புனேயில் உள்ள அபிநவ் வித்யாலயா ஆங்கில வழி உயர்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் இந்தச் சாதனையாளர் பெயர் விக்னேஷ் சுந்தர்ராஜன். இவர் http://www.zettaconnect.co.in/index.php/en/ என்ற புதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இது Facebook போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை இணைப்பதே நோக்கம் என்று விக்னேஷ் கூறியுள்ளார்.
நான்கு மாதங்கள் கடுமையான உழைப்பிற்குப் பிறகு இந்த புதிய சமூக வலைதளத்தை அவர் கடந்த மாதம் 21-ஆம் தேதி வெளியிட்டுள்ளார். இந்த Zettaconnect லாபம் ஈட்டும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது அல்ல என்றும் தெரிவித்துள்ளார். 14 வயது நிரம்பிய விக்னேஷின் முயற்சியும் பெரிய வெற்றியை தேடித் தரட்டும் என்று வாழ்த்துவோம்.
இணையச் செயல்பாட்டில் ஒவ்வொரு தகவலும் தகவல் பாக்கெட்டாக network வழியே அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்ப ஒவ்வொரு network அமைப்பும் அடுத்தடுத்த network தளத்தினை அடைய ஒரு internet protocol முகவரி தேவைப்படுகிறது.
இணையத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு முகவரி மாறுகிறது. இதனை எப்படி அமைத்திட வேண்டும் என்பதனை பன்னாட்டளவில் பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கும் இன்டர்நெட் அமைப்பு முடிவெடுக்கிறது. இவற்றை இன்டர்நெட் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. இது போன்ற ஒரு பொது கட்டமைப்பில் இருந்தால் தான் அனைத்து இன்டர்நெட் செயல்பாடுகளும் அனைவராலும் இயக்கப்பட முடியும்.
இதுவரை IPv4 என்ற கட்டமைப்பில் இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கட்டமைப்பில் மேற்கொண்டு பெயர்களை அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
எனவே புதிய கட்டமைப்பு IPv6 என்ற பெயரில் Internet Society-யினால் அமைக்கப்பட்டு இதுவரை சோதனை செய்து பார்க்கப்பட்டது. இது அனைத்து வழிகளிலும் சரியானது என்று உறுதி செய்யப்பட்டதால் இனி அந்த அமைப்பே பின்பற்றப்படும். இதற்கான அறிமுக நாள் வரும் ஜூன் 16 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் வரலாற்றில் இந்த இன்டர்நெட் பெயர் அமைப்பு அறிமுகம் செய்யப்படும் நாள் மிக முக்கியமான நாளாக வரும் காலத்தில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. IPv4 அமைப்பு முகவரியில் (32 பிட் கட்டமைப்பு) ஏறத்தாழ 400 கோடி இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்படும். 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே இதன் 90% பயன்படுத்தப்பட்டு விட்ட நிலை உருவானது. நாளுக்கு நாள் இன்டர்நெட் தளங்களும் அவற்றிற்கான பெயர்களும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் IPv4 அமைப்பில் மேலும் பெயர்களை உருவாக்க இயலாத நிலை எட்டப்பட்டுவிடும் என்ற அபாயம் உணரப்பட்டது. இதனால் IPv6 (128 பிட்) அமைப்பு உருவாக்கப்பட்டது.
IPv6 அமைப்பில் 340 undecillion முகவரிகளை அமைக்கலாம். இந்த எண்ணிக்கையை எண்களில் சொல்வது எனில் 340 எழுதி பின்னால் 36 சைபர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இது முந்தைய அமைப்பினைக் காட்டிலும் எளிதான முறையில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இனி இரண்டு அமைப்புகளிலும் உருவாக்கப்பட்ட முகவரிகளை இன்டர்நெட்டில் இயங்கும் network நிறுவனங்கள் கையாளும்.
