வீடியோக்கள் காண்பது எப்படி என இங்கு காணலாம்.
இதற்கு ஒரு குரோம் நீட்சி உள்ளது நீங்கள் குரோம் உலவி உபயோகித்து கொண்டிருந்தால் இந்த நீட்சியை உங்கள் உலவியில் install செய்து கொள்ளுங்கள்.இந்த நீட்சியை install செய்தவுடன் Youtube வீடியோவில் ஏதேனும் விளம்பரம் வந்தால் மேலே உள்ள சிறிய நீல நிற button அழுத்தினால் அந்த விளம்பரம் தவிர்க்கப்பட்டு விடும். நேரடியாக original வீடியோவை காணலாம்.
BLU நிறுவனம் Latin America Tablet சந்தையில் உள்ள ஒரு முன்னணி நிறுவனம் ஆகும். அந்த நிறுவனம் உலக அளவில் online சில்லறை வர்த்தகத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிறுவனம் பல devices அறிமுகப்படுத்தி இருக்கிறது. இப்போது அந்நிறுவனம் Touch book 7.0 என்ற Tablet அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்த ப்ளூ Touch book 7.0 டேப்லெட்டின் சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் இது ஒரு Android 2.2 FROYO இயங்கு தளத்தைக் கொண்டிருக்கிறது. அதுபோல் 800 MHz கடிகார வேகம் கொண்ட Qualcomm MSM7227-T chipset Processor கொண்டிருக்கிறது.
7.0 inch அளவில் TFT capacitive தொடுதிரை கொண்டுள்ளது. இந்த திரை 133 ppi Pixel அடர்த்தியுடன் கூடிய 480 x 800 pixel resolution கொண்டிருக்கிறது. இதன் RAM memory 512 எம்பி ஆகும். அதுபோல் இதன் ROM memory 512 எம்பி ஆகும். இந்த மெமரியை micro SD card மூலமாக 32 GB வரை அதிகரிக்க முடியும்.
Class 12 (4+1/3+2/2+3/1+4 slots), 32 - 48 kbps GPRS, EDGE, HSDPA, 7.2 Mbps; HSUPA, 5.76 Mbps 3G, WLAN, A2DP இணைப்புடன் கூடிய bluetooth v2.1, micro USB மற்றும் GPS போன்ற அணைத்து இணைப்பு வசதிகளையும் அளிக்கிறது.
இதன் முக்கிய கேமரா 2048×1536 (3.15 எம்பி) pixels கொண்டிருக்கிறது. இதில் வீடியோ பதிவை செய்ய முடியும். அதுபோல் துணையாக VGA கேமராவும் இதில் உண்டு. மின் திறனிற்காக இந்த ப்ளூ டேப்லெட் 4250 mAh Li-Ion battery கொண்டுள்ளது. இந்த பேட்டரி இந்த டேப்லெட்டுக்கு 500 மணி நேர standby time, 12 மணி நேர இயங்கு நேரத்தையும் அளிக்கிறது என நிறுவனம் தெரிவிக்கின்றது.
இந்த டேப்லெட்டின் மொத்த பரப்பு 197மிமீ x 120 மிமீ x 13.2 மிமீ ஆகும். அதுபோல் இதன் எடை 382 கிராம் மட்டுமே. இந்த டேப்லெட்டின் விலை ரூ.12,000 ஆகும்.
கணினியில் Windows Media Player நிறுவப்பட்டிருக்கும் போதிலும் வீடியோ, audio-க்களை இயக்குவதற்கு அதிகமானோர் பயன்படுத்தப்படும் மென்பொருள் VLC Media Player ஆகும்.
Windows Media Player-ல் நிறைய வீடியோ format-களை பார்க்க முடியாது. ஆனால் VLC Media Player-ல் அதிகளவு வீடியோ, audio format-களை இயக்க முடியும்.
இப்பொழுது மேலும் பல வசதிகளுள் VLC 2.0.0 RC1 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பழைய பதிப்பை பயன்படுத்துபவர்கள் இப்பொழுது இந்த புதிய பதிப்பை நிறுவி அதன் பயன்களை பெறலாம்.
இதில் இயக்கக்கூடிய வீடியோ formats
MPEG-1/2,
DIVX (1/2/3),
MPEG-4 ASP, DivX 4/5/6, XviD, 3ivX D4
H.261,
H.263 / H.263i,
H.264 / MPEG-4 AVC,
Cinepak,
Theora
Dirac / VC-2
MJPEG (A/B)
WMV 1/2
WMV 3 / WMV-9 / VC-1
Sorenson 1/3 (Quicktime)
DV (Digital Video)
On2 VP3/VP5/VP6
Indeo Video v3 (IV32)
Indeo Video 4/5 (IV41, IV51)
Real Video 1/2, Real Video 3/4
இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகள் உணவுப் பண்டங்களை தயாரித்து வெளியில் விற்பனை செய்து வருகின்றனர்.
கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பூஜப்புரா மத்திய சிறைச்சாலை மற்றும் திருச்சூரில் உள்ள வையூர் மத்திய சிறைச்சாலை மற்றும் கோழிக்கோடு மாவட்ட சிறைச் சாலைகளில் உள்ள சிறைக் கைதிகள் சப்பாத்தி, கோழிக்கறி, வெஜிடபிள் குருமா ஆகியவற்றை தயாரித்து வெளியில் விற்பனை செய்கின்றனர்.
