Pages

13 Dec 2011

சுவற்றில் எந்தப் பிடியும் இல்லாமல் நிற்க்கும் வினோத மனிதர்

ஜெர்மனைச்  சேர்ந்த Ohan Lorbeer என்பவர் தெருக்களில் நடத்தும் வித்தையை தான் இப்போது நாம் பார்க்கிறோம். தெருக்களில் இவர் நடத்தும் வித்தையால் ஜெர்மனில் மிகவும் பிரபலமாகி வருகிறார். Ohan Lorbeer வித்தையின் ரகசியம் என்ன என்றால் சுவரில் இருப்பது இவருடைய உண்மையான கை அல்ல. உண்மையான கை ஆடைக்கு உள்ளே உள்ளது.

134 நாட்கள் உணவின்றி உயிர் வாழ்ந்த தங்கமீன்கள்

வெல்லிங்டன்: நியூசிலாந்தில் 2 தங்க நிற மீன்கள் உணவின்றி 134 நாட்கள் உயிருடன் இருந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நியூசிலாந்து கிரைஸ்ட்சர்ச்சில் உள்ளது குவாண்டம் சார்டர்ட் அக்கௌண்டன்ட்ஸ் அலுவலகம். அதன் வரவேற்பு அறையில் 100 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் ஒரு மீன் தொட்டியில் ஷாகி, டாப்னி என்று பெயரிடப்பட்ட 2 தங்க நிற மீன்கள் உள்ளன.

நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 181 பேர் பலியாகினர். அந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு இந்த மாதம் தான் குவாண்டம் சார்டர்ட் அக்கௌண்டன்ட்ஸ் ஊழியர்கள் பணிக்குத் திரும்பினர். அலுவலகத்திற்குள் நுழைந்தவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிட்டனர். காரணம் கடந்த 134 நாட்களாக யாருமே அலுவலகம் வராத நிலையில் உணவின்றி அந்த 2 தங்க நிற மீன்கள் உயிருடன் உள்ளன.

இது குறித்து கலிபோர்னியாவின் மாண்டரே பே அக்வாரியத்தின் மேற்பார்வையாளர் பால் கிளார்க்சன் கூறுகையில், "அந்த மீன் தொட்டியில் இருந்த பாக்டீரியா தண்ணீரை சுத்தமாக வைத்திருந்திருக்கக்கூடும். மீன்கள் அந்த தொட்டியில் வளர்ந்த நீர்ப்பாசியை உண்டு உயிர் வாழ்ந்திருக்கும். ஆனால் அதே தொட்டியில் இருந்த மேலும் 3 தங்க நிற மீன்கள் இருந்த அறிகுறியே இல்லை," என்றார்.

கொலைவெறி டி பாடல் செய்யப் போகும் அடுத்த சாதனை


சமீபத்தில் வெளியான கொலைவெறி டி என்ற பாடல் Youtubeல் சக்கை போடு போட்டுக்  கொண்டு இருக்கிறது. பார்வையாளர்களின் எண்ணிக்கை இது வரை 2 கோடியை தாண்டி விட்டது.  Youtube தளமும் தங்க மெடல் கொடுத்து கவுரவித்தது. ஒரு தமிழ்ப் பாடல் Youtubeல் இந்த அளவு வரவேற்ப்பு ஏற்பட்டுள்ளது ஆச்சரியமே. சோனி நிறுவனம் வெளியிட்டதால் தான் இந்த வரவேற்ப்பு என்ற கருத்தும் இருக்கிறது. எப்படியோ இன்றைய இளைஞர்களின் தேசிய கீதமாக இந்தப் பாடல் மாறி இருக்கிறது. இவ்வளவு மகுடங்களை பெற்ற இந்தப் பாடல் அடுத்ததாக ஒரு சாதனையை செய்ய இருக்கிறது.

ஏர்டெல் நிறுவனம் 2011 ஆம் ஆண்டின் ஒரு வருடத்திற்கான(Airtel mobitude 2011) உபயோகத்தினை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 150 மில்லியன் பாடல்கள் download செய்யப்பட்டுள்ளதாம். அதில் வெளியிட்ட 18 நாட்களில் கொலைவெறி டி பாடலை 2,10,000 பேர் ஏர்டெல் மொபைல்களில் இருந்து download செய்துள்ளனர். சமீபத்தில் ரா-ஒன் படத்தில் வெளியான Chammak challo என்ற பாடல் தான் 2011ல் அதிகம் download செய்யப்பட வீடியோ பட்டியலில் முதல் இடத்தில உள்ளது.

