Pages

23 Mar 2012

பாட்டி வைத்தியம்


 

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். சளி, இருமல், தொண்டை வலிக்கு நம்ம பாட்டியோட கை வைத்தியந்தான் இருக்கவே இருக்கே. பித்த வெடிப்புக்கும் நம்ம பாட்டியோட சூப்பரான க்ராக் க்ரீம் இதோ.....

தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

தொண்டை வலிக்கு

பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

இருமல் தொல்லைக்கு

தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும். 

22 Mar 2012

பாட்டி வைத்தியம்


 

இருமல் சளிக்கு

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும். 

கட்டிகள் உடைய 

மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும். 

பேன் தொல்லை நீங்க

வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும். 

மேனி பளபளப்பு பெற

ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.

தும்மல் வராமல் இருக்க

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது. 

கரும்புள்ளி மறைய

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

தொண்டை கரகரப்பு நீங்க

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

கருத்தரிக்க உதவும்

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

இருமல் சளி குணமாக

சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.






21 Mar 2012

மனித மனம்


மனிதனுக்கு மனிதன் எதிரியாகும் இந்த கலிகாலத்தில் மனிதன் நட்புக்காகவும், அன்புக்காகவும் மிருகங்களை தேடிச் செல்லும் நிலை தோன்றிவிட்டதோ? என்று எண்ண வைக்கின்றன சில அதிசய நிகழ்வுகள்.
சிங்கங்களை மட்டும் வைத்து உருவாக்கிய மிருகக்காட்சிச் சாலை ஒன்றில் அங்குள்ள சிங்கங்களை பல வருடங்களாக பராமரித்து வந்த நபர் ஒருவர் நிரந்தரமாக பிரிந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
எனினும் தான் அன்பு செலுத்தி உணவு கொடுத்து வளர்த்த சிங்கங்களை பிரிய மனம் இன்றி சோகத்துடன் விடைபெற்றுள்ளார் அந்த மனிதாபிமானம் படைத்த மனிதர்.


20 Mar 2012

கிரீஸ் நாடு கடன் சிக்கலில்


ஐரோப்பிய நாடுகளுக்குப் பொதுவான பணமாக யூரோ அறிவிக்கப்பட்ட போது அந்நாடுகளின் பொருளாதார நிலை வெவ்வேறாக இருந்தது. அதைக் கருத்தில் கொள்ளாமல் ஐரோப்பாவின் 27 நாடுகளில், 17 நாடுகளுக்கு பொதுவான பணமாக யூரோ அங்கீகரிக்கப்பட்டு விட்டதால் தற்போது கிரீஸ் நாடு சிக்கலில் தவிக்கிறது. கிரீஸ் நாட்டில் 2001ம் ஆண்டு யூரோ அறிமுகப்படுத்தப்பட்டது. 2002 பிப்ரவரி வரை அதன் பழைய பணமான டிராச்மா புழக்கத்தில் இருந்தது.

இன்னும் கூட டிராச்மா விலிருந்து முற்றிலுமாக கிரீஸ் மாறிவிடவில்லை. பழைய பணத்திலிருந்து மாற வரும் 2012 மார்ச் வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் கிரீஸ் திவாலாகும் சூழல் உருவாகி விட்டது.

யூரோ மண்டல பொருளாதார நிலையில் சிக்கல் ஏற்பட்டால் சமாளிக்க இ எப்.எஸ்.எப். என்ற ஐரோப்பிய நிலைத்த நிதியமைப்பு 2010மே மாதம் உருவாக்கப்பட்டது. இது, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள நாடுகளுக்கு, கடன் பத்திரங்கள் வழங்கி அதன் மூலம் அந்நாடுகளின் வங்கிகளின் நிதி நிலையைச் சீராக்கும் பணியை மேற்கொள்ளும்.