இணையத்தில் வீடியோக்களை பார்க்க பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது Youtube தளம். தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள இந்த தளத்தில் புதிதாக upload செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் அந்த வீடியோக்களை பார்க்கின்றனர். குறிப்பாக இந்திய பயனர்கள் சராசரியாக ஒரு மாதத்திற்கு 55 வீடியோக்களுக்கு மேல் பார்க்கிறார்களாம். Youtube-ல் நாம் ஏதாவது வீடியோவை open செய்தால் முதலில் அவர்களின் விளம்பரங்கள் ஓடும். அந்த விளம்பரங்கள் முடிய குறைந்த பட்சம் ஒரு நிமிடம் ஆகும். அது வரை நாம் காத்து இருக்க வேண்டும். அந்த விளம்பரம் முடிந்த பிறகு தான் வீடியோவை காண முடியும்.
வீடியோ ஓடிக் கொண்டிருக்கும் பொழுதும் இடையில் இந்த விளம்பரம் வீடியோ தோன்றி எரிச்சலை உண்டாக்கும். இந்த பிரச்சினையை தீர்த்து Youtube-ல் எந்த விளம்பர தொல்லையுமின்றி வீடியோக்கள் காண்பது எப்படி என இங்கு காணலாம்.
இதற்கு ஒரு குரோம் நீட்சி உள்ளது நீங்கள் குரோம் உலவி உபயோகித்து கொண்டிருந்தால் இந்த நீட்சியை உங்கள் உலவியில் install செய்து கொள்ளுங்கள்.இந்த நீட்சியை install செய்தவுடன் Youtube வீடியோவில் ஏதேனும் விளம்பரம் வந்தால் மேலே உள்ள சிறிய நீல நிற button அழுத்தினால் அந்த விளம்பரம் தவிர்க்கப்பட்டு விடும். நேரடியாக original வீடியோவை காணலாம்.
BLU நிறுவனம் Latin America Tablet சந்தையில் உள்ள ஒரு முன்னணி நிறுவனம் ஆகும். அந்த நிறுவனம் உலக அளவில் online சில்லறை வர்த்தகத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிறுவனம் பல devices அறிமுகப்படுத்தி இருக்கிறது. இப்போது அந்நிறுவனம் Touch book 7.0 என்ற Tablet அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்த ப்ளூ Touch book 7.0 டேப்லெட்டின் சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் இது ஒரு Android 2.2 FROYO இயங்கு தளத்தைக் கொண்டிருக்கிறது. அதுபோல் 800 MHz கடிகார வேகம் கொண்ட Qualcomm MSM7227-T chipset Processor கொண்டிருக்கிறது.
7.0 inch அளவில் TFT capacitive தொடுதிரை கொண்டுள்ளது. இந்த திரை 133 ppi Pixel அடர்த்தியுடன் கூடிய 480 x 800 pixel resolution கொண்டிருக்கிறது. இதன் RAM memory 512 எம்பி ஆகும். அதுபோல் இதன் ROM memory 512 எம்பி ஆகும். இந்த மெமரியை micro SD card மூலமாக 32 GB வரை அதிகரிக்க முடியும்.
Class 12 (4+1/3+2/2+3/1+4 slots), 32 - 48 kbps GPRS, EDGE, HSDPA, 7.2 Mbps; HSUPA, 5.76 Mbps 3G, WLAN, A2DP இணைப்புடன் கூடிய bluetooth v2.1, micro USB மற்றும் GPS போன்ற அணைத்து இணைப்பு வசதிகளையும் அளிக்கிறது.
இதன் முக்கிய கேமரா 2048×1536 (3.15 எம்பி) pixels கொண்டிருக்கிறது. இதில் வீடியோ பதிவை செய்ய முடியும். அதுபோல் துணையாக VGA கேமராவும் இதில் உண்டு. மின் திறனிற்காக இந்த ப்ளூ டேப்லெட் 4250 mAh Li-Ion battery கொண்டுள்ளது. இந்த பேட்டரி இந்த டேப்லெட்டுக்கு 500 மணி நேர standby time, 12 மணி நேர இயங்கு நேரத்தையும் அளிக்கிறது என நிறுவனம் தெரிவிக்கின்றது.
இந்த டேப்லெட்டின் மொத்த பரப்பு 197மிமீ x 120 மிமீ x 13.2 மிமீ ஆகும். அதுபோல் இதன் எடை 382 கிராம் மட்டுமே. இந்த டேப்லெட்டின் விலை ரூ.12,000 ஆகும்.
