Pages

10 Mar 2012

என்ன புத்தகம் படிக்கலாம்? இணையதளம் பரிந்துரை செய்கிறது


புதிதாக என்ன புத்தகம் படிக்கலாம் என்னும் கேள்விக்கு பதில் அளிக்கும் தளங்களில் புதிய வரவாக Mind The Book தளம் அறிமுகமாகியுள்ளது. மற்ற தளங்களில் இருந்து மாறுபட்டு புதுமையான முறையில் இந்த தளம் உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் இந்த தளம் நீங்கள் அடுத்ததாக படிக்க கூடிய புத்தகத்தை பரிந்துரை செய்கிறது.
பெரும்பாலான புத்தக் பரிந்துரை தளங்கள்,ஒருவர் படிக்கும் புத்தக வகையை வைத்து அவருக்கு பிடிக்க கூடிய புத்தகத்தை முன் வைக்கின்றன. இந்த தளமோ எந்த புத்தகம் தேவை என்று கேள்வி கேட்க சொல்கிறது. அந்த கேள்விக்கு விடை அளிக்கும் புத்தகத்தை பரிந்துரைக்கிறது. உதாரணத்திற்கு ஒருவர் தன்னம்பிக்கை தரக்கூடிய புத்தகத்தை படிக்க விரும்பலாம், இன்னொருவர் செல்வந்தாராக வழிகாட்டக்கூடிய புத்தகத்தை தேடலாம்.
இப்படி புத்தகங்கள் விடை அளிக்க கூடிய கேள்விகளை பட்டியலிட்டு கொண்டே போகலாம். இதை தான் எல்லா புத்தகமும் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கிறது என்று Mind The Book தளம் குறிப்பிடுகிறது.

அடுத்ததாக என்ன புத்தகம் படிப்பது என்னும் கேள்விக்கு ஆலோசனை பெற விரும்பும் வாசகர் இந்த தளத்தில் தாங்கள் எதிர்பார்க்கும் புத்தகத்திற்கான கேள்வியை கேட்டால் அதற்கான புத்தகத்தை இந்த தளம் பரிந்துரைக்கிறது.

விஞ்ஞானியாவது எப்படி என்பதில் துவங்கி நல்ல படங்களை ரசிப்பது எப்படி (சினிமா ரசனை என்னும் தலைப்பில் அம்ஷன் குமார் அருமையான புத்தகத்தை எழுதியிருக்கிறார்)என்பது வரை எந்த கேள்வியை வேண்டுமானாலும் புத்தக பிரியர்கள் கேட்கலாம்.
சமீபத்தில் கேட்கப்ட்ட கேள்விகள், பிரபலமான புத்தக கேள்விகள் என தனித் தனி தலைப்புகளின் கீழ் புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பதில் அளிக்கப்படாத கேள்விகளுக்கும் ஒரு பட்டியல் இருக்கிறது.

ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்ககூடிய பல புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கூடவே அந்த புத்தகம் அவற்றுக்கான கேள்விக்கு பதில் தருகின்றனவா என்று வாச்கர்கள் கருத்து தெரிவிக்கும் வசதியும் உள்ளது. தங்களுக்கு தெரிந்த பொருத்தமான புத்தகத்தையும் பரிந்திரைக்கலாம்.

சரியான புத்தகத்தை அடையாளம் காட்டுவதோடு இந்த தளம் தனது சேவையை நிறுத்தி கொள்கிறது. அந்த புத்தகம் அப்படி இப்படி என்னும் அறிமுக குறிப்புகளோ, விமர்சன குறிப்புகளோ இல்லை. புத்தகத்தை பார்த்து விட்டு நேரடியாக அமேசானில் வாங்கி கொள்ளலாம். அவ்வளவு தான். இந்த எளிமை தான் இதன் பலமும் கூட.
தினந்தோறும் ஆயிரக்கணக்கில் புதிய புத்தகங்கள் வெளியாகி வாசகர்களை புத்தக கடலில் திக்கு முக்காட வைக்கும் நிலையில் என்ன புத்தகத்தை படிக்கலாம் என்னும் கேள்விக்கு best seller பட்டியல், விமர்சன் குறிப்புகள், பரிந்துரைகள் ஆகியவற்றை எல்லாம் விட இது சிறந்த வழியாக இருக்கும் அல்லது அவற்றோடு இதுவும் ஒரு ஒரு சிறந்த வழியாக இருக்கும்.
இணையதள முகவரி - http://www.mindthebook.com/

9 Mar 2012

பழம் மற்றும் காய்களை கண்டறியும் Scanner


பொதுவாக Super Market போன்ற விற்பனை நிலையங்களில் உள்ள பொருட்களின் விலை மற்றும் அது என்ன பொருள் என்பதற்கு  பார்கோட் scanner பயன்படுத்தப்படும். இவை பொருட்களில் உள்ள பார்கோட் இலக்கங்களை அறிந்து அதிலுள்ள விலை உட்பட்ட விபரங்களை தெரியப்படுத்தும்.

