Pages

23 Mar 2012

பாட்டி வைத்தியம்


 

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். சளி, இருமல், தொண்டை வலிக்கு நம்ம பாட்டியோட கை வைத்தியந்தான் இருக்கவே இருக்கே. பித்த வெடிப்புக்கும் நம்ம பாட்டியோட சூப்பரான க்ராக் க்ரீம் இதோ.....

தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

தொண்டை வலிக்கு

பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

இருமல் தொல்லைக்கு

தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும். 

22 Mar 2012

பாட்டி வைத்தியம்


 

இருமல் சளிக்கு

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும். 

கட்டிகள் உடைய 

மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும். 

பேன் தொல்லை நீங்க

வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும். 

மேனி பளபளப்பு பெற

ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.

தும்மல் வராமல் இருக்க

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது. 

கரும்புள்ளி மறைய

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

தொண்டை கரகரப்பு நீங்க

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

கருத்தரிக்க உதவும்

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

இருமல் சளி குணமாக

சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.






21 Mar 2012

மனித மனம்


மனிதனுக்கு மனிதன் எதிரியாகும் இந்த கலிகாலத்தில் மனிதன் நட்புக்காகவும், அன்புக்காகவும் மிருகங்களை தேடிச் செல்லும் நிலை தோன்றிவிட்டதோ? என்று எண்ண வைக்கின்றன சில அதிசய நிகழ்வுகள்.
சிங்கங்களை மட்டும் வைத்து உருவாக்கிய மிருகக்காட்சிச் சாலை ஒன்றில் அங்குள்ள சிங்கங்களை பல வருடங்களாக பராமரித்து வந்த நபர் ஒருவர் நிரந்தரமாக பிரிந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
எனினும் தான் அன்பு செலுத்தி உணவு கொடுத்து வளர்த்த சிங்கங்களை பிரிய மனம் இன்றி சோகத்துடன் விடைபெற்றுள்ளார் அந்த மனிதாபிமானம் படைத்த மனிதர்.


20 Mar 2012

கிரீஸ் நாடு கடன் சிக்கலில்


ஐரோப்பிய நாடுகளுக்குப் பொதுவான பணமாக யூரோ அறிவிக்கப்பட்ட போது அந்நாடுகளின் பொருளாதார நிலை வெவ்வேறாக இருந்தது. அதைக் கருத்தில் கொள்ளாமல் ஐரோப்பாவின் 27 நாடுகளில், 17 நாடுகளுக்கு பொதுவான பணமாக யூரோ அங்கீகரிக்கப்பட்டு விட்டதால் தற்போது கிரீஸ் நாடு சிக்கலில் தவிக்கிறது. கிரீஸ் நாட்டில் 2001ம் ஆண்டு யூரோ அறிமுகப்படுத்தப்பட்டது. 2002 பிப்ரவரி வரை அதன் பழைய பணமான டிராச்மா புழக்கத்தில் இருந்தது.

இன்னும் கூட டிராச்மா விலிருந்து முற்றிலுமாக கிரீஸ் மாறிவிடவில்லை. பழைய பணத்திலிருந்து மாற வரும் 2012 மார்ச் வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் கிரீஸ் திவாலாகும் சூழல் உருவாகி விட்டது.

யூரோ மண்டல பொருளாதார நிலையில் சிக்கல் ஏற்பட்டால் சமாளிக்க இ எப்.எஸ்.எப். என்ற ஐரோப்பிய நிலைத்த நிதியமைப்பு 2010மே மாதம் உருவாக்கப்பட்டது. இது, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள நாடுகளுக்கு, கடன் பத்திரங்கள் வழங்கி அதன் மூலம் அந்நாடுகளின் வங்கிகளின் நிதி நிலையைச் சீராக்கும் பணியை மேற்கொள்ளும்.

தற்போது இந்த அமைப்பு மட்டும் தனியாக கிரீசை மீட்கும் நிலை இல்லை.எனவே தான் சர்வதேச நிதியமைப்பின் உதவி கோரப்பட்டுள்ளது. சர்வதேச நிதிமைப்பில் டெபாசிட் செய்துள்ள பணத்தின் சதவீத அடிப்படையில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஐரோப்பிய நாடுகள் அதிலிருந்து கடன் பெற்றுக் கொள்ளவும் கிரீசை மீட்டெடுக்கத் தேவையான பணத்தைத் திரட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் 200 பில்லியன் டாலர் திரட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை ஆறு மாதத்திற்குள் மேற்கொள்ளப்பட்டால் யூரோ மண்டல கடன் நெருக்கடி ஓரளவு கட்டுக்குள் வரும்