ஜப்பானிய பொறியியலாளரின் வடிவமைப்பில் உருவானது தான் Futuristic Circular Flying Object எனப்படும் பறக்கும் பந்து! இது மின்காந்த அலைகளால் கட்டுப்படுத்தக் கூடியது. பறக்கும் போது எதிலும் மோதாமலிருக்கும் வண்ணம் விசேட sensorகளை இதன் வடிவமைப்பாளர் பயன்படுத்தியுள்ளார். தன்னகத்தே ஒரு நுண் துளைக் cameraவையும் கொண்டுள்ளது. இதன்மூலம் தடையற்ற பயணத்தை இது மேற்கொள்ளும். இதன் எடை வெறும் 340grams மட்டுமே ...! இந்த லிங்கில் உள்ள வீடியோவைப் பாருங்கள் watch?v=6tZHRvXrYnU
5 Dec 2011
உலகின் 2வது உயரமான சூரிய சக்திக் கோபுரம்
உலகின் 2வது அதி உயரமான சூரிய சக்திக் கோபுரம் Arizona பாலைவனத்தில் நிறுவப்படவுள்ளது. இது சுமார் 2600 அடி உயரமான புகைபோக்கியுடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 200 மெகாவாட் மின்சாரத்தினை உற்பத்தி செய்யமுடியும். மேலும் இதன்மூலம் சுமார் 1,50,000 வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தினை உருவாக்கமுடியும் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இத்திட்டமானது என்விரோ மிஷன் என்ற நிறுவனத்தினால் அமைக்கப்படவுள்ளது. இதனைக் கட்டி முடிப்பதற்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. சூரிய சக்தி, விசையாழிகள் மற்றும் உயரமான புகைபோக்கி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இத்திட்டமானது சுற்றுச் சூழலை பாதிக்காத செயற்திறன் வாய்ந்த சக்தி மூலம் என இதனை உருவாக்கவுள்ளதாக இந்நிறுவனத்தினர் பெருமையுடன் தெரிவித்துள்ளனர். இது போன்ற ஒரு திட்டத்தை நமது நாட்டில் ராஜஸ்தான் பாலைவனத்தில் அமைத்தால் மின் தடை இல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
rundll32.exe என்றால் என்ன?
Windows Operating Systemல் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு கோப்பு தான் rundll32.exe. எனவே இந்த கோப்பு இயங்குவதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து நமக்கு பிழைச் செய்தி கிடைக்கிறது. இதன் தன்மையினையும் செயல்படும் விதத்தினையும் அறிந்து கொண்டால் இந்த கோப்பு குறித்த சந்தேகங்கள் தெளிவாகும். Rundll32.exe கோப்பு நம் கணணியில் Task Managerல் இயங்கிக் கொண்டிருப்பதனைப் பார்க்கலாம். RAM நினைவகத்தில் இந்தக் கோப்பு தங்கி இருந்து மற்றக் கோப்புக்கள் செயல்பட உதவிடும். ஒன்று அல்லது இரண்டு புரோகிராம்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டால் இந்தக் கோப்பின் பெயர், பிரச்சினை குறித்த பிழைச் செய்தியில் அடிபடுவது இயற்கையே. கணணி இயங்க அடிப்படையான டி.எல்.எல் கோப்புக்கள் இந்த ரன் டி.எல்.எல் 32 கோப்பு வழியாக இயங்குகின்றன. ஒரு டி.எல்.எல் கோப்பை நேரடியாக இயக்க முடியாது. Exe அல்லது com கோப்புக்கள் இயக்கப்படுவது போல டி.எல்.எல் கோப்புக்கள் இயங்காது. windows system இவற்றை இயக்க இன்னொரு கோப்பு தேவைப்படுகிறது. அதுதான் rundll32.exe கோப்பு. 32 பிட் டி.எல்.எல் கோப்புக்களை இது எடுத்து இயக்குவதால் இந்த பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது. இப்படி அடிப்படைச் செயல்பாட்டிற்கு இது அரிய பங்கினை அளிப்பதால் சில கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் உங்கள் கணணியில் rundll32.exe என்ற கோப்பு கெட்டுப் போய் விட்டதென்று செய்தி கொடுத்து சரியான rundll32.exe கோப்பு வேண்டும் என்றால் கிளிக் செய்திடவும் என ஒரு லிங்க் தரும். இதில் கிளிக் செய்தால் அந்த கோப்பானது தரவிறக்கம் செய்யப்படும். ஆனால் அது கெடுதலை விளைவிக்கும் புரோகிராமாக இருக்கும். எனவே இது குறித்து வரும் செய்திகளைப் பார்த்தால் சற்று கவனமாகச் செயல்பட வேண்டும்.