கணினியில் Windows Media Player நிறுவப்பட்டிருக்கும் போதிலும் வீடியோ, audio-க்களை இயக்குவதற்கு அதிகமானோர் பயன்படுத்தப்படும் மென்பொருள் VLC Media Player ஆகும்.
Windows Media Player-ல் நிறைய வீடியோ format-களை பார்க்க முடியாது. ஆனால் VLC Media Player-ல் அதிகளவு வீடியோ, audio format-களை இயக்க முடியும்.
இப்பொழுது மேலும் பல வசதிகளுள் VLC 2.0.0 RC1 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பழைய பதிப்பை பயன்படுத்துபவர்கள் இப்பொழுது இந்த புதிய பதிப்பை நிறுவி அதன் பயன்களை பெறலாம்.
இதில் இயக்கக்கூடிய வீடியோ formats
MPEG-1/2,
DIVX (1/2/3),
MPEG-4 ASP, DivX 4/5/6, XviD, 3ivX D4
H.261,
H.263 / H.263i,
H.264 / MPEG-4 AVC,
Cinepak,
Theora
Dirac / VC-2
MJPEG (A/B)
WMV 1/2
WMV 3 / WMV-9 / VC-1
Sorenson 1/3 (Quicktime)
DV (Digital Video)
On2 VP3/VP5/VP6
Indeo Video v3 (IV32)
Indeo Video 4/5 (IV41, IV51)
Real Video 1/2, Real Video 3/4
இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகள் உணவுப் பண்டங்களை தயாரித்து வெளியில் விற்பனை செய்து வருகின்றனர்.
கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பூஜப்புரா மத்திய சிறைச்சாலை மற்றும் திருச்சூரில் உள்ள வையூர் மத்திய சிறைச்சாலை மற்றும் கோழிக்கோடு மாவட்ட சிறைச் சாலைகளில் உள்ள சிறைக் கைதிகள் சப்பாத்தி, கோழிக்கறி, வெஜிடபிள் குருமா ஆகியவற்றை தயாரித்து வெளியில் விற்பனை செய்கின்றனர்.
சப்பாத்தி தயாரிப்பில் பெரும்பாலும் ஆயுள் தண்டனை கைதிகள் ஈடுபடுத்தப்படுவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக பூஜப்புரா சிறையில் ரூ.5 கோடி செலவில் சப்பாத்தி செய்ய பயன்படும் இரண்டு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாக சிறை கண்காணிப்பாளர் பி.பிரதீப் கூறியுள்ளார்.
இங்கு தினமும் 40,000 சப்பாத்திகள், 3,500 கோழிக்கறி parcels மற்றும் 500 வெஜிடபிள் குருமா parcels தயார் செய்யப்படுகிறது.
இந்த உணவுப்பண்டங்களை தயாரித்து வெளியில் 3 இடங்களில் வைத்து விற்பனை நடைபெறுகிறது. 5 சப்பாத்திகள் மற்றும் கோழிக்கறி ரூ.25க்கும், 5 சப்பாத்திகள் மற்றும் வெஜிடபிள் குருமா ரூ.20க்கும்(இந்திய ரூபாய்) விற்பனை செய்யப்படுகிறது. இந்த உணவை ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர்.
இந்த தொழிலில் பெரும்பாலும் சிறை வளாகத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளே உபயோகப்படுத்தப்படுகின்றது. அரசு அங்காடிகளில் இருந்து தேவைக்கு காய்கறிகள் மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்கள் வாங்கப்படுகின்றது.
இது தவிர, முன்பதிவின் பெயரில் மொத்தமாகவும் உணவுப் பொருட்களை செய்து கொடுக்கின்றனர். இந்த முயற்சி விரைவில் பெண்கள் சிறையிலும் பின்பற்றப்படும் என்றும் பெண்கள் சார்பில் இட்லி, சாம்பார், சட்னி செய்ய ஏற்பாடு செய்யப்படும் எனவும் சிறை கண்காணிப்பாளர் பி.பிரதீப் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன் மற்றும் தாமிரபரணி படத்தின் கதாநாயகி பானு மற்றும் மலையாள திரைநடிகர்கள் கலந்து கொண்டனர்.