ஆனால் தற்போது Toshiba நிறுவனம் புதிதாக பார்கோட்களை பயன்படுத்தாது பழம் மற்றும் காய் வகைகளை நேரடியாகவே scan செய்து அவற்றின் விபரங்களை அறியும் வகையில் புதிய scanner  ஒன்றை உருவாக்கியுள்ளது.

இந்த scanner பருமன், வடிவம், நிறம் போன்றவற்றை கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் தரவுத் தளத்துடன்(Database)   ஒப்பிட்டு என்ன பழம் காய் என அடையாளம் காண்பிக்கிறது. இது சிறப்பாகவும் செயல்படுகிறது என Toshiba நிறுவனம் தெரிகின்றது.
Scanner-ன் செயல்பாடு எவ்வாறு என்று காண விரும்புகின்றீர்களா? கீழே உள்ள video-வை பாருங்கள்.


8 Mar 2012

Wipro Laptop “Ego Aero Ultra”


இந்தியாவில் மென்பொருள் தயாரிப்பு மற்றும் தகவல் தொடர்பு பணிகளில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கும் Wipro நிறுவனம் Ego Aero Ultra என்ற புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது.  மிகவும் மெல்லிய லேப்டாப். 
இந்த புதிய Ego Aero வரிசையில் வரும் இந்த லேப்டாப்புகள் எல்லா தேவைகளையும் நிறைவு செய்யும்.  இது ஒரு திறமை வாய்ந்த மற்றும் எடை குறைந்த நோட்புக் ஆகும். அன்றாட வேலைகளைச் செய்வதில் இந்த லேப்டாப்  சிறந்தது என்று கூறலாம்.
இந்த லேப்டாப் 2ஜி Intel Core i5 ஐ5 Processor மற்றும் ஒரு 11.6 inch LED HD display உள்ளது.  இந்த லேப்டாப் மக்னீசியத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் டிசைனும் பக்காவாக உள்ளது. இதன் தடிமன் 19.3 மிமீ ஆகும். இதன் எடை 1.7 கிலோ மட்டுமே. மேலும் இந்த லேப்டாப் 4GB memory மற்றும் 500GB Hard disk கொண்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப் Windows 7 OS கொண்டிருக்கிறது. அதுபோல் கீபோர்டு மற்றும் multi touch பேடையும் கொண்டிருக்கிறது.
இந்த புதிய லேப்டாப் இன்டல் மற்றும் விப்ரோ போன்றவற்றின் கூட்டு முயற்சியினால் உருவானதாகும்.  இவற்றின் விலை ரூ.45,000லிருந்து ஆரம்பமாகிறது.
விப்ரோவின் விபி மற்றும் வர்த்தகப் பிரிவின் தலைவாரான திரு. அசோக் திருப்பதி கூறும் போது இந்த புதிய லேப்டாப் வளரும் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்.