Spy Robo Bird
விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியானது அனைத்துத் துறைகளிலும் பல நவீன மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது. போர் மற்றும் உளவு பார்த்தலிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பண்டைய காலத்தில் உளவு பார்ப்பதற்கு பல்வேறு வழிகள் கையாளப்பட்டன. ஒற்றர்கள் மூலம் உளவு பார்த்தல், பறவைகள் மற்றும் மிருகங்கள் மூலம் உளவு பார்க்கும் நடைமுறைகள் அக்காலத்தில் பின்பற்றப்பட்டன. தற்காலத்தில் அதைவிட மிக நுணுக்கமான முறைகள் கையாளப்படுகின்றன.
watch?v=-LOBSje-3x8&feature=player_embedded
அமெரிக்க இராணுவமானது இத்தகைய பல உளவு பார்க்கும் கருவிகளை தயாரித்துள்ளது. இவற்றை யாராலும் எளிதாக அடையாளம் காண முடியாத வண்ணம் அவை உருவாக்கப்பட்டுள்ளன. இவை உருவத்தில் பறவைகள் மற்றும் பூச்சிகள் வடிவிலும் காணப்படுவதால் அவற்றை அடையாளம் காண்பது எதிரிகளுக்கு சற்று கடினம்.

4 Dec 2011
இணையத்தில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. Facebook, Google+ போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடுவதால் நிறுவனங்கள் நல்ல இலாபமீட்டுகின்றன. மென்பொருள் துறையில் முதன்மையான Microsoft தற்போது புதிய சமூக வலைத்தளம் ஒன்றை கட்டமைத்து வருகின்றனர். Microsoftன் புதிய சமூக வலைத்தளத்திற்கு Socl என்று பெயரிடப்பட்டுள்ளது. உச்சரிப்பில் Social என்று சொல்லக் கூடியதாக இருக்கிறது. இத்தளத்தின் பரிசோதனை அனுபவத்திற்காக Verge நிறுவனத்திடம் Microsoft கேட்டுக் கொண்டிருந்தது. Verge நிறுவனம் சோதனை செய்து அதன் விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. இதன் User Interface மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இடதுபுறத்தில் Navigation வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. செய்திகள் Feed என வகைப்படுத்தப்பட்டுள்ளன. நமது செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. (Update Status).
Social Search: இதில் சமூக வலைத்தளத்திலிருந்தே தேடிக் கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது. நீங்கள் தேடும் போது வழக்கமான தேடல், நண்பர்களின் செய்திகள், ஒத்த சேவைகள் போன்றவற்றிலும் தேடி முடிவுகள் தரப்படும்.
எதாவது தேடிப் பெறப்பட்ட தகவல்களை அப்படியே உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும். நண்பர்களின் தேடல்களையும் உங்கள் பக்கத்தில் பார்த்துக் கொள்ள முடியும். இது கூகிள்+1 பட்டன்களின் மூலம் பெறப்படும் Recommendationகளை கூகிள் பிளஸ் தளத்தில் தேடுதலுக்குப் பயன்படுத்துவதைப் போல ஆகும். தேடுதலுக்கு பிங் சேவை(Bing) பயன்படுத்தப்படும். நண்பர்கள் உங்களின் தேடல்களுக்கு கருத்துரை அளிக்கலாம், Like செய்யலாம், Tag செய்யலாம்.
Tagging: நீங்கள் ஒருவரின் செய்தியை Tag செய்யும் போது சம்பந்தப்பட்ட தகவல் உங்களின் Interest Tags பிரிவில் இடதுபுறத்தில் தோன்றும். இதனால் விரைவில் குறிப்பிட்ட விடயம் சார்ந்தவற்றைப் பார்த்துக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு Photography, Cinema, Arts. வலதுபுறத்தில் Video Party வசதி தரப்பட்டுள்ளது. இதில் நண்பர்களிடம் சாதாரண மற்றும் வீடியோ சாட்டிங் செய்து கொள்ள முடியும். மேலும் Youtube வீடியோக்களையும் பார்த்துக் கொள்ளலாம். இது முற்றிலும் HTML5 தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் Adobe Flash மென்பொருளின் உதவி தேவைப்படாது.இதில் குறைபாடுகளாக மற்ற சமுக வலைத்தளங்களில் இருக்கும் சில வசதிகள் இல்லை. அதாவது செய்திகளை குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் பகிர்தல், கூகிள் பிளசில் இருக்கும் வட்டங்கள் போல Groups போன்றவை இல்லை. இதன் பரிசோதனை செயல்பாடுகள் முடிந்து மைக்ரோசாப்ட் விரைவில் வெளியிட ஆயத்தமாகி வருகிறது.