தற்போது இந்த அமைப்பு மட்டும் தனியாக கிரீசை மீட்கும் நிலை இல்லை.எனவே தான் சர்வதேச நிதியமைப்பின் உதவி கோரப்பட்டுள்ளது. சர்வதேச நிதிமைப்பில் டெபாசிட் செய்துள்ள பணத்தின் சதவீத அடிப்படையில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஐரோப்பிய நாடுகள் அதிலிருந்து கடன் பெற்றுக் கொள்ளவும் கிரீசை மீட்டெடுக்கத் தேவையான பணத்தைத் திரட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் 200 பில்லியன் டாலர் திரட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை ஆறு மாதத்திற்குள் மேற்கொள்ளப்பட்டால் யூரோ மண்டல கடன் நெருக்கடி ஓரளவு கட்டுக்குள் வரும்

19 Mar 2012

புத்தாண்டை டிராகன் ஆண்டாக வரவேற்கும் சீனா


ஜனவரி(2012) மாதம் 23ம் திகதி பிறக்கும் சீனப் புத்தாண்டை டிராகன்(Dragon) ஆண்டாக சீனா அறிவித்துள்ளது. 

உலகின் முதல் பறக்கும் கார்!


அதிகரிக்கும் சனத்தொகைப் பெருக்கத்துக்கு ஈடாக வீதிகளின் அகலிப்புக்களும் இல்லாத படியினால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகின்றது.
இன்றைய உலகில் குறிப்பாக நகரங்களில் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறுகின்றது. இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தற்போது தீர்வு காணப்பட்டு விட்டது. கார் வீதியில் போய்க் கொண்டிருக்கும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் ஒரு button அழுத்தியதும் கார் மேலே பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2 சீட்டுக்களுடன் உருவாக்கப்பட்ட கார் 12000 அடி உயரம் வரை பறக்கும் தன்மை கொண்டது.



முதன் முறையாக விண்வெளிக்கு பயணமாகும் பல்லி


உலகில் முதன் முறையாக விண்வெளிக்கு வெப்பத்தை தாங்கக்கூடிய பல்லிகளை அனுப்பும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் உயிரியல் மருத்துவத்திற்கான ரஷ்ய நிறுவனம் பல்லிகளை விண்வெளிக்கு அனுப்பி வைக்கும்.
பல்லிகளின் விண்வெளிப் பயணம் தொடர்பாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், விண்வெளிக்கு மனிதர்களை தெரிவு செய்து, பயிற்சி அளித்து அனுப்புவது போன்றே, பல்லிகளும் அனுப்பப்படுகின்றன என்றார். இதற்கு மிக வலிமையற்ற, உடல்நிலை சரியில்லாத மற்றும் கோபம், ஆத்திரம், படபடப்பு போன்ற உணர்ச்சி அதிகம் உடைய பல்லிகள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்றார்.

மேலும் வீட்டில் இருக்கும் பல்லிகளுக்கு சிறப்பு பயிற்சி அதிகம் தேவைப்படாது. எந்த வெப்பத்தையும் அவற்றால் தாங்கிக் கொள்ள முடியும். எடையற்ற சூழ்நிலை உருவாகும் போதும், புவிஈர்ப்பு விசை குறையும் போதும் இவை தரையிலோ, சுவற்றிலோ, கூரையிலோ ஊர்ந்து செல்லும் இயல்புடையது.
இவற்றை வைத்து ஆராய்ச்சி செய்வதால் மனிதர்கள் பயணிக்கும் போது அவர்களுக்கான உடல்நலப் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். கடந்த 1947ம் ஆண்டில் முதன் முறையாக ஈக்கள் முதன் முறையாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.


15 Mar 2012

புலித் தோற்றத்தில் பிறந்துள்ள குழந்தை









































இன்று உலகில் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத நிகழ்வுகள் நடைபெறுகின்றன. பாகிஸ்தானில் உள்ள கஷ்டபிரதேசமான கிலிஜிட்டில் 2010 ஆம் ஆண்டு பிறந்துள்ள இக்குழந்தையானது புலியினுடைய முகத்தோற்றத்தை கொண்டமைந்துள்ளது. மற்றும் இந்த குழந்தையின் உடம்பில் சிவப்பு வரிகளும் காணப்படுகின்றன. மரபணுவில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு பிறந்துள்ளது என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். Harlequin-type Ichthyosis என்ற மிகவும் அரிதான தோல் நோயே இந்த குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது என குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த நோய் காரணமாக குழந்தையின் வாய் மற்றும் கண் காது ஆகியவற்றில் பக்டீரியா பரவியுள்ளது எனவும் 10 வீதம் மாத்திரமே சத்திரசிகிச்சை மூலம் குணப்படுத்தலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