ஆனால் வெளியான 18 நாட்களில் இவ்வளவு பேர் download செய்திருப்பதாலும், இந்தப் படம் ரிலீஸ் ஆகிவிட்டால் இதன் எண்ணிக்கை பல மடங்கு கூடும் என்ற நம்பிக்கையிலும் கொலைவெறி டி பாடல் அதிகம் download செய்யப்பட்ட வீடியோக்கள் பட்டியலில் சுலபமாக முதல் இடத்தை பிடித்துவிடும்.

அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட பாடல் வீடியோக்கள் பட்டியல்:
  1. சமாக் சல்லோ
  2. திங்கா சிக்கா
  3. செனோரீட்டா மகர் பிர் பி
  4. சோர்க்கா சக்தே ஹயே
  5. டேரி  மெரி மெரி டேரி 

 

வீடியோக்களை bookmark செய்து வைப்பதற்கு...

Youtube வீடியோக்களை பார்வையிடும் போது Watch Later என்ற வசதியின் மூலம் அவற்றை பின்னர் பார்த்து ரசிக்கலாம். எனினும் Youtube போன்று பிரபலமான Vimeo, TED மற்றும் Facebook வீடியோக்களை பின்னர் பார்வையிடுவதற்கு ஏற்றவாறு bookmark செய்து வைத்தும் பார்க்கலாம். இந்த வசதியை http://radbox.me/ எனும் தளம் தருகின்றது.இத்தளத்தில் பதிவு செய்த பின்னர் வீடியோக்களை புக்மார்க் bookmarklet மூலமாகவும் அல்லது கைபேசி மூலம் பார்க்க விரும்புகிறீர்கள் எனில் வீடியோ URLஐ மின்னஞ்சல் செய்வதன் மூலமும் bookmark செய்து வைக்கலாம்.

QD தொலைக்காட்சிகள் விரைவில் அறிமுகம்

தற்போது பிரபலமாகி வரும் 3D தொலைக்காட்சிகளுக்குப்  பதிலாக QD தொலைக்காட்சி எனப்படும் புதிய தலைமுறைக்கான தொலைக்காட்சியை பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். இந்தப்  புதிய தொலைக்காட்சியை மடித்து எளிதில் கையில் எடுத்துக் கொண்டு போகும் விதமாகவும், பாக்கெட்டில் வைத்துக்கொள்ளும் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது. மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ள இந்த QD தொலைக்காட்சி மனித தலைமுடியை விட 100,000 மடங்கு சிறிய தடிமனைக் கொண்டுள்ளதாகவும், வளையும் தன்மை கொண்டதாகவும், வால்பேப்பர் முதல் பெரிய திரை வரையிலும் பெரிதாக்கிக் கொள்ளும் திறன் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இது Flat Screen தொலைக்காட்சியை விட தொழில்நுட்பத்திறன் அதிகம் கொண்டதாகும். இந்த QD தொலைக்காட்சி. அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 Dec 2011

கைரேகையை ஆராயும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

குற்றப் புலனாய்வில் முக்கிய பங்கு வகிப்பது குற்றவாளியின் கைரேகையாகும். புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் கைரேகையை வைத்து குற்றவாளி குற்றத்தில் ஈடுபடுவதற்கு முன் போதை மருந்து உட்கொண்டிருந்தாலும், வெடி பொருட்களை கையாண்டிருந்தாலும் அதனை காட்டிக் கொடுத்து விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Australiaவைச் சேர்ந்த ஷீஃபீல்ட் ஹாலம் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர். இந்தப் புதிய கைரேகை ஆய்வு குற்றவாளியின் பழக்க வழக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை துல்லியமாக காட்டிக் கொடுத்து விடுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்னும் மூன்றாண்டுகளுக்குள் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்தக் கண்டுபிடிப்பு குற்றப்புலனாய்வில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுவரையிலும் தடயப் பொருள்களில் காணப்படும் ரேகையிலுள்ள கோடுகளை குற்றவாளிகளின் ரேகையுடன் ஒப்பிட்டுப் பார்த்தே விசாரணைகள் இடம்பெற்று வந்தன. இந்த நிலையில் புதிய தொழிநுட்பத்தின் உதவியுடன் விரலில் ஒட்டிக் கொள்ளும் பொருட்களின் நுண்ணிய துகள்களைக் கொண்டு அடிப்படை ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுமட்டுமன்றி உடலில் சுரக்கும் திரவங்கள் தொடும் பொருள் மீது ஒட்டிக்கொள்வதாக கூறப்படுகிறது. எனவே ஒருவரது விரல் ரேகையிலிருந்து அவர் என்னென்ன பொருட்களை தொட்டிருந்தார் என்பது முதல் அவரது உடல் வெளியிட்ட திரவங்கள் வரை அனைத்தையும் புதிய ஆய்வின் மூலம் தெரிந்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறக்கும் பந்து