7 Mar 2012

Dell Latitude E6220 Laptop



Dell Latitude E6220 ஒரு சிறிய மற்றும் உறுதியான Laptop என்று கூறலாம். இதன் செயல் திறன் அட்டகாசமாக இருக்கிறது. இதன் சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் 1366 x 768 pixel resolution கொண்ட 12.5 inch display கொண்டிருக்கிறது. அதுபோல் 128 GB SSD hard drive உள்ளடக்கியுள்ளது.
இதன் processor எடுத்துக் கொண்டால் அது 2.6 GHz Intel Core i5-2540M கொண்டிருக்கும்.  இதனை upgrade செய்துகொள்ளலாம். இதன் Memory  4GB, 1,333MHz DDR3 ஆகும். அது போல் graphics வேலைகளுக்காக Integrated எச்டி 3000 graphics processing unit கொண்டுள்ளது. மேலும் 1080p video playback-ம் உள்ளது.
இந்த டெல் லேப்டாப்பின் பேட்டரி 7.30 மண நேரி இயங்கு நேரத்தை அளிக்கிறது. இந்த லேப்டாப்பின் மொத்த எடை 1.7 கிலோவாகும். அதுபோல இது விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் இயங்குகிறது.
இணைப்பு வசதிகளைப் பார்த்தால் இஎஸ்எடிஎ/யுஎஸ்பி கோம்போ போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட்டுகள், எச்டிஎம்ஐ போர்ட், ஜிகாபிட் எர்த்நெட் மற்றும் ப்ளூடூத் போன்ற வசதிகளை இது தாங்கி வருகிறது. மேலும் எக்ஸ்பிரஸ் கார்டு ஸ்லாட், வெப்காம் மற்றும் ஹெட்போன் ஜாக் போன்றவை இந்த லேப்டாப்பை மெருகு ஏற்றுகின்றன. இதன் கீபோர்டு மிக அட்டகாசமாக இருக்கிறது.
மேலும் இந்த லேப்டாப்பில் அதிக உயர் திறன் கொண்ட பேட்டரியை தேவைப்பட்டால் பொருத்திக் கொள்ளலாம். இந்த டெல் லேப்டாப்பின் விலை ரூ.75,000 முதல் ஆரம்பமாகிறது.

ஓவியம் வரையும் ரோபோ


விளையாட்டு சாதனங்களில் தொடங்கிய ரோபோக்கள் படிப்படியாக ஆதிக்கத்தை வளர்த்து கார் தொழிற்சாலைகள், கனரக சாதனங்கள் உற்பத்தி வகையில் புகுந்தன. பின்னர் மருத்துவமனைகளில் சில குறிப்பிட்ட ஆபரேஷன்களையும் வெற்றிகரமாக செய்து சாதனை நிகழ்த்தின.
தற்போது Germany நாட்டில் கார்ல்ஸ்ருதி நகரை சேர்ந்த ஒரு நிறுவனத்தினர் ஓவியம் தீட்டும் ரோபோவை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ரோபோ முன்பு அமர்ந்தால் போதும் 10 நிமிடங்களில் நமது உருவத்தை மிகவும் அழகாக வரைந்து விடும்.
அதன் செயல்பாடு குறித்து இதனை வடிவமைத்த நிறுவனத்தின் விஞ்ஞானி மார்டினா ரிசெர் கூறுகையில் இதில் உள்ள camera மனித உருவத்தை படம் எடுத்து நுட்பமான மென்பொருள் உதவியுடன் ரோபோ கரங்களுக்கு அது கட்டளையிடப்பட்டு உருவம் வரையப்படுகிறது என்றார். ரோபோ அழகாக வரைவதை கண்டு ரசிக்க கீழே உள்ள வீடியோ பாருங்கள்

Programming கற்றுத்தரும் இலவச இணையதளம்



எப்படியாவது Computer Programming மொழிகளைக் கற்று பல்வேறு வகையான திட்டங்களுக்கென programming செய்திட வேண்டும் என்பதே பலரது கனவாக உள்ளது. வேலை வாய்ப்பு, அதிக சம்பளம், பதவி உயர்வு, வெளிநாட்டில் பணி எனப் பல ஈர்ப்புகள் இதன் அடிப்படையாய் உள்ளன.
இவை தவிர programming ஒரு சவாலாக உள்ளது. பலர் இதில் மனநிறைவு பெறுவதற்காகவே programming பாடங்களைக் கற்றுக் கொள்ளத் திட்டமிடுகின்றனர். இவர்களுக்காக இணையத்தில் ஓர் இலவச தளம் இயங்குகிறது.
இதன் பெயர் Code Academy. Programme எழுதுவதனை codingஎனக் கூறுவார்கள். எனவே அந்தப் பெயரிலேயே இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தரப்படும் பாட திட்டங்களுக்கென இதில் account திறக்கும் முன்னர் programming எப்படி இருக்கும் என நமக்கு மிக மிக எளிதான முறையில் பயிற்சி முறையில் விளக்கப்படுகிறது.
நம் பெயரை எழுதச் சொல்லி தொடங்கும் பாடம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகநம்மை programming என்றால் இவ்வளவு எளிதானது என்று உணர வைக்கும் அளவிற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு மின்னஞ்சல் முகவரி, பேஸ்புக் தளத்தில் அதன் தொடர்பு என ஏதாவது ஒன்று இருந்தால் போதும். பதிந்த பின்னர் தான் பாடங்கள் விறுவிறுப்பாகக் கற்றுத்தரப்படுகின்றன.
Programming செய்திடும் பயிற்சியில் நமக்கு Tips தரப்பட்டு வழி காட்டப்படுகிறது. பாடங்களைக் கற்றுக் கொள்வதில் முன்னேற்றம் ஏற்படுகையில் நாம் பெறும் மதிப்பெண்கள் அதற்கான பதக்க அட்டைகள் காட்டப்படுவது இவைகள் அனைத்தும் கற்றுக் கொள்ளும் செயல்பாட்டினத் தூண்டுகிறது. ஆர்வம் இருந்தால் அனைவரும் programming கற்றுக் கொள்ளலாம் அதுவும் இலவசமாக.
இணையதள முகவ்ரி - http://www.codecademy.com/#!/exercises/0