கோபியன் நிறுவனத்தின் துணை நிறுவனமான மெர்க்குரி Mercury mTab Neo என்ற புதிய டேப்லெட்டை களமிறக்குகிறது. இந்த நியோ டேப்லெட் 3ஜி வசதி கொண்டது.
இந்த நியோ டேப்லெட் 7 inch multi touch displayவசதியும், 1 GHz Dual Core Processor4ஜிபி Internal Memory, 32 ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய அளவிற்கு External மெமரியையும் கொண்டிருக்கிறது. அதற்கான micro SD card இதில் உண்டு.
இந்த நியோ டேப்லெட் 2 கேமராக்களைக் கொண்டுள்ளது. அதாவது 2 MB ரியர் கேமராவையும் மற்றும் 0.3 Mega Pixel resolution கொண்ட முகப்புக் கேமராவையும் கொண்டுள்ளது. இதன் பேட்டரி 4000 mh ஆகும்.
இந்த நியோ டேப்லெட் மற்ற டேப்லெட்டுகளை விட இது சற்று தடிமனாக இருக்கும். ஆனால் இதை மிக எளிதாக வெளியில் எடுத்துச் செல்ல முடியும். இந்த டேப்லெட்டின் கீழ் பகுதியில் 4 touch sensitive buttons உள்ளன. அதுபோல் வீடியோ காலிங் கேமரா திரைக்கு மேல் நடுவில் உள்ளது.
இந்த நியோ டேப்லெட்டின் HD display பளிச்சென்று இருக்கும். Media சார்ந்த அப்ளிகேசன்களை இந்த டேப்லெட்டில் மிக வேகமாக இயக்க முடியும்.
இந்த புதிய நியோ டேப்லெட் 3ஜி நெட்வொர்க் மற்றும் சிம் சப்போர்ட்டையும் வழங்குகிறது. அதனால் இதை ஒரு சாதாரண மொபைல் போன் போன்றும் பயன்படுத்தலாம். இதன் 3ஜி நெட்வொர்க் வசதி தகவல் பரிமாற்றத்திற்கும் மிகவும் ஏதுவாக இருக்கும்.
இந்த நியோ டேப்லெட்டின் விலை ரூ.16,000 ஆகும். மேலும் இது 1 வருடம் உத்திரவாதத்துடன் வருகிறது.
உலகிலுள்ள மோசமான ஆபத்து நிறைந்த பாதையாகவே இந்தப் பாதை காட்சியளிக்கின்றது. தைரியமான மாணவர்கள் மட்டும் தான் கல்வி கற்பதற்கு இத்தகைய பாலங்கள் மூலம் செல்லலாம்.
கயிறு மற்றும் மரச் சீற்றுக்களைக் கொண்டு கட்டப்பட்ட இந்தப் பாலத்தின் இன்றைய நிலையும் அதில் பயணம் செய்யும் மாணவர்களையுமே படங்களில் பார்க்கின்றீர்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் Ciberang river in Lebak என்ற இடத்தில் தான் மேற்படி பாலம் அமைக்கப்படுள்ளது.
தற்போது வெள்ளம் ஒன்று வந்து அடித்துச் சென்றதினால் தான் பாலம் வித்தியாசமான வடிவத்துக்கு மாறியுள்ளது.
சமூக வலைத் தளங்களில் புகழ்பெற்ற Twitter நிறுவனம். நாடுகளுக்கு ஏற்றாற்போன்ற தணிக்கை முறையைப் பின்பற்றப் போவதாக அறிவித்துள்ளதையடுத்து அந்த சமூக வலைத் தளத்தைப் புறக்கணிக்கப் போவதாக மக்கள் கொந்தளித்துள்ளனர்.
இந்தியாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியாவைப் பற்றி கிண்டலான செய்தி, இணையதளம் ஒன்றில் வெளிவந்தது. இதையடுத்து Yahoo, Google உள்ளிட்ட இணைய நிறுவனங்களும், Facebook உள்ளிட்ட சமூக வலைத் தளங்களும், தங்களுக்கு வரும் செய்திகளை இந்திய சட்டப்படி தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது.