VLC Playerயில் குறிப்பிட்ட வீடியோ பகுதியை மட்டும் வெட்டி எடுப்பதற்கு
VLC Playerஐப் பயன்படுத்தி காணொளி ஒன்றின் (Video) தேவையான பகுதி ஒன்றை எவ்வாறு வெட்டி எடுக்கலாம் என்பது பற்றி இப்போது பார்ப்போம். VLC Playerல் காணொளி ஒன்றை திறந்து கொள்ளுங்கள். பின் View->Advanced Controls என்பதை தெரிவு செய்யுங்கள்.நீங்கள் தெரிவு செய்தவுடன் சில buttonகள் தோன்றும். இப்போது காணொளியின் தேவையான இடத்தில் Record buttonஐ அழுத்துங்கள். பின் வெட்ட வேண்டிய பகுதியின் இறுதிப் பகுதி வந்ததும் மறுபடியும் Record buttonஐ அழுத்துங்கள். இப்போது காணொளியின் வெட்டப்பட்ட பகுதி உங்கள் கணணியில் சேமிக்கப்பட்டுவிடும். இயங்கு தளம் Windows 7 எனில் My Videosல் சேமிக்கப்படும். இந்த வீடியோ பகுதி சேமிக்கப்பட்டுவிடும். இந்த முறையைப் பயன்படுத்தி ஒலிக் கோப்புகளில் இருந்தும் தேவையான பகுதியை வெட்டி எடுக்க முடியும்.
2 Dec 2011
Desktopல் தேவையான iconகளை மட்டும் வைத்துக் கொள்வதற்கு
நாம் நமது desktopல் குப்பையாக வைத்துக் கொள்ளாமல் தேவையான iconகளை மட்டும் வைத்துக் கொள்ளலாம். அந்த iconகளையும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தோன்றுமாறு அமைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நமது desktopல் எந்த ஒரு iconம் இருக்காது. இதனை நிறுவியதும் உங்களுக்கு ஒரு window open ஆகும். அதில் எவ்வளவு நேரத்திற்கு பின்னர் உங்களுக்கு desktopல் உள்ள iconகள் மறைய வேண்டுமோ அந்த நேரத்தை set செய்திடவும். ஒரு நிமிடத்திலிருந்து 20 நிமிடம் வரை நாம் நேரம் set செய்திடலாம். அந்த நேரம் ஆனதும் உங்களுக்கு கீழ்கண்ட slideல் நேரம் நகர ஆரம்பிக்கும். குறிப்பிடட நேரம் ஆனதும் உங்களுக்கு desktopல் உள்ள iconகள் மறைந்துவிடும். தரவிரக்கம் செய்ய
http://www.4shared.com/file/WXzIBYzy/deskduster_free_20103.html
http://www.4shared.com/file/WXzIBYzy/deskduster_free_20103.html
சுமார் 36 வருடங்கள் பயன்படும் மின்விளக்குகள் அறிமுகம்
கிட்டத்தட்ட 40,000 மணி நேரம் அதாவது 36 வருடங்கள் ஒளிரக் கூடிய தன்மை கொண்டவையாக சாம்சுங்கின் இந்தப் புதிய LED மின்விளக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சாம்சுங்கின் புதிய LED விளக்குகள் ஒரு சாதாரண மின்விளக்கினைவிடவும் 40 மடங்கு அதிகமான பலனை அளிக்கக் கூடியவை.
இது ஒரு சாதாரண மின்விளக்கு அல்ல. இதில் LED சிப்கள், drivers, மின்சாதனங்கள் என்பன அடங்கியுள்ளன. சாங்சங்கின் இந்த விளக்குகள் தற்போது அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கின்றன. எனினும் இதிலுள்ள ஒரேயொரு தகவல் இதன் விலை குறைவல்ல என்பதுதான்.