5 Mar 2012

Smart Phone-களினால் வடிவமைக்கப்பட்ட இராட்சத பறக்கும் குதிரை (வீடியோ இணைப்பு)


இன்றைய மனித வாழ்வில் கைப்பேசி என்பது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. கைப்பேசிகள் பேச மட்டுமல்ல மனிதர்களை மிரட்டவும் செய்யும் என்று Huawei நிறுவனம் நிரூபித்துள்ளது.Huawei நிறுவனம் தனது கைப்பேசி தயாரிப்புகளில் ஒன்றான smartphones-ல் புதிய தொழில்நுட்பம் ஒன்றை புகுந்தியுள்ளது. அது பலரையும் சென்றடைய கூடிய வகையில் புதிய விளம்பர உத்தியை கையாண்டுள்ளது.
அதாவது smartphones கைப்பேசிகளை கொண்டு பறக்கும் குதிரை இராட்சத சிலை ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஸ்பெயின் நாட்டின் MWC மண்டபத்திற்குள் முன்னால் இந்த விளம்பர சிலையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
சுமார் 3500 கைப்பேசிகளை கொண்டு இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 19 அடி நீளமுள்ள இந்த குதிரையை வடிவமைக்க சுமார் 720 மனித மணித்தியாலங்கள் செலவிடப்பட்டுள்ளன. D Quad என்ற புதிய தொழில்நுட்ப உத்தியை அறிமுகம் செய்கின்றது Huawei நிறுவனம்.


குட்டிப் பாலகர்களின் உலகப் பெரும் சாதனை (வீடியோ இணைப்பு)

நாம் அனைவரும் ஏதாவது சாகசம் செய்ய விரும்புவோம் அல்லது முயன்று கொண்டிருப்போம்.  கீழே உள்ள சிறுவர்களைப் பாருங்கள் உலகிலேயே வலிமையான சிறுவர்கள் இவர்கள் தான்.  வீடியோ இணைப்பு பார்த்து மகிழுங்கள்


500 kmph வேகத்தில் பறக்கும் ரயில் (வீடியோ இணைப்பு)


வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் புதுப் புது கண்டுபிடிப்புக்கள் வந்து கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் 500 kmph பயணிக்க கூடிய ரயில் சேவையினை சீன நிறுவனம் ஒன்று பரீட்சித்துப் பார்த்துள்ளது.
சீனாவின் மிகப் பெரிய railway கட்டுமான நிறுவனமான CSR Corp. Ltd இத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இத்திட்டத்திற்கு சீனா ரயில்பாதை திணைக்களம் மறுப்பு தெரிவித்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த July மாதம் ஆரம்பிக்கப்பட்ட 300 kmph வேகத்தில் பயணிக்கும் ரயில் சேவையினால் சுமார் 40 பேர் வரை மரணமடைந்துள்ளதால் அதிக வேக ரயில் சேவை தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் Liu Zhijun தெரிவித்துள்ளார்.

3 Mar 2012

இணையத்தை பயன்படுத்துபவர் கவனிக்க வேண்டியவை



இணையத்தை பயன்படுத்தும் போது அனைவரும் அடிப்படை பாதுகாப்பு ஏற்பாடுகளை அறிந்திருக்க வேண்டும்.
1. Signing out: எப்போதும் இணையத்தை பயன்படுத்திய பின்னர் மறக்காமல் log out செய்யுங்கள். அத்துடன் கணினியை shut down செய்ய வேண்டும்.
2. Set a safe password: எப்போதும் பாதுகாப்பான கடவுச் சொற்களை தேர்வு செய்யுங்கள். ஞாபகப்படுத்தக்கூடிய சொற்தொடர்களை எடுத்து அதன் முதல் எழுத்துக்களை கடவுச் சொற்களாக மாற்றிக் கொள்ளலாம்.
3. How to recognise: மின்னஞ்சலில் வரும் இணைப்புக்களை அழுத்தும் முன் mouse குறிப்பிட்ட இணைப்புக்கு மேலே கொண்டு செல்வதன் மூலம் அதன் உண்மையான இணைய முகவரியை(URL) பாருங்கள்.
4. Use a safe browser: பாதுகாப்பான உலாவியை பயன்படுத்துங்கள். Firefox அல்லது Chrome உலாவியை (browser) பயன்படுத்தவதே எப்போதும் சிறந்தது.

