வீடியோக்களின் பொக்கிசமாக திகழும் மிகப் பிரபல்யமான தளம் YouTube ஆகும். இங்கு காணப்படும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்களுக்குள் நாம் எதிர்பார்க்கும் வீடியோவை எளிதாக பெறுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன.
1. Channel முறையில் தேடுதல்: அதாவது இங்கு தரவேற்றப்பட்டிருக்கும் அனைத்து வீடியோக்களும் வெவ்வேறு வகைகளின் அடிப்டையிலேயே தரவேற்றப்பட்டிருக்கும்.
உதாரணமாக நாடகங்கள், சினிமா, நகைச்சுவை என்று வகைப்படுத்தப்பட்டிருக்கும். ஆகவே உங்கள் தேடலின்போது பின்வருமாறு பயன்படுத்தவும் Royal wedding, channel
2. (+) குறியை பயன்படுத்தல்: 2011ம் ஆண்டு football-ல் போடப்பட்ட மிகச் சிறந்த கோல்கள் பற்றிய தேடலின்போது football hits+2011 என்றவாறு பயன்படுத்தலாம்.
3. (,) குறியை பயன்படுத்துதல்: உதாரணமாக 3D வீடியோக்களை தரவிறக்கவேண்டிய தேவை ஏற்படின் பின்வருமாறு பயன்படுத்தலாம் – Avatar, 3D
4. இரட்டைத் தொழிற்பாடு: இச்செயற்பாட்டின் போது (+),(,) ஆகிய குறிகள் பயன்படுத்தப்படலாம். உதாரணம் -Mission impossible +2011, HD
No comments:
Post a Comment