ஜப்பானிய பொறியியலாளரின் வடிவமைப்பில் உருவானது தான் Futuristic Circular Flying Object எனப்படும் பறக்கும் பந்து!  இது மின்காந்த அலைகளால் கட்டுப்படுத்தக் கூடியது. பறக்கும் போது எதிலும் மோதாமலிருக்கும் வண்ணம் விசேட sensorகளை இதன் வடிவமைப்பாளர் பயன்படுத்தியுள்ளார்.  தன்னகத்தே ஒரு நுண் துளைக் cameraவையும் கொண்டுள்ளது. இதன்மூலம் தடையற்ற பயணத்தை இது மேற்கொள்ளும். இதன் எடை வெறும் 340grams மட்டுமே ...! இந்த லிங்கில் உள்ள வீடியோவைப் பாருங்கள் watch?v=6tZHRvXrYnU

உலகின் 2வது உயரமான சூரிய சக்திக் கோபுரம்

உலகின் 2வது அதி உயரமான சூரிய சக்திக் கோபுரம் Arizona பாலைவனத்தில் நிறுவப்படவுள்ளது. இது சுமார் 2600 அடி உயரமான புகைபோக்கியுடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 200 மெகாவாட் மின்சாரத்தினை உற்பத்தி செய்யமுடியும். மேலும் இதன்மூலம் சுமார் 1,50,000 வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தினை உருவாக்கமுடியும் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இத்திட்டமானது என்விரோ மிஷன் என்ற நிறுவனத்தினால் அமைக்கப்படவுள்ளது. இதனைக் கட்டி முடிப்பதற்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. சூரிய சக்தி, விசையாழிகள் மற்றும் உயரமான புகைபோக்கி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இத்திட்டமானது சுற்றுச் சூழலை பாதிக்காத செயற்திறன் வாய்ந்த சக்தி மூலம் என இதனை உருவாக்கவுள்ளதாக இந்நிறுவனத்தினர் பெருமையுடன் தெரிவித்துள்ளனர். இது போன்ற ஒரு திட்டத்தை நமது நாட்டில் ராஜஸ்தான் பாலைவனத்தில் அமைத்தால் மின் தடை இல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.


rundll32.exe என்றால் என்ன?

Windows Operating Systemல் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு கோப்பு தான் rundll32.exe. எனவே இந்த கோப்பு இயங்குவதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து நமக்கு பிழைச் செய்தி கிடைக்கிறது. இதன் தன்மையினையும் செயல்படும் விதத்தினையும் அறிந்து கொண்டால் இந்த கோப்பு குறித்த சந்தேகங்கள் தெளிவாகும்.  Rundll32.exe கோப்பு நம் கணணியில் Task Managerல் இயங்கிக் கொண்டிருப்பதனைப் பார்க்கலாம். RAM நினைவகத்தில் இந்தக் கோப்பு தங்கி இருந்து மற்றக் கோப்புக்கள் செயல்பட உதவிடும். ஒன்று அல்லது இரண்டு புரோகிராம்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டால் இந்தக் கோப்பின் பெயர், பிரச்சினை குறித்த பிழைச் செய்தியில் அடிபடுவது இயற்கையே. கணணி இயங்க அடிப்படையான டி.எல்.எல் கோப்புக்கள் இந்த ரன் டி.எல்.எல் 32 கோப்பு வழியாக இயங்குகின்றன.  ஒரு டி.எல்.எல் கோப்பை நேரடியாக இயக்க முடியாது. Exe அல்லது com கோப்புக்கள் இயக்கப்படுவது போல டி.எல்.எல் கோப்புக்கள் இயங்காது. windows system இவற்றை இயக்க இன்னொரு கோப்பு தேவைப்படுகிறது. அதுதான் rundll32.exe கோப்பு.  32 பிட் டி.எல்.எல் கோப்புக்களை இது எடுத்து இயக்குவதால் இந்த பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது. இப்படி அடிப்படைச் செயல்பாட்டிற்கு இது அரிய பங்கினை அளிப்பதால் சில கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் உங்கள் கணணியில் rundll32.exe என்ற கோப்பு கெட்டுப் போய் விட்டதென்று செய்தி கொடுத்து சரியான rundll32.exe கோப்பு வேண்டும் என்றால் கிளிக் செய்திடவும் என ஒரு லிங்க் தரும். இதில் கிளிக் செய்தால் அந்த கோப்பானது தரவிறக்கம் செய்யப்படும். ஆனால் அது கெடுதலை விளைவிக்கும் புரோகிராமாக இருக்கும். எனவே இது குறித்து வரும் செய்திகளைப் பார்த்தால் சற்று கவனமாகச் செயல்பட வேண்டும்.