கடல் சீற்றத்தால் இடம் மாறும் நாடு


பசுபிக் கடல் பகுதியில் கிரிபாதி என்ற சிறிய நாடு அமைந்துள்ளது. இது பவழத்தீவுகளை கொண்டது. கடல் சீற்றம் மற்றும் கடல் நீர்மட்டம் உயர்வினால் இந்த நாட்டு மக்கள் தற்போது பெரிய பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். இங்கு 32 வீடுகளுடன் இருந்த தீவு கடலில் மூழ்கி மாயமாகிவிட்டது.
எனவே இந்த நாடு வேறு இடத்திற்கு இடமாறும் முயற்சி நடந்து வருகிறது. இதன் ஜனாதிபதி அநோடி தோங் இது தொடர்பாக பிஜி நாட்டின் ராணுவ ஆட்சியாளருடன் பேச்சு நடத்தி தன்னுடைய நாட்டு மக்கள் குடியேற சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தானமாக தரும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கையை ஏற்று பிஜி நிலம் கொடுத்தால் கிரிபாதி நாட்டு மக்கள் தங்களது தீவுகளை விட்டு வெளியேறி புதிய இடத்தில் குடியேறுவார்கள்

14 Mar 2012

தாகத்தை தணிக்க மட்டுமல்ல தர்பூசணி…


கோடையில் தாகத்தை தணிக்க பலரும் தர்பூசணியின் தயவை நாடுவது வழக்கம். சாலையோர கடைகளிலும், கோடைகால சிறப்பு ஸ்டால்களிலும் காணக்கிடைக்கும் தர்பூசணி பழத்திற்கு தாகம் தணிக்கும் சக்தியோடு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய மருத்துவர் ஒருவரின் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது.ஆண்மையை அதிகரிப்பதில் வயாகரா மாத்திரையின் சக்தியை விட அதிகமான சக்தி தர்பூசணி பழத்துக்கு உள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கோடைகாலமும் தர்பூசணியும் 
இயற்கையானது அந்தந்த சீசனிற்கு ஏற்ப பழங்களையும், காய்கறிகளையும் விளைவிக்கிறது. கோடையில் உஷ்ணத்தை சமாளிக்க இயற்கை அளித்துள்ள மிகப்பெரும் கொடை தர்பூசணிப் பழம். இது உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு எண்ணற்ற நன்மைகளையும் தருகிறது.
தர்பூசணியில் உள்ள சத்துக்கள்
தர்பூசணி பழத்தில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது. பசலைக்கீரைக்கு சமமான அளவு இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏயும் காணப்படுகின்றன. வைட்டமின் பி6, வைட்டமின் பி1 உள்ளன. மேலும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் காணப்படுகின்றன.
இயற்கை வயாக்கரா
தர்பூசணி பழம் ஓர் இயற்கையான ‘வயாக்ரா’ என்பது தான். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் ஏ&எம் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் இம்ப்ரூவ்மெண்ட் மையத்தின் இயக்குனரான பீமு பாட்டீல் என்பவர் தர்பூசணி பழம் குறித்து மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு வியக்கத்தக்க தகவல்கள் தெரியவந்துள்ளன. அதாவது, ஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.
தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவல் ஒரு இன்ப அதிர்ச்சியாகும். தர்பூசணிக்கு `ஆசையை’ அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ – நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன. இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது.
தர்பூசணியில் உள்ள `சிட்ரூலின்’ என்ற சத்துபொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம்.
இதயநோயாளிகளுக்கும் நன்மை
தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்’, `அர்ஜினைனாக’ எனும் வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த சிட்ரூலின்-அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை செய்கிறதாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
நம் ஊரில் தாகம் தணிக்க தர்பூசணி பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, விதைகளை நீக்கி விட்டு சாப்பிடுவார்கள். இல்லையெனில் பாழத்தை துண்டுகளாக்கி சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவி சாப்பிடுவார்கள். மேலும் பழ ரசமாகவும் சாப்பிடுவார்கள். ஆனால் இந்த கட்டுரையை படித்த பின்னர் பழத்தின் சிவப்பு பகுதியை விட்டு விட்டு வெண்மை பகுதியைத்தான் அதிகம் சாப்பிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.