ஆனால் இந்த முயற்சி எழுத்து சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் சவால் என பலர் கொதித்தெழுந்தனர். இறுதியில் Google உள்ளிட்ட நிறுவனங்கள் அத்தகைய தணிக்கைக்கு சாத்தியமே இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தன.
இவ்விவகாரத்தில் புதிய திருப்பமாக Twitter நிறுவனம் நேற்று முன்தினம் விடுத்த அறிக்கையில் அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு செய்திகளைத் தணிக்கை செய்யப் போவதாக அறிவித்தது.
மேலும் தணிக்கை செய்யப்பட்டதற்கான காரணம் அந்தந்த நாட்டு அரசுகள், நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் தணிக்கைக் கோரிக்கைகள் ஆகியவற்றையும் வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு இணைய உலகில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதே நேரம் Twitter பயன்படுத்துவோர் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது.இதையடுத்து அவர்கள் Twitter-ன் இந்த திட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
சீனாவின் பிரபல ஓவியர் அய் வெய் வெய் தெரிவித்த Tweet-ல், இத்திட்டத்தைச் செயல்படுத்தினால் நான் இனி Tweet பண்ண மாட்டேன்’ எனத் தெரிவித்து உள்ளார். நீண்ட காலமாக சீனாவில் Twitter தடை செய்யப்பட்டுள்ளது. அதை சமாளிக்கும் வகையில் இத்திட்டத்தை அந்நிறுவனம் கையில் எடுத்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இறப்பிலிருந்து மீண்ட அதிசய குழந்தை பற்றிய செய்தியே இது... Oliver Morgan என்ற இந்தக் குழந்தை பிறக்கும் போது அதன் உடலில் இரத்தம் எதுவும் இல்லை என்ற மருத்துவ அதிசய உண்மை தெரிய வந்துள்ளது.
குழந்தை பிறக்கும் போது வெளிறிய நிறத்தில் தான் இருந்தது.
குழந்தை பிறந்த போது முதல் 25 நிமிடங்களுக்குள் இருதயத் துடிப்பைக் கண்டறிய முடியவில்லை என்று மருத்துவர்கள் ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக குழந்தைக்கு மென்மையான இருதய மசாஜ் உடன் ஒட்சிசன் சுவாசமும் வழங்கப்பட்டு உயிரைக்காக்கும் வழிமுறையாக தொப்புள் கொடி மூலம் இரத்தமும் ஏற்றப்பட்டது.
குழந்தையைப் பாதுகாக்க மருத்துவர்கள் கனமான இருதயத்துடனும் கண்ணீருடனும் போராடினர்.
Oliver தற்சமயம் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருக்கிறான். இப்பொழுது குழந்தைக்கு 15 மாதங்கள் ஆகின்றது. அம்மாவான Katy உம் அப்பாவான Jeff உம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
குழந்தை உயிருடன் தப்பித்திருப்பது பற்றி 36 வயதான தாயாரான Katy கருத்துத் தெரிவிக்கையில்,
Oliver பிறந்த கதையைச் சொல்ல இப்பொழுதும் எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. ரத்தமே இல்லாமல் தான் பிறந்தான். ஆனால் தற்போது என் முன் சிரித்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறான். மருத்துவர்களால் மீளக் கொடுக்கப்பட்ட அற்புத பரிசாகவே நான் அவனைப் பார்க்கிறேன்.அவன் என்னைத் திரும்பிப் பார்க்கையில் நம்புவதற்கு கடினமாக உள்ளது என்றார்.
எட்டே வயதான Britain சிறுமியின் அசத்திய ஹிட்டார் வாசிக்கும் திறமையினை இங்கே பாருங்கள்.