LED தொலைக்காட்சிகளின் வரிசையில் உலகின் முன்னோடியாகவும் சாம்சுங் தான் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வகைத் தொலைக்காட்சிகள் அதிகளவில் பயன்பாட்டிற்கும் வந்துள்ளன. இதனைவிடவும் Eden Park என்ற அமெரிக்க நிறுவனமானது பிளாஸ்மா ஒளி என்ற தொழினுட்பத்தினையும் ஆராய்ந்துவருகின்றது. இதில் ஒளியானது இரு அலுமினியம் தாள்களுக்கிடையில் உள்ள கடதாசி போன்ற மெல்லிய பிளாஸ்மா படிமத்திலிருந்து வெளிவரும். இதன்மூலம் ஒரு சுவர்க்காப்பு உறையிலிருந்தும் வெளிச்சம் வருவதுபோன்ற நிலை ஏற்படலாம். இதற்கும் மிகவும் குறைந்த மின்வலுவே தேவைப்படும். எனினும் இந்த microplasma வகை விளக்குகள் எப்போது சந்தைக்கு வருமென்று அந்நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

மனிதர்களை அழிக்கக் கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட virus
மனிதர்களை அழித்துவிடக்கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட Flu virus கண்டுபிடித்தமை பற்றிய விபரங்களை நெதர்லாந்தின் விஞ்ஞானிகள் வெளியிடவுள்ளனர். இந்த அபாயகரமான virus H5N1 பறவைக்காய்ச்சல் வைரசினை ஒத்ததாகும். ஆனால் இது தொற்றுக் கிருமி. ஒரு தடவையிலேயே மில்லியன் கணக்கானோரில் கடத்தப்பட்டுவிடும் என்றும் கூறப்படுகின்றது.
இதனால் இந்த ஆய்வு சர்ச்சைக்குரிய நிலையை ஏற்படுத்தியுள்ளதுடன் விஞ்ஞானிகளையும் இரு பிரிவாகப் பிரித்துள்ளது. ஒரு பகுதியினர் இதன் விபரங்களை வெளியிடக்கூடாது என்றும் சிலர இதனைச் செய்யவேண்டும் என்றும் தெரிவித்தனர்.பறவைக் காய்ச்சலின் virus 500 பேரை கொன்றது. ஆனால் தற்போது உருவாக்கப்பட்ட virus எதிரிகளின் கைகளில் கிடைத்துவிட்டால் மிகவும் ஆபத்தானதாக உள்ளதால் உயிரியல் போரிற்குப் பயன்படுத்தக்கூடிய அபாயத்தை ஏற்படுத்திவிடலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.இந்தக் கண்டுபிடிப்பினால் இக்குழு ஊடகத்தின் பாய்ச்சலினை எதிர்கொள்ளவேண்டிய நிலையிலும் உள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு மருத்துவரீதியில் நல்லதாரு முன்னேற்றம் என்றும் கருதப்படுகின்றது.
இதனால் இதுபற்றிய விடயங்களை வெளியிடுவது தடுக்கப்படவேண்டுமென்றும் வெளியிடப்பட்டால் உயிரியல் தீவிரவாதத்திற்குத் துணைபோகும் காரியங்களைச் செய்பவர்களுக்கு இது உதவக்கூடுமென்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

1 Dec 2011
இரண்டு முகங்களுடன் வாழும் அதிசய பூனை!
இரண்டு முகங்களுடன் பிறந்த அதிசய பூனையைப் பார்த்து இருக்கின்றீர்களா? இங்கே பாருங்கள் அந்த அதிசய பூனையை... இந்தப் பூனைக்கு இரண்டு முகங்கள், இரண்டு வாய்கள், மூன்று கண்கள் உள்ளன. இந்தப் பூனையின் எதிர்காலம் தான் சந்தேகம் நிறைந்ததாக உள்ளது என்கிறார் அதன் உரிமையாளர்.
நீலநிறக் கண்களைக் கொண்ட இந்தப் பூனை இந்த ஆண்டின் கின்னஸ் சாதனைப் பதிவுப் புத்தகத்திலும் இடம் பிடித்து விட்டமை கூடுதல் தகவல்.
நீலநிறக் கண்களைக் கொண்ட இந்தப் பூனை இந்த ஆண்டின் கின்னஸ் சாதனைப் பதிவுப் புத்தகத்திலும் இடம் பிடித்து விட்டமை கூடுதல் தகவல்.
பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டும் ரோபோ நாய்
பார்வையற்றவர்களுடன் வாக்கிங் சென்றபடி அவர்களுக்கு வழிகாட்டக் கூடிய ரோபோ நாயை ஜப்பான் நிறுவனம் உருவாக்கி வருகிறது. ஜப்பானைச் சேர்ந்த பிரபல நிறுவனம் என்எஸ்கே கார்ப்பரேஷன். வாகன பேரிங்குகள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான பொருட்கள், தானியங்கி சாதனங்களுக்கான உதிரி பாகங்கள், ரோபோக்களில் பயன்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றை தயாரித்து வருகிறது.