Spy Robo Bird

விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியானது அனைத்துத் துறைகளிலும் பல நவீன மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது. போர் மற்றும் உளவு பார்த்தலிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பண்டைய காலத்தில் உளவு பார்ப்பதற்கு பல்வேறு வழிகள் கையாளப்பட்டன.  ஒற்றர்கள் மூலம் உளவு பார்த்தல், பறவைகள் மற்றும் மிருகங்கள் மூலம் உளவு பார்க்கும் நடைமுறைகள் அக்காலத்தில் பின்பற்றப்பட்டன. தற்காலத்தில் அதைவிட மிக நுணுக்கமான முறைகள் கையாளப்படுகின்றன.
watch?v=-LOBSje-3x8&feature=player_embedded
அமெரிக்க இராணுவமானது இத்தகைய பல உளவு பார்க்கும் கருவிகளை தயாரித்துள்ளது. இவற்றை யாராலும் எளிதாக அடையாளம் காண முடியாத வண்ணம் அவை உருவாக்கப்பட்டுள்ளன. இவை உருவத்தில் பறவைகள் மற்றும் பூச்சிகள் வடிவிலும் காணப்படுவதால் அவற்றை அடையாளம் காண்பது எதிரிகளுக்கு சற்று கடினம்.

4 Dec 2011

இணையத்தில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. Facebook, Google+ போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடுவதால் நிறுவனங்கள் நல்ல இலாபமீட்டுகின்றன. மென்பொருள் துறையில் முதன்மையான Microsoft தற்போது புதிய சமூக வலைத்தளம் ஒன்றை கட்டமைத்து வருகின்றனர். Microsoftன் புதிய சமூக வலைத்தளத்திற்கு Socl என்று பெயரிடப்பட்டுள்ளது. உச்சரிப்பில் Social என்று சொல்லக் கூடியதாக இருக்கிறது. இத்தளத்தின் பரிசோதனை அனுபவத்திற்காக Verge நிறுவனத்திடம் Microsoft கேட்டுக் கொண்டிருந்தது. Verge நிறுவனம் சோதனை செய்து அதன் விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. இதன் User Interface மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இடதுபுறத்தில் Navigation வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. செய்திகள் Feed என வகைப்படுத்தப்பட்டுள்ளன. நமது செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. (Update Status).
Social Search: இதில் சமூக வலைத்தளத்திலிருந்தே தேடிக் கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது. நீங்கள் தேடும் போது வழக்கமான தேடல், நண்பர்களின் செய்திகள், ஒத்த சேவைகள் போன்றவற்றிலும் தேடி முடிவுகள் தரப்படும்.
எதாவது தேடிப் பெறப்பட்ட தகவல்களை அப்படியே உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும். நண்பர்களின் தேடல்களையும் உங்கள் பக்கத்தில் பார்த்துக் கொள்ள முடியும். இது கூகிள்+1 பட்டன்களின் மூலம் பெறப்படும் Recommendationகளை கூகிள் பிளஸ் தளத்தில் தேடுதலுக்குப் பயன்படுத்துவதைப் போல ஆகும். தேடுதலுக்கு பிங் சேவை(Bing) பயன்படுத்தப்படும். நண்பர்கள் உங்களின் தேடல்களுக்கு கருத்துரை அளிக்கலாம், Like செய்யலாம், Tag செய்யலாம்.
Tagging: நீங்கள் ஒருவரின் செய்தியை Tag செய்யும் போது சம்பந்தப்பட்ட தகவல் உங்களின் Interest Tags பிரிவில் இடதுபுறத்தில் தோன்றும். இதனால் விரைவில் குறிப்பிட்ட விடயம் சார்ந்தவற்றைப் பார்த்துக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு Photography, Cinema, Arts. வலதுபுறத்தில் Video Party வசதி தரப்பட்டுள்ளது. இதில் நண்பர்களிடம் சாதாரண மற்றும் வீடியோ சாட்டிங் செய்து கொள்ள முடியும். மேலும் Youtube வீடியோக்களையும் பார்த்துக் கொள்ளலாம். இது முற்றிலும் HTML5 தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் Adobe Flash மென்பொருளின் உதவி தேவைப்படாது.இதில் குறைபாடுகளாக மற்ற சமுக வலைத்தளங்களில் இருக்கும் சில வசதிகள் இல்லை. அதாவது செய்திகளை குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் பகிர்தல், கூகிள் பிளசில் இருக்கும் வட்டங்கள் போல Groups போன்றவை இல்லை. இதன் பரிசோதனை செயல்பாடுகள் முடிந்து மைக்ரோசாப்ட் விரைவில் வெளியிட ஆயத்தமாகி வருகிறது.

