Pages

20 Mar 2012

கிரீஸ் நாடு கடன் சிக்கலில்


ஐரோப்பிய நாடுகளுக்குப் பொதுவான பணமாக யூரோ அறிவிக்கப்பட்ட போது அந்நாடுகளின் பொருளாதார நிலை வெவ்வேறாக இருந்தது. அதைக் கருத்தில் கொள்ளாமல் ஐரோப்பாவின் 27 நாடுகளில், 17 நாடுகளுக்கு பொதுவான பணமாக யூரோ அங்கீகரிக்கப்பட்டு விட்டதால் தற்போது கிரீஸ் நாடு சிக்கலில் தவிக்கிறது. கிரீஸ் நாட்டில் 2001ம் ஆண்டு யூரோ அறிமுகப்படுத்தப்பட்டது. 2002 பிப்ரவரி வரை அதன் பழைய பணமான டிராச்மா புழக்கத்தில் இருந்தது.

இன்னும் கூட டிராச்மா விலிருந்து முற்றிலுமாக கிரீஸ் மாறிவிடவில்லை. பழைய பணத்திலிருந்து மாற வரும் 2012 மார்ச் வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் கிரீஸ் திவாலாகும் சூழல் உருவாகி விட்டது.

யூரோ மண்டல பொருளாதார நிலையில் சிக்கல் ஏற்பட்டால் சமாளிக்க இ எப்.எஸ்.எப். என்ற ஐரோப்பிய நிலைத்த நிதியமைப்பு 2010மே மாதம் உருவாக்கப்பட்டது. இது, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள நாடுகளுக்கு, கடன் பத்திரங்கள் வழங்கி அதன் மூலம் அந்நாடுகளின் வங்கிகளின் நிதி நிலையைச் சீராக்கும் பணியை மேற்கொள்ளும்.

தற்போது இந்த அமைப்பு மட்டும் தனியாக கிரீசை மீட்கும் நிலை இல்லை.எனவே தான் சர்வதேச நிதியமைப்பின் உதவி கோரப்பட்டுள்ளது. சர்வதேச நிதிமைப்பில் டெபாசிட் செய்துள்ள பணத்தின் சதவீத அடிப்படையில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஐரோப்பிய நாடுகள் அதிலிருந்து கடன் பெற்றுக் கொள்ளவும் கிரீசை மீட்டெடுக்கத் தேவையான பணத்தைத் திரட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் 200 பில்லியன் டாலர் திரட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை ஆறு மாதத்திற்குள் மேற்கொள்ளப்பட்டால் யூரோ மண்டல கடன் நெருக்கடி ஓரளவு கட்டுக்குள் வரும்

No comments:

Post a Comment