இந்நிறுவனம் ஜப்பானின் எலக்ட்ரோ கம்யூனிகேஷன்ஸ் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து நாய் ரோபோ தயாரிக்கும் ஆய்வில் கடந்த 2005ம் ஆண்டு முதல் ஈடுபட்டுள்ளது. இந்த ஆய்வு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதுபற்றி என்எஸ்கே நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: பார்வையற்றவர்கள், மற்றவர்கள் துணையின்றி நடந்து செல்ல வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு ரோபோ நாயை உருவாக்கியுள்ளோம்.இதன் கன்ட்ரோல் யூனிட் கைப்பிடி பகுதியை பார்வையற்றவர்கள் பிடித்துக் கொள்ள வேண்டும். ரோபோவின் 4 கால்களிலும் சக்கரங்கள் உள்ளன. சமதளம் மட்டுமின்றி மேடு, பள்ளங்கள், படிக்கட்டுகளில்கூட இந்த ரோபோ ஏறிச் செல்லும். அதற்கேற்ப முன் பக்கம், பின் பக்கம் மடியுமாறு கால்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எதிரே யாராவது வந்தாலோ, வேகத்தடை, கல் போன்றவை இருந்தாலோ குரைப்பது போல சத்தம் கொடுக்கும். தடைகளை கண்டுபிடிக்க ரோபோவின் முகப்பு மற்றும் கால் பகுதியில் சென்சார்கள், கமெராக்கள் உள்ளன. கன்ட்ரோல் யூனிட் கைப்பிடியில் உள்ள பட்டன்களை அழுத்தினால் எதிரே என்ன இருக்கிறது, வாகனங்கள் வருகிறதா என்பதை தெரிந்துகொள்ளலாம். கனிவான பெண் குரலில் இத்தகவல்களை ரோபோ நாய் தெரிவிக்கும்.இறுதிகட்ட ஆய்வு முடிந்த பிறகு இது அறிமுகப்படுத்தப்படும். சொல்வதை புரிந்துகொள்ளும் திறன், ஜிபிஎஸ் உதவியுடன் தானாகவே ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அழைத்து செல்வது ஆகிய வசதிகளை சேர்ப்பது தொடர்பான ஆய்வுகளும் நடந்து வருகிறது.

Hard Diskன் கொள்ளளவை அதிகரிக்கும் உப்பு
உணவுக்கு சுவை தருவதில் முக்கிய பங்கு உப்புக்கு உள்ளது. உணவுக்கு சுவை கூட்டும் உப்பு கணினியின் அளவை கூட்டும் அதிசயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கணினி இயங்குவதற்குத் தேவையான மென்பொருட்கள் கணினியில் நாம் பதிவு செய்கிற புகைப்படம், பாட்டு, சினிமா உள்ளிட்ட கோப்புகள் அனைத்தும் hard diskகிலேயே பதிவாகின்றன. கணினி கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் hard diskகளை வைப்பதற்கு பெரிய அறைகள் தேவைப்பட்டன. Disk அளவை குறைப்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கையடக்க hard diskகள் மட்டுமின்றி சட்டை பாக்கெட்டில் போடுகிற அளவில் தற்போது hard disk வந்துவிட்டது. இந்த அளவை மேலும் குறைப்பது தொடர்பாகவும், கொள்ளளவை அதிகப்படுத்தி அதிக தகவல்கள், கோப்புகளை சேமிக்கும் வகையிலும் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடக்கின்றன.இதுதொடர்பாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டேட்டா ஸ்டோரேஜ் கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. பேராசிரியர் ஜோயல் யாங்க் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கிடைத்த ஆச்சரிய தகவல்கள் பற்றி ஜோயல் கூறியதாவது: கணினி மிக முக்கியமான பகுதி hard disk. பதிவுகள் அனைத்தையும் பாதுகாப்பது இதுதான். சமையலுக்கு பயன்படும் ஒரு சிட்டிகை உப்புத் தூள் இதன் கொள்ளளவை அதிகரிப்பது முதலில் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றி கிட்டியது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்த முறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலும் பெருத்த வெற்றி கிட்டியுள்ளது.