VLC Playerயில் குறிப்பிட்ட வீடியோ பகுதியை மட்டும் வெட்டி எடுப்பதற்கு

VLC Playerஐப் பயன்படுத்தி காணொளி ஒன்றின் (Video) தேவையான பகுதி ஒன்றை எவ்வாறு வெட்டி எடுக்கலாம் என்பது பற்றி இப்போது பார்ப்போம். VLC Playerல் காணொளி ஒன்றை திறந்து கொள்ளுங்கள். பின் View->Advanced Controls என்பதை தெரிவு செய்யுங்கள்.நீங்கள் தெரிவு செய்தவுடன் சில buttonகள் தோன்றும். இப்போது காணொளியின் தேவையான இடத்தில் Record buttonஐ அழுத்துங்கள். பின் வெட்ட வேண்டிய பகுதியின் இறுதிப் பகுதி வந்ததும் மறுபடியும் Record buttonஐ அழுத்துங்கள். இப்போது காணொளியின் வெட்டப்பட்ட பகுதி உங்கள் கணணியில் சேமிக்கப்பட்டுவிடும். இயங்கு தளம் Windows 7 எனில் My Videosல் சேமிக்கப்படும். இந்த வீடியோ பகுதி சேமிக்கப்பட்டுவிடும். இந்த முறையைப் பயன்படுத்தி ஒலிக் கோப்புகளில் இருந்தும் தேவையான பகுதியை வெட்டி எடுக்க முடியும்.

2 Dec 2011

Desktopல் தேவையான iconகளை மட்டும் வைத்துக் கொள்வதற்கு

நாம் நமது desktopல் குப்பையாக வைத்துக் கொள்ளாமல் தேவையான iconகளை மட்டும் வைத்துக் கொள்ளலாம். அந்த iconகளையும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தோன்றுமாறு அமைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நமது desktopல் எந்த ஒரு iconம் இருக்காது. இதனை நிறுவியதும் உங்களுக்கு ஒரு window open ஆகும். அதில் எவ்வளவு நேரத்திற்கு பின்னர் உங்களுக்கு desktopல் உள்ள iconகள் மறைய வேண்டுமோ அந்த நேரத்தை set செய்திடவும். ஒரு நிமிடத்திலிருந்து 20 நிமிடம் வரை நாம் நேரம் set செய்திடலாம். அந்த நேரம் ஆனதும் உங்களுக்கு கீழ்கண்ட slideல் நேரம் நகர ஆரம்பிக்கும். குறிப்பிடட நேரம் ஆனதும் உங்களுக்கு desktopல் உள்ள iconகள் மறைந்துவிடும்.  தரவிரக்கம் செய்ய
http://www.4shared.com/file/WXzIBYzy/deskduster_free_20103.html