தேவைக்கு ஏற்ப Recycle Bin அளவினை மாற்ற



நமது கணினியில் உள்ள டிரைவின் அளவிற்கு ஏற்ப நாம் recycle bin-ஐ அமைத்துக் கொள்ளலாம்.
இதனை தெரிவு செய்ய recycle bin-ஐ right click செய்து Properties தெரிவு செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு open ஆகும் window-வில் Global தெரிவு செய்யவும்.
எல்லா டிரைவ்விற்கும் ஒரே அளவிளான recycle bin வைக்க வேண்டும் என்றால் Use one settings for all drives எதிரில் உள்ள ரேடியோ button தெரிவு செய்யுங்கள். உங்களுக்கு தேவையான டிரைவிற்கு ஏற்ப அளவினை தெரிவு செய்ய Configuare drives independently எதிரில் உள்ள ரேடியோ button தெரிவு செய்யுங்கள்.
பின் open ஆகும் window-வில் உங்களது கணினியில் உள்ள டிரைவ்கள் இருக்கும். தேவையான டிரைவ்வை தெரிவு செய்து தேவையான அளவினை slider மூலம் நிர்ணயிக்கலாம்.
இறுதியாக Apply செய்து Ok கொடுக்கவும். நாம் பொதுவாக recycle bin அனைத்து டிரைவ்விற்கும் சேர்த்து ஒன்றாக இருக்கும் என நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அதிலும் ஒவ்வொரு டிரைவ்விற்கும் ஏற்ப அளவினை நாமே அமைத்துக் கொள்ளலாம்.

மனதிற்கு பிடித்தமான இசையினை கேட்டு மகிழ்வதற்கு…..



இசைக்கு மயங்காத உயிரினங்கள் என்று எதுவும் கிடையாது. ஒவ்வொரு இசைக்கும் ஒவ்வொரு வல்லமை உண்டு.
சில வகையான இசை நம்மை வீரம் உள்ளவர்களாக மாற்றும், சில வகை இசைகள் மனதை வருடும், சில வகையான இசை ஆட்டம் பாட்டத்தை உண்டு பண்ணும். அந்த வகையில் இன்று மனதிற்கு அமைதியை அளிக்கும் இசையயை ஒரு தளம் கொடுக்கிறது.
அழகான படங்கள் சில நேரங்களில் நம் மனதை விட்டு செல்லாமல் மகிழ்ச்சியை கொடுக்கும். சில இனிமையன இசை நம் மனதிற்கும் உடலுக்கும் அமைதியை தரும். இப்படி அழகான இசையை நமக்கு இலவசமாக கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இந்த தளத்தில் கிடைக்கும் பலவகையான இசை பகுதி வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இசையும் அதற்கு தொடர்பான அழகான படத்துடன் காண்பதற்கும் கேட்பதற்கும் அழகாக இருக்கிறது. இசையின் ஒலி அளவை ஏற்றம் செய்வது முதல் நமக்குத் தகுந்தபடி மாற்றி அமைக்கும் படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இயற்கையில் கிடைக்கும் அத்தனை வகையான சத்தங்களையும் அழகாக பதிவு செய்து நம் மனதினை வருடும். இணையதள முகவரி http://www.ambient-mixer.com/

