ஒரு கொசு வர்த்தி சுருள் எரியும் போது வரும் புகை 100 சிகரெட்டுக்களுக்கு சமமான பாதிப்புக்களை உண்டு பண்ணும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் கொசுக்களை ஒழிப்பதற்கு இந்த கொசு வர்த்தி சுருள் அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் சுவாசக்குழாய்கள் மற்றும் நுரையீரல் போன்றன பெருமளவில் பாதிக்கப்படுவதாக் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடுமையான பாதிப்புக்களை பொதுமக்கள் அறியாமல் உள்ளனர். இந்த ஆய்வை மலேசியாவைச் சேர்ந்த இதய நோய் சிறப்பு நிபுணர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்தத் தகவல் ஆனது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 Jan 2012
Fridge-ல் வைத்த அசைவ உணவா -சாப்பிடாதீங்க!
உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக வைத்திருக்க கண்டுபிடிக்கப்பட்டதே Fridge. சமைக்க சோம்பேறித்தனம் கொண்டவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனம் போல் ஆகிவிட்டது Fridge. பலருக்கு எது எதையெல்லாம் வைப்பது என்றே வரைமுறையே கிடையாது. எதையும் வீணாக்காமல் சிக்கனமாக இருக்கிறோம் என்ற நினைப்பில் முந்தா நாள் சாம்பார், போனவாரம் வைத்த ரசம், புளித்து போன இட்லி மாவு, பால், காய்கறி,முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள் என சகலத்தையும் Fridge உள்ளே வைத்து கதற அடித்துவிடுவார்கள். இது மிகவும் தவறானது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
காய்கறி,கீரை மற்றும் இறைச்சி, இட்லி மாவு போன்றவற்றை வாரக் கணக்கில் Fridge-ல் வைத்திருக்காமல் கூடிய வரை ஃபிரஷ்ஷாக பயன்படுத்துவதே நல்லது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். குறிப்பாக fridge-ல் வைத்த இறைச்சியை பயன்படுத்துவது வேண்டவே வேண்டாம் என்பதுதான் அவர்களின் முக்கிய அறிவுரை.
நீண்ட நாட்கள் fridge-ல் வைத்திருக்கும் மாமிசத்தில் bacteria உருவாகிவிடும் .அத்தகைய இறைச்சியை சரிவர சமைக்காமல் உண்டுவிட்டால் இரைப்பையில் நோய் தாக்கிவிடும். இதுபோன்ற இறைச்சியை உண்பதினால் இரைப்பை தொடர்பான நோய்கள் ஏற்படுவதோடு மட்டுமல்லாது, ஈரல், சிறுநீரகம் மற்றும் மூளையின் செயல்பாடு ஆகியவற்றின் செயல்பாட்டை பாதிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
விஷமாகும் உணவு
இறைச்சியை உடனடியாக கடைகளில் வாங்கிய உடனே வெட்டி வாங்கி சமையலுக்கு பயன்படுத்தினால் தான் அதில் உள்ள புரத சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். அவ்வாறு இல்லாமல் வாரக் கணக்கில் இறைச்சியை fridge-ல் வைத்து பின்னர் அதனை சமைப்பதினால் அதிலுள்ள புரத சத்துக்கள் அழிந்துவிடுவதோடு மட்டுமல்லாது அதன் தூய்மையும் பாதிக்கப்பட்டு சமயங்களில் அது விஷ உணவாக மாறவும் வாய்ப்புண்டு என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் பெரும்பாலும் fridge-ல் வைத்த இறைச்சியே சமைக்கப்படுவதால் ஓட்டல்கள், சிற்றுண்டியகங்கள் மற்றும் திறந்தவெளி உணவகங்களில் வழக்கமாக சாப்பிடும் பழக்கத்தை கைவிடுவதே நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்!
எளிதில் நோய் தாக்கும்
அதேபோன்று நோய் தாக்கிய ஆடு, மாடு அல்லது கோழி போன்ற இறைச்சியில் வைட்டமின் புரத சத்துக்கள் சிதைந்து போயிருக்கலாம். எனவே இத்தகைய இறைச்சியை fridge-ல் வைத்து உண்பதனால் நோய் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது என்பதே மருத்துவர்களின் எச்சரிக்கை. அதேபோல் நாட்கணக்கில் சமைத்து fridge-ல் வைத்த உணவை பின்னர் அடிக்கடி எடுத்து சூடு செய்து சாப்பிடுவதை நோய்களை நாமே காசு கொடுத்து அழைப்பதற்கு சமம். எனவே உணவுகளை தினசரி சமைத்து உண்பதே ஆரோக்கியம் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரையாகும்.