சுமார் 36 வருடங்கள் பயன்படும் மின்விளக்குகள் அறிமுகம்

கிட்டத்தட்ட 40,000 மணி நேரம் அதாவது 36 வருடங்கள் ஒளிரக் கூடிய தன்மை கொண்டவையாக சாம்சுங்கின் இந்தப் புதிய LED மின்விளக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சாம்சுங்கின் புதிய LED விளக்குகள் ஒரு சாதாரண மின்விளக்கினைவிடவும் 40 மடங்கு அதிகமான பலனை அளிக்கக் கூடியவை.
இது ஒரு சாதாரண மின்விளக்கு அல்ல. இதில் LED சிப்கள், drivers, மின்சாதனங்கள் என்பன அடங்கியுள்ளன. சாங்சங்கின் இந்த விளக்குகள் தற்போது அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கின்றன. எனினும் இதிலுள்ள ஒரேயொரு தகவல் இதன் விலை குறைவல்ல என்பதுதான்.

LED தொலைக்காட்சிகளின் வரிசையில் உலகின் முன்னோடியாகவும் சாம்சுங் தான் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வகைத் தொலைக்காட்சிகள் அதிகளவில் பயன்பாட்டிற்கும் வந்துள்ளன. இதனைவிடவும் Eden Park என்ற அமெரிக்க நிறுவனமானது பிளாஸ்மா ஒளி என்ற தொழினுட்பத்தினையும் ஆராய்ந்துவருகின்றது. இதில் ஒளியானது இரு அலுமினியம் தாள்களுக்கிடையில் உள்ள கடதாசி போன்ற மெல்லிய பிளாஸ்மா படிமத்திலிருந்து வெளிவரும். இதன்மூலம் ஒரு சுவர்க்காப்பு உறையிலிருந்தும் வெளிச்சம் வருவதுபோன்ற நிலை ஏற்படலாம். இதற்கும் மிகவும் குறைந்த மின்வலுவே தேவைப்படும். எனினும் இந்த microplasma வகை விளக்குகள் எப்போது சந்தைக்கு வருமென்று அந்நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

மனிதர்களை அழிக்கக் கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட virus

மனிதர்களை அழித்துவிடக்கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட Flu virus கண்டுபிடித்தமை பற்றிய விபரங்களை நெதர்லாந்தின் விஞ்ஞானிகள் வெளியிடவுள்ளனர். இந்த அபாயகரமான virus H5N1 பறவைக்காய்ச்சல் வைரசினை ஒத்ததாகும். ஆனால் இது தொற்றுக் கிருமி. ஒரு தடவையிலேயே மில்லியன் கணக்கானோரில் கடத்தப்பட்டுவிடும் என்றும் கூறப்படுகின்றது.
இதனால் இந்த ஆய்வு சர்ச்சைக்குரிய நிலையை ஏற்படுத்தியுள்ளதுடன் விஞ்ஞானிகளையும் இரு பிரிவாகப் பிரித்துள்ளது. ஒரு பகுதியினர் இதன் விபரங்களை வெளியிடக்கூடாது என்றும் சிலர இதனைச் செய்யவேண்டும் என்றும் தெரிவித்தனர்.பறவைக் காய்ச்சலின் virus 500 பேரை கொன்றது. ஆனால் தற்போது உருவாக்கப்பட்ட virus எதிரிகளின் கைகளில் கிடைத்துவிட்டால் மிகவும் ஆபத்தானதாக உள்ளதால் உயிரியல் போரிற்குப் பயன்படுத்தக்கூடிய அபாயத்தை ஏற்படுத்திவிடலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.இந்தக் கண்டுபிடிப்பினால் இக்குழு ஊடகத்தின் பாய்ச்சலினை எதிர்கொள்ளவேண்டிய நிலையிலும் உள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு மருத்துவரீதியில் நல்லதாரு முன்னேற்றம் என்றும் கருதப்படுகின்றது.
இதனால் இதுபற்றிய விடயங்களை வெளியிடுவது தடுக்கப்படவேண்டுமென்றும் வெளியிடப்பட்டால் உயிரியல் தீவிரவாதத்திற்குத் துணைபோகும் காரியங்களைச் செய்பவர்களுக்கு இது உதவக்கூடுமென்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.