டேபிள்சால்ட் எனப்படும் தூள் உப்பைக் கொண்டு கணினி hard disk data recording திறனை 6 மடங்கு அதிகரிக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Hard disk தயாரிப்பின் போது அதில் சோடியம் குளோரைடு எனப்படும் சாதாரண உப்பையும் சேர்த்து பயன்படுத்தும் போது hard diskன் பதிவு திறன் ஒரு சதுர இன்சுக்கு 3.3 டெராபைட் அதிகரிக்கிறது. அதாவது disk கொள்ளளவு 6 மடங்கு அதிகரிக்கிறது. உப்பு சேர்ப்பதால் கணினிக்கோ இதர பாகங்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. இது மட்டுமின்றி hard diskன் செயல்பாடும் சிறப்பாக இருக்கிறது.

Online Virus Scanning
எத்தனையோ Anti virus மென்பொருள்கள் இலவசமாக கிடைத்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்குள் முடிந்து விடுகிறது. மீண்டும் ஒரு நல்ல Anti virus மென்பொருள் தேடுவோம். இந்தப் பிரச்னைகளை சரி செய்ய onlineனிலேயே நமது கணினியை Scan செய்யலாம். கீழே உள்ள தளத்திற்க்குச் சென்று start scan கொடுத்து உங்கள் கணினியில் virus தாக்கம் ஏதும் இருக்கிறதா என்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள். தள முகவரி http://www.bitdefender.com/scanner/online/free.html
கடல் மட்டம் 2 அடி உயரும் அபாயம்
பூமி வெப்பமயமாகி வருவதால் அடுத்த 90 ஆண்டுகளுக்குள் கடல் நீர் மட்டம் 2 அடி உயரும் என கோபன்ஹெகன் University ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் carbon-di-oxide மற்றும் இதர சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக பூமி வேகமாக வெப்பமயமாகி வருகிறது. இதனால் Atlantic கடல் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது உள்ள நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டம் 2 அடியும், அதற்கடுத்த 4 ஆண்டுகளில் 6 அடியும் உயரும். இதனால் கடற்கரையை ஒட்டி உள்ள தாழ்வான பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கடல் மட்டம் சில இடங்களில் உயர்வதாலும், சுனாமி ஏற்படுவதாலும் சிறிய தீவுகள் காணாமல் போவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
சந்திரனில் டைட்டானியம்
பூமியில் மிக குறைந்தளவே உள்ள டைட்டானியம் உலோகம் நிலவில் அதிகளவில் கொட்டிக் கிடப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சந்திரனில் ஆராய்ச்சி மேற்கொள்ள அமெரிக்காவின் மூலம் அனுப்பப்பட்ட லூனார் ரிக்கான்ஸியன்ஸ் ஆர்பிட்டர் என்ற விண்கலத்தில் பொருத்தப்பட்ட கேமராக்களால் 7 வித்தியாமான ஓளி அலைகளில் எடுக்கப்பட்ட படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர். இந்த படங்களை கடந்த 1972ம் ஆண்டு அப்போலோ 17 என்ற விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களால் கொண்டு வர சந்திரனில் இருந்து எடுக்கப்பட்ட பாறை படிவங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர். பல தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்க் ராபின்சன் கூறியதாவது, சந்திரனை பூமியில் இருந்து பார்த்தால் சாம்பல் நிறம் பூசியது போல தோற்றம் அளிக்கிறது. ஆனால் தகுந்த கருவிகளுடன் பார்த்தால் சந்திரன் பல நிறங்களில் ஒளிர்வது தெரியும். இதன்மூலம் சந்திரனில் பல வேதிப் பொருட்கள் உள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது. பூமியில் உள்ளதை விட இரும்பு மற்றும் டைட்டானிய தாதுக்கள் சந்திரனில் அதிகளவில் காணப்படுகிறது. டைட்டானியம் என்பது இரும்பை விட உறுதியானது. ஆனால் எடை குறைந்தது. இதனால் அதிக விலை மிக்கதாக உள்ளது. பூமியில் டைட்டானியம் மிக குறைந்த அளவில் அதாவது 1 சதவீதம் மட்டுமே காணலாம். தற்போதைய ஆராய்ச்சிகளின் மூலம் சந்திரனில் 10 சதவீதத்திற்கு மேலாக டைட்டானியம் உள்ளதாக தெரிகிறது. மேலும் சந்திரனில் ஆக்சிஜன், ஹைட்ரஜன், ஹீலியம் உள்ளிட்ட வாயுக்களும் உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன, என்றார்.

Subscribe to:
Posts (Atom)