சப்பாத்தி தயாரிப்பில் பெரும்பாலும் ஆயுள் தண்டனை கைதிகள் ஈடுபடுத்தப்படுவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக பூஜப்புரா சிறையில் ரூ.5 கோடி செலவில் சப்பாத்தி செய்ய பயன்படும் இரண்டு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாக சிறை கண்காணிப்பாளர் பி.பிரதீப் கூறியுள்ளார்.
இங்கு தினமும் 40,000 சப்பாத்திகள், 3,500 கோழிக்கறி parcels மற்றும் 500 வெஜிடபிள் குருமா parcels தயார் செய்யப்படுகிறது.
இந்த உணவுப்பண்டங்களை தயாரித்து வெளியில் 3 இடங்களில் வைத்து விற்பனை நடைபெறுகிறது. 5 சப்பாத்திகள் மற்றும் கோழிக்கறி ரூ.25க்கும், 5 சப்பாத்திகள் மற்றும் வெஜிடபிள் குருமா ரூ.20க்கும்(இந்திய ரூபாய்) விற்பனை செய்யப்படுகிறது. இந்த உணவை ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர்.
இந்த தொழிலில் பெரும்பாலும் சிறை வளாகத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளே உபயோகப்படுத்தப்படுகின்றது. அரசு அங்காடிகளில் இருந்து தேவைக்கு காய்கறிகள் மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்கள் வாங்கப்படுகின்றது.
இது தவிர, முன்பதிவின் பெயரில் மொத்தமாகவும் உணவுப் பொருட்களை செய்து கொடுக்கின்றனர். இந்த முயற்சி விரைவில் பெண்கள் சிறையிலும் பின்பற்றப்படும் என்றும் பெண்கள் சார்பில் இட்லி, சாம்பார், சட்னி செய்ய ஏற்பாடு செய்யப்படும் எனவும் சிறை கண்காணிப்பாளர் பி.பிரதீப் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன் மற்றும் தாமிரபரணி படத்தின் கதாநாயகி பானு மற்றும் மலையாள திரைநடிகர்கள் கலந்து கொண்டனர்.
கோபியன் நிறுவனத்தின் துணை நிறுவனமான மெர்க்குரி Mercury mTab Neo என்ற புதிய டேப்லெட்டை களமிறக்குகிறது. இந்த நியோ டேப்லெட் 3ஜி வசதி கொண்டது.
இந்த நியோ டேப்லெட் 7 inch multi touch displayவசதியும், 1 GHz Dual Core Processor4ஜிபி Internal Memory, 32 ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய அளவிற்கு External மெமரியையும் கொண்டிருக்கிறது. அதற்கான micro SD card இதில் உண்டு.
இந்த நியோ டேப்லெட் 2 கேமராக்களைக் கொண்டுள்ளது. அதாவது 2 MB ரியர் கேமராவையும் மற்றும் 0.3 Mega Pixel resolution கொண்ட முகப்புக் கேமராவையும் கொண்டுள்ளது. இதன் பேட்டரி 4000 mh ஆகும்.
இந்த நியோ டேப்லெட் மற்ற டேப்லெட்டுகளை விட இது சற்று தடிமனாக இருக்கும். ஆனால் இதை மிக எளிதாக வெளியில் எடுத்துச் செல்ல முடியும். இந்த டேப்லெட்டின் கீழ் பகுதியில் 4 touch sensitive buttons உள்ளன. அதுபோல் வீடியோ காலிங் கேமரா திரைக்கு மேல் நடுவில் உள்ளது.
இந்த நியோ டேப்லெட்டின் HD display பளிச்சென்று இருக்கும். Media சார்ந்த அப்ளிகேசன்களை இந்த டேப்லெட்டில் மிக வேகமாக இயக்க முடியும்.
இந்த புதிய நியோ டேப்லெட் 3ஜி நெட்வொர்க் மற்றும் சிம் சப்போர்ட்டையும் வழங்குகிறது. அதனால் இதை ஒரு சாதாரண மொபைல் போன் போன்றும் பயன்படுத்தலாம். இதன் 3ஜி நெட்வொர்க் வசதி தகவல் பரிமாற்றத்திற்கும் மிகவும் ஏதுவாக இருக்கும்.
இந்த நியோ டேப்லெட்டின் விலை ரூ.16,000 ஆகும். மேலும் இது 1 வருடம் உத்திரவாதத்துடன் வருகிறது.
உலகிலுள்ள மோசமான ஆபத்து நிறைந்த பாதையாகவே இந்தப் பாதை காட்சியளிக்கின்றது. தைரியமான மாணவர்கள் மட்டும் தான் கல்வி கற்பதற்கு இத்தகைய பாலங்கள் மூலம் செல்லலாம்.
கயிறு மற்றும் மரச் சீற்றுக்களைக் கொண்டு கட்டப்பட்ட இந்தப் பாலத்தின் இன்றைய நிலையும் அதில் பயணம் செய்யும் மாணவர்களையுமே படங்களில் பார்க்கின்றீர்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் Ciberang river in Lebak என்ற இடத்தில் தான் மேற்படி பாலம் அமைக்கப்படுள்ளது.
தற்போது வெள்ளம் ஒன்று வந்து அடித்துச் சென்றதினால் தான் பாலம் வித்தியாசமான வடிவத்துக்கு மாறியுள்ளது.