செல்போன் அழைப்பை தடுக்க புதிய கருவி



காரை ஓட்டிச் செல்லும் போது வரும் செல்போன் அழைப்புகளை தடுக்க புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செல்போன் வசதி மூலம் தகவல் பரிமாற்றத்தில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டிச் செல்லுகையில் செல்போனை பயன்படுத்துவதால் கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுகின்றன.
செல்போனால் ஏற்படும் விபத்துகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் செல்போனால் ஏற்படும் வாகன விபத்துகளை குறைப்பதற்காக, ஸ்கோச் என்ற தொழில்நுட்ப நிறுவனம் ‘செல் கன்ட்ரோல்’ என்ற நவீன கருவியை அறிமுகம் செய்துள்ளது.
கையில் எடுத்துச் செல்லும் அளவிற்கு சிறிய கருவியான இதை காரில் பொருத்தினால் பயணத்தின் போது செல்போனுக்கு அழைப்பு வந்தால் புளுடூத் சிக்னல் மூலம் அழைப்பு தடுக்கப்படும். மேலும் SMS, E-Mail போன்ற சேவைகளை முற்றிலும் இக்கருவி தடுத்து விடும்.
குறிப்பாக வாடகைக் கார்களில் டிரைவர்கள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க இந்த கருவி உதவும். கருவியை டிரைவர் ஏதாவது வகையில் செயலிழக்கச் செய்தால் அது பற்றி Travels அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டறைக்கு தகவல் வந்து விடும்.
இந்த செல்போன் கன்ட்ரோல் கருவியின் விலை சுமார் 6,500 ரூபாய். ஆரம்பத்தில் 1,200 கருவிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளதால் இதற்கு கடும் போட்டி நிலவியது.

29 Feb 2012

Google +ல் Photo மீது தமிழில் எழுதும் வசதி



மிகவேகமாக வளர்ந்து வரும் சமூக இணையதளமான Google +ல் ஒரு புதிய வசதியை வெளியிட்டு உள்ளனர். Google +ல் போட்டோக்கள் பகிரும் பொழுது அந்த போட்டோக்களில் நாம் விரும்பியதை எழுதலாம். தமிழ் மொழியையும் support  செய்வது இதன் கூடுதல் சிறப்பாகும். Google + தவிர வேறு எந்த சமூக தளத்திலும் இந்த வசதி இல்லை என நினைக்கிறேன். நாம் எழுதும் வாக்கியம் போட்டோக்கள் அளவிற்கு ஏற்ப எழுத்துக்களின் அளவு தானாகவே குறைந்து விடுகிறது.
Google +ல் எப்பொழுதும் போட்டோக்கள் பகிர்வது போல Add Photo click செய்து புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். Add Text என்ற ஒரு புதிய வசதி இருக்கும் அதன் மீது click  செய்யுங்கள்.
அடுத்து இன்னொரு window open ஆகும். அதில் Top, middle, Bottom என மூன்று கட்டங்கள் இருக்கும் எந்த இடத்தில் வாக்கியம் சேர்க்க வேண்டுமோ அந்த கட்டத்தில் உங்களின் வாக்கியத்தை type செய்யவும். கூகுளின் IME பயன்படுத்தி நேரடியாக தமிழில் type செய்யலாம்.
வலது புறத்தில் உள்ள T என்ற link click செய்து வேண்டிய Font Family தேர்வு செய்து கொள்ளவும். உங்கள் வார்த்தையை கொடுத்தவுடன் கீழே உள்ள Save button அழுத்தி வரும் window-வில் Share செய்து விடலாம்.

போட்டோவில் தமிழில் watermark சேர்க்க விரும்புவோருக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். Watermark சேர்த்த பின் வேண்டுமென்றால் உங்கள் கணினியில் சேமித்து மற்ற இடங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

Sony Ericsson Walkman droid இந்தியாவில் அறிமுகம்



Sony Ericsson நிறுவனததினர் தற்போது இந்தியாவில் Walkman smartphone-ஐ அறிமுகம் செய்துள்ளனர்.     Sony Music-ல் இருந்து 2GB அளவுள்ள பாடல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். Aircel வடிக்கையாளர்கள் Walkman Smartphone-ஐ வைத்திருந்தால் 20 முழு நீல பாடல்களை இலவ்சமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  இதன் விவரக்குறிப்புகள் பின்வருமாறு
  • 3.2-inch TFT Capacitive Touchscreen with a 320 x 480 pixel resolution
  • 1GHz Scorpion processor, 512 MB of RAM
  • Android 2.3 Gingerbread
  • 320MB internal storage
  • 3G, EDGE/GPRS, Wi-Fi ‘n’
  • GPS with A-GPS support
  • Bluetooth 3.0 with A2DP, USB 2.0
  • 5MP auto-focus camera with LED flash, 720p video recording
  • Stereo FM radio with RDS
  • Memory expandable up to 32 GB via microSD
  • 3.5 mm handsfree socket
  • 1200 mAh Li-ion battery
இதன் சந்தை விலை ரூபாய் 14,549/- மட்டுமே.