குறித்த சிறுமி தனது திறமையினால் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
வேகமாகவும் இனிமையாகவும் ஹிட்டார் வாசிக்கும் இந்தச் சிறுமியின் வீடியோவை Youtube இல் பார்த்தவர்களின் தொகை மட்டும் பத்து இலட்சத்தை எட்டுகின்றது.இந்தச் சிறுமிக்கான ஆதரவு உலகம் முழுவதிலும் இருந்து பல்கிப் பெருகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப் பெரிய இறால் இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 11 இஞ்சிகள் நீளமான குறித்த இறால் இனம் ஆழமான கடற்பகுதியில் தான் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
Supergiant என்று அழைக்கப்படும் குறித்த இனம் நியூசிலாந்தின் கடற்பிரதேசத்தில் இருந்து நான்கு மைல்கள் தொலைவில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக 0.8in-1.2in நீளமுள்ளதாக குறித்த இறால் இனம் காணப்படுகின்றது.
இறாலில் இருந்து பத்து மடங்கு பெரியதான இந்த இறால் இனத்தை Aberdeen பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பிரிவினரே கண்டுபிடித்துள்ளனர்.
advanced camera-க்களின் உதவியுடன் தான் குறித்த இறால் இனம் படமாக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மனிதன் தனது வேலைகளை சுலபமாக்குவதற்கு தனக்கு நிகரான இயந்திரங்களை உருவாக்கி வருகின்றான். அவற்றுள் ஒரு அம்சம்தான் ரோபோ எனப்படும் இயந்திர மனிதன். இவ்வாறு பலவிதமான ரோபோக்களை உருவாக்கியதன் பின் இப்பொழுது குழந்தை ரோபோவையும் உருவாக்கியுள்ளனர்.
Britainச் சேர்ந்த க்ரிஸ் கிளார்க் என்பரால் உருவாக்கப்பட்ட இக்குழந்தை ரோபோவானது உண்மையான குழந்தையைப் போன்று அசைவுகளை இயல்பாகவே மேற்கொள்ளுகின்றது. அவ்வாறு மேற்கொள்ளும் அசைவுகளை காணொளியில் காணலாம்.
இதுவரை பல விதமான மசாஜ்களைப் பார்த்திருக்கின்றோம்.. இங்கே புதியதொரு மசாஜ் வித்தைகளைப் பார்க்கப் போகின்றோம். இஸ்ரேல் நாட்டில் உள்ள மசாஜ் செய்யும் அழகுக் கலை நிலையம் ஒன்று தங்களது வாடிக்கையாளர்களுக்கு புது விதமான சேவை ஒன்றை வழங்கியுள்ளது.
அமேசன் காடுகளில் பிடிக்கப்பட்டு பழக்கப்பட்ட பாம்புகளைக் கொண்டு மசாஜ் செய்யும் முறையே அது.
பாம்புகளை மனிதனின் முதுகுப்பகுதி, தலைப்பகுதி, கழுத்துப்பகுதி, கால் போன்றவற்றில் ஊர விட்டு ஒரு விதமான புல்லரிக்கும் மசாஜ் இங்கே செய்யப்படுகின்றது.
இந்த மசாஜ் சேவைகளுக்கு வெறும் 80 டொலர்கள் தான் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.
இந்த மசாஜ் செய்வதால் மன அழுத்தங்கள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றதாம்.
Malware எனப்படுவது ஒரு வகை கணினி Virus ஆகும். இது கணினியில் உள்ள தகவல்களை மற்றயவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். இதனால் கணினியின் வேகம் குறைவடையும் இணையத்தின் வேகமும் குறைவடையும். உங்கள் கணினியில் Malware உள்ளதா என அறிய. உங்கள் கணினியை முதலில் Shutdown செய்யவும். பின்னர் கணினியை On செயது F8 கீயை அழுத்தவும். அதில் கீழ் உள்ளவாறு தோண்றும். அதில் இரண்டாவதாக காணப்படும் Safe Mode with Networking என்பதை தெரிவு செய்து Enter கீயை அழுத்தவும்.
பின்னர் உங்கள் கணினியானது On ஆகியதும் இணையத்தில் உலாவும் போது முதல் இருப்பதை விட வேகமாக இயங்குகிறது என உணர்வீர்களானால் உங்கள் கணினி malware பாதிப்புக்கு உட்பட்டுள்ளது எனலாம். சரி இனி எப்படியான malware தடுப்பு மென்பொருளை பயன்படுத்துவது என்ற சந்தேகம் வரும்.