பாம்பு பாம்பை சாப்பிடும் காணொளி
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்லுவார்கள் இங்கே பாம்பை கண்டு பாம்பே நடுங்குகிறது. பெரிய மலைப்பாம்பை ஒரு கருத்த கருணாக பெரிய பாம்பு பிடித்து விழுங்கும் அதிசய காணொளி நீங்களும் பாருங்கள்.
10 Jan 2012
சீனா தன்னுடைய ஒவ்வொரு செயல்பாட்டிலும் புதுமையும், அறிவையும் புகுத்தி வெற்றி கண்டு வருகின்றது. 30 மாடிகள் கொண்ட ஒரு தங்கும் விடுதியை 15 நாட்களில் கட்டி முடித்திருக்கின்றனர்.
சீனாவில் உள்ள Changsha மாகாணத்திலுள்ள Inland நகரத்தில் அமைந்துள்ள ஆர்க் என்ற தங்கும் விடுதியே இவ்வாறு மிகக் குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
183,000 சதுர அடிகள் கொண்ட இந்த தங்கும் விடுதி அசுர வேகத்தில் கட்டி முடிக்கப்பட்ட போதும் 9 ரிக்டர் அளவில் வரும் பூமியதிர்ச்சியையும் தாங்கும் வல்லமை கொண்டது.இந்த தகவலை கட்டுமான நிறுவனத்தினர் உறுதியுடன் தெரிவித்துள்ளனர். இந்தச் சாதனை முழுவதும் காணொளியில் படமாக்கப்பட்டுள்ளதை நீங்களும் காணலாம்.
நிலநடுக்கம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு
அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் உலகம் முழுதும் ஏற்படும் நிலநடுக்கங்களை கண்காணித்து வருகின்றது. அமெரிக்க புவியியல் ஆய்வு மைய இணையதளம் சில நிமிடங்கிளில் உங்கள் பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்கள் பற்றிய எச்சரிக்கை தகவல்களைத் தருகின்றது. http://sslearthquake.usgs.gov/ens/ என்ற முகவரிக்குச் சென்று Subsribe செய்த பின்னர் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேரும். அந்த மின்னஞ்சலில் உள்ள இணைப்பில் சென்று தளத்தில் தெரியும் Googleன் வரைபடத்தில் நீங்கள் வசிக்கும் பகுதியை தெரிவித்த பின்னர் save செய்துவிடவும். இனிமேல் நிலநடுக்க எச்சரிக்கை உங்கள் மின்னஞ்சலில் வந்து சேரும். மேலும் அமெரிக்காவில் ஏற்படும் நிலநடுக்கம் பற்றிய தகவல்கள் 2 முதல் 8 நிமிடங்களில் கிடைத்துவிடும் எனவும், ஆனால் ஏனைய பகுதிகளுக்கானவை 20 நிமிடங்கள் வரை ஆகலாம் எனவும் தெரிவிக்கின்றது இந்தத் தளம்.
இரண்டே வாரத்தில் 14 லட்சம் order-களை குவித்து Aakash Tablet உலக சாதனை
Aakash Tablet-களைப் பற்றி அறிந்து இருப்பீர். உலகிலேயே மிகக் குறைவான விலையுள்ள Tablet முதன் முதலாக இந்தியாவில் Datawind நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு Rs.2500 க்கு வெளியாக அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது. இதன் அடுத்த version Ubislate 7 இந்த மாத இறுதியில் வெளிவர இருக்கிறது. Online-ல் முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் பெருமாலானவர்கள் இந்த Tablet-களை online-ல் முன்பதிவு செய்து வருகின்றனர். இதன் மூலம் Datawind நிறுவனமே எதிர்பார்க்காத வகையில் ஆர்டர்கள் குவிகிறது. முன்பதிவு ஆரம்பித்த இரண்டே வாரத்தில் 14லட்சம் Tablet-கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சராசரியாக ஒரு நாளைக்கு 1,00,000 Tablet-கள் வீதம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது உலகளவில் மிகப் பெரிய சாதனை ஆகும். இதற்கு முன் Apple நிறுவனத்தின் iPad நான்கு வாரத்தில் 1,000,000 விற்றதே இதுவரை சாதனையாக இருந்தது. Aakash இந்த இமாலய இலக்கை இரண்டே வாரத்தில் முறியடித்து விட்டது.
இவ்வளவு ஆர்டர்களை எதிர்பார்க்காத Datawind நிறுவனம் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது. இந்த முன்பதிவு எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே இருப்பதால் Cochin, Noida மற்றும் Hyderabad என இந்தியாவில் மூன்று உற்பத்தி நிறுவனங்களை தொடங்க உள்ளது.

மிக மலிவான விலையில் கிடைப்பதாலும் சிறந்த வசதிகள் இருப்பதாலும் இவ்வளவு Tablet-கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. Ubislate முன்பதிவு செய்ய http://www.ubislate.com/prebook.html
கணினி நன்றாக இயங்க
கணினி நன்றாக இயங்க நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாதுகாப்பு குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.
1. உங்களுடைய இயங்குதளம் update ஆக இருக்க வேண்டும். புதிய இயங்குதளத்திற்கு மாற வேண்டும் என்பதில்லை. பயன்படுத்தும் இயங்குதளத்திற்கான அண்மைக் காலத்திய update கோப்புகள் இறக்கப்பட்டு பதியப்பட்டிருக்க வேண்டும்.
2. நீங்கள் உருவாக்கிய தகவல்கள் பாதுகாப்பாக இருக்க சிறப்பான antivirus கணினியில் நிறுவியிருக்க வேண்டும். அதுவும் அவ்வப்போது update ஆக இருக்க வேண்டும்.
3. தேவையில்லாமல் கணினி boot ஆகும் போதே தொடங்கி பின்னணியில் இயங்கும் programme -கள் உங்கள் கணினி பணியை தாமதப்படுத்தும். எனவே தேவையற்ற programme -கள்இயங்கிக் கொண்டிருந்தால் நீக்கி விடுங்கள்.
4. Firewall ஒன்று அவசியம் வேண்டும். Windows இயக்கத்துடன் வரும் Firewall கூட போதும்.
5. Tool bar-களை அவ்வப்போது tune செய்திட வேண்டும். தேவைப்படும் Tool bar-களை மட்டும் இயங்க வைத்திட வேண்டும். தேவையற்ற Tool bar-களை மூடிவிட்டால் RAM memory-யில் இடம் கிடைக்கும். கணினியும் வேகமாக இயங்கும்.
6. அடுத்தது தான் மிக முக்கியம். இந்த செயல்பாடு மேலே சொல்லப்பட்ட அனைத்தையும் உள்ளடக்கியதாகும். மாதம் ஒரு முறையாவது கணினியில் முழுமையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டும் ரோபோ நாய்
பார்வையற்றவர்களுடன் வாக்கிங் சென்றபடி அவர்களுக்கு வழிகாட்டக் கூடிய ரோபோ நாயை ஜப்பான் நிறுவனம் உருவாக்கி வருகிறது. ஜப்பானைச் சேர்ந்த பிரபல நிறுவனம் என்எஸ்கே கார்ப்பரேஷன். வாகன பேரிங்குகள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான பொருட்கள், தானியங்கி சாதனங்களுக்கான உதிரி பாகங்கள், ரோபோக்களில் பயன்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றை தயாரித்து வருகிறது.
இந்நிறுவனம் ஜப்பானின் எலக்ட்ரோ கம்யூனிகேஷன்ஸ் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து நாய் ரோபோ தயாரிக்கும் ஆய்வில் கடந்த 2005ம் ஆண்டு முதல் ஈடுபட்டுள்ளது. இந்த ஆய்வு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதுபற்றி என்எஸ்கே நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: பார்வையற்றவர்கள், மற்றவர்கள் துணையின்றி நடந்து செல்ல வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு ரோபோ நாயை உருவாக்கியுள்ளோம்.
இதன் கன்ட்ரோல் யூனிட் கைப்பிடி பகுதியை பார்வையற்றவர்கள் பிடித்துக் கொள்ள வேண்டும். ரோபோவின் 4 கால்களிலும் சக்கரங்கள் உள்ளன. சமதளம் மட்டுமின்றி மேடு, பள்ளங்கள், படிக்கட்டுகளில்கூட இந்த ரோபோ ஏறிச் செல்லும். அதற்கேற்ப முன் பக்கம், பின் பக்கம் மடியுமாறு கால்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எதிரே யாராவது வந்தாலோ, வேகத்தடை, கல் போன்றவை இருந்தாலோ குரைப்பது போல சத்தம் கொடுக்கும். தடைகளை கண்டுபிடிக்க ரோபோவின் முகப்பு மற்றும் கால் பகுதியில் சென்சார்கள், கமெராக்கள் உள்ளன. கன்ட்ரோல் யூனிட் கைப்பிடியில் உள்ள பட்டன்களை அழுத்தினால் எதிரே என்ன இருக்கிறது, வாகனங்கள் வருகிறதா என்பதை தெரிந்துகொள்ளலாம். கனிவான பெண் குரலில் இத்தகவல்களை ரோபோ நாய் தெரிவிக்கும்.
இறுதிகட்ட ஆய்வு முடிந்த பிறகு இது அறிமுகப்படுத்தப்படும். சொல்வதை புரிந்துகொள்ளும் திறன், ஜிபிஎஸ் உதவியுடன் தானாகவே ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அழைத்து செல்வது ஆகிய வசதிகளை சேர்ப்பது தொடர்பான ஆய்வுகளும் நடந்து வருகிறது.
8 Jan 2012
உங்களது மூளையின் திறனை மதிப்பாய்வு செய்வதற்கு தளங்கள்
உங்கள் மூளையின் சிந்திக்கும் ஆற்றல், நுண்ணறிவு, பிரச்சனைகளை தீர்க்கும் தன்மை போன்றவற்றை மதிப்பீடு செய்ய பல தளங்கள் உதவி புரிகின்றன. மேலும் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், மாணவர்களுக்கும் மற்றும் வேலைவாய்ப்பு தேடுவோருக்கான பரீட்சைக்கும் உதவியாக இந்த தளங்கள் அமைகிறது. உங்களின் தரத்துக்கு ஏற்ப பயிற்சிகளை தேர்ந்தெடுத்து கொள்ள முடியும்.
IQ TEST: 25 பக்கங்களில் பல்வேறுபட்ட வகை நிலைகளில் வினாக்கள் இந்த தளத்தில் உள்ளன. http://www.iqtest.com/
INTELLIGENCE TEST: இந்த தளத்தில் உங்கள் பிறந்த தேதி விபரங்களுடன் உங்கள் பாலினத்தினையும் குறிப்பிட்டுத் தொடங்க வேண்டும். http://www.intelligencetest.com/
FREE IQ TEST: இது ஓர் புதிர் தளமாகும். ஒவ்வொரு வினாக்களுக்கும் தரப்பட்ட 60 வினாடிகள் நேரத்தில் பதில் வழங்க வேண்டும். http://www.free-iqtest.net/
இரண்டாம் திருமணம் செய்து கொண்டதை அம்பலமாக்கிய Facebook!
முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட ஒருவர் பேஸ்புக்கால் வசமாக மாட்டிக் கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர் இரண்டாம் திருமணத்தின் போது எடுத்த படங்களை Facebookல் நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார். இதன் காரணமாக முதல் மனைவியிடம் மாட்டிக்கொண்டார்.
பிரித்தானியாவில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் இந்நபருடைய இரண்டாம் திருமணம் நடைபெற்றது. இத் திருமணம் கடந்த வருடம் ஜுன் 25 இல் இடம்பெற்றது. இப்படங்களை 3 மாதங்களுக்குப் பின்னர் Facebookல் கண்ட முதல் மனைவி Policeல் தொடர்புகொண்டு முறைப்படி புகார் தெரிவித்திருந்தார். தான் திருமணம் செய்யாதவர் என்று கூறியே அந்நபர் இரண்டாம் திருமணத்தைச் செய்திருந்தார். இதனால் இவருக்கு 16 வார சிறைத்தண்டனையும் 250 Pound அபராதமும் விதிக்கப்பட்டது
Facebook-ல் Group உருவாக்குவது எப்படி?
Facebookன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லக் காரணம் அதில் உள்ள பல வசதிகள் தான். அந்த வரிசையில் Facebookன் Group வசதி மிகவும் பயனுள்ள ஒரு வசதியாகும். நண்பர்களுக்குள் ஒரு குழு உருவாக்கிக் கொண்டு நீங்கள் விருப்பபட்டதை groupல் பகிரலாம். எப்படி Facebookல் group உருவாக்குவது என பார்ப்போம்.
Facebookல் Group உருவாக்குவது மிகவும் சுலபமான விஷயம் மொத்தமே 2 நிமிடங்கள் தான் ஆகும்.
- முதலில் http://www.facebook.com/login.php சென்று facebook தளத்தை open செய்து கொள்ளுங்கள்.
- ஒரு window open ஆகும். அதில் உள்ள Create Group என்ற பட்டனை அழுத்துங்கள்.
- அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல ஒரு Pop-up window open ஆகும். அதில் நீங்கள் ஆரம்பிக்கும் குழுமத்தின்(Group) விவரங்களை கொடுக்கவும்.

Group Name – குழுமத்தின் பெயர்
Members – இந்த பகுதியில் உங்களின் நண்பர்களை இந்த குழுமத்தில் உறுப்பினர்களாக ஆக்கலாம்.
Privacy
Open - இதை தேர்வு செய்தால் உங்களின் குழுமத்தையும், குழுமத்தில் உள்ள பதிவுகளையும் அனைவரும் பார்க்க முடியும். உறுப்பினர்களாக இல்லை என்றாலும் கூட இவைகளை பார்க்க முடியும்.
Closed - இதை தேர்வு செய்தால் அனைவரும் உங்கள் குழுமம் மற்றும் அதில் உள்ள உறுப்பினர்கள் ஆகியவற்றை பார்க்கலாம். ஆனால் குழுமத்தின் பதிவுகளை பார்க்க முடியாது. உங்கள் குழுமத்தில் உறுப்பினர் ஆனால் மட்டுமே இந்த பதிவுகளை பார்க்க முடியும்.
Secret- உறுப்பினர்கள் மட்டுமே இந்த குழுமத்தையும் குழுமத்தின் பதிவுகளையும் பார்க்க முடியும்.
இவைகளை உங்கள் வசதிக்கு ஏற்ப தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Create என்ற பட்டனை அழுத்தினால் உங்கள் குழுமம் தயாராகிவிடும். இனி அந்த குழுமத்தை உபயோகிக்க ஆரம்பியுங்கள்.
Contact lens மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்
கண்ணின் கருவிழியின் மீது அணியும் contact lens வழியாக இணையத்தை இணைத்து தகவல்களைப் பெறும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மற்றும் பின்லாந்தின் ஆல்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து தான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். கணணியை இயக்கி எந்தத் தகவலை வேண்டுமானாலும் திரட்டிவிடலாம். சிலர் எப்பொழுதும் மடிக்கணணியை சுமந்து கொண்டே சென்று கொண்டிருப்பார்கள். அந்த சுமையையும் குறைக்க உங்கள் கண்களில் contact lens பொருத்தி அதன் மூலம் இணைய இணைப்பை வழங்க முடியும் என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள contact lensல் இணைக்கப்படும் antenna வெளியிலிருந்து வரும் தகவல்களைத் திரட்டித் தருகிறது. சிப்பில் பதிவாகும் அந்தத் தகவல்கள் மெல்லிய LED திரையில் ஒளிபரப்பாகிறது. இந்த வசதியின் மூலம் மின்னஞ்சல் உள்ளிட்ட பல தகவல்களைப் படிக்கலாம். இந்த contact lens ஒருவருக்குப் பொருத்தி வெற்றிகரமாக இயக்கிக் காட்டியுள்ள விஞ்ஞானிகள் இதனால் கண்ணுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளனர். எனினும் கண்களுக்கு மிக அருகில் இருப்பதால் வாசகங்களைத் தெளிவாகப் படிக்க முடியவில்லை. இப்பிரச்னையை சரிசெய்ய தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
7 Jan 2012
சேற்றில் இருந்து மின்சாரம்
6 Jan 2012
Zone Alarm 2012
இலவச Firewall applications பரவலாகப் பயன்படுத்தப்படுவது Zone alarm firewall தொகுப்பாகும். இதன் புதிய பதிப்பு Zone Alarm 2012 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக இதனையும் இலவசமாக download செய்து பயன்படுத்தலாம். இதனை பதிவரக்கம் செய்ய இணைய தள முகவரி http://download.cnet.com/zonealarmfreefirwall/300010435_410039884.html. இந்தப் புதிய பதிப்பில் பழைய படுக்கை வரிசை பட்டன்களுக்குப் பதிலாக மூன்று பெரிய iconகளும், boxகளும் தரப் பட்டுள்ளன. முதல் icon computer பாதுகாப்பு குறித்த விஷயங்களைக் கையாள்கிறது. நடுவில் இருக்கும் icon internet தொடர்பு குறித்து settings அமைக்க உதவுகிறது. மூன்றாவது icon computer பயன்படுத்துபவரின் அடையாளம், தகவல்கள் குறித்து இயங்குகிறது.
இதனைப் பதிந்து கொள்ள 5 MB அளவிலான சிறிய programme download செய்து இயக்கினால் போதும். மற்ற Fileகள் Zone Alarmன் cloud computing முறையில் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டு அமைக்கப்படுகின்றன. இதுவரை zone alarm பயன்படுத்தாமல் windows 7 system பயன்படுத்துபவர்கள் இந்த புதிய பதிப்பினைப் பயன்படுத்தலாம். நிறைய வசதிகள் Windows 7 தொகுப் பிற்கெனவே அதனுடன் இணைந்து இயங்கும்படி தரப்பட்டுள்ளது.
Facebookல் Group உருவாக்குவது எப்படி?
Facebookன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லக் காரணம் அதில் உள்ள பல வசதிகள் தான். அந்த வரிசையில் Facebookன் Group வசதி மிகவும் பயனுள்ள ஒரு வசதியாகும். நண்பர்களுக்குள் ஒரு குழு உருவாக்கிக் கொண்டு நீங்கள் விருப்பபட்டதை groupல் பகிரலாம். எப்படி Facebookல் group உருவாக்குவது என பார்ப்போம்.
Facebookல் Group உருவாக்குவது மிகவும் சுலபமான விஷயம் மொத்தமே 2 நிமிடங்கள் தான் ஆகும்.
- முதலில் http://www.facebook.com/login.php சென்று facebook தளத்தை open செய்து கொள்ளுங்கள்.
- ஒரு window open ஆகும். அதில் உள்ள Create Group என்ற பட்டனை அழுத்துங்கள்.
- அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல ஒரு Pop-up window open ஆகும். அதில் நீங்கள் ஆரம்பிக்கும் குழுமத்தின்(Group) விவரங்களை கொடுக்கவும்.

Group Name – குழுமத்தின் பெயர்
Members – இந்த பகுதியில் உங்களின் நண்பர்களை இந்த குழுமத்தில் உறுப்பினர்களாக ஆக்கலாம்.
Privacy
Open - இதை தேர்வு செய்தால் உங்களின் குழுமத்தையும், குழுமத்தில் உள்ள பதிவுகளையும் அனைவரும் பார்க்க முடியும். உறுப்பினர்களாக இல்லை என்றாலும் கூட இவைகளை பார்க்க முடியும்.
Closed - இதை தேர்வு செய்தால் அனைவரும் உங்கள் குழுமம் மற்றும் அதில் உள்ள உறுப்பினர்கள் ஆகியவற்றை பார்க்கலாம். ஆனால் குழுமத்தின் பதிவுகளை பார்க்க முடியாது. உங்கள் குழுமத்தில் உறுப்பினர் ஆனால் மட்டுமே இந்த பதிவுகளை பார்க்க முடியும்.
Secret- உறுப்பினர்கள் மட்டுமே இந்த குழுமத்தையும் குழுமத்தின் பதிவுகளையும் பார்க்க முடியும்.
இவைகளை உங்கள் வசதிக்கு ஏற்ப தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Create என்ற பட்டனை அழுத்தினால் உங்கள் குழுமம் தயாராகிவிடும். இனி அந்த குழுமத்தை உபயோகிக்க ஆரம்பியுங்கள்.
Subscribe to:
